search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    • இளையான்குடி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள ஆத்திவயல் ஆதிருடையவர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவில் பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் மங்கள இசை முழங்க புனிதநீர் கடங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் ஆதிருடையவர் அய்யனார் சுவாமி மூலவர் விமானக் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விமானக் கலசத்திற்கு தீபாரதனை கட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன் மற்றும் ஆத்திவயல், புக்குளி, மொச்சியேந்தல், சிறுபுக்குளி சுமாதரப்பு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×