என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம்
- சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தி.மு.க ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலா ளரும், எம்.எல்.ஏ. வுமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நேர்மையாக செயல்படும் அரசு ஊழி யர்கள் அரசு அலுவல கத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர்.
தி.மு.க ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர். மக்களின் ஆதரவோடு, ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தோடு, எடப்பாடியாரின் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றார்.
ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வ மணி, ஸ்டிபன் அருள்சாமி, சேவிவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, சோனை ரவி, கோபி, ஜெக தீஸ்வரன், பாரதிராஜன், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகளிரணி வெண்ணிலா சசிகுமார், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலா ளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






