என் மலர்
சிவகங்கை
- வீட்டில் திருடியதாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார்.
சிவகங்கை
மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜன். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சங்கீதா குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் அவர் கணவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து முத்துராஜன் மற்றும் 3 பேர் சம்பவத்தன்று சங்கீதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீட்டை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்யப்ப ட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்-சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்குவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்வகை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப் பினரை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத் திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபார கடன், பெண்களுக்கான கடன், நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்த வராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப் படும்.
பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத் தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண் டும். ஒரு குழுவில் அதிக பட்சம் 20 உறுப்பினர் கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர் களுக்கு கடனுதவி வழங்கப் படுகிறது.
மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்ப திவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங் களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப் பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல் களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதி வாளர் அலுவலகம் மற்றும் கூட்டு றவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- திருப்பத்தூர் அருகே வாலிபர் ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- அந்த பகுதியில் கிடந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ேபாலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த பகுதியில் கிடந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.
இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திய போது அவர் சிவகங்கை மாவட்டம் இடையமேலூரை சேர்ந்த தினேஷ் என தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநாயகர் கோவில் முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது.
- மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தங்கமுத்து, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கோவிலில் இருந்த விநாயகர் சிற்பம் 1000 ஆண்டுகள் பழமையானது எனவும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிற்பம் 3 அடி உயரமும், 1 ½ அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் லளிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். தலையில் கரண்ட மகுடம் தரித்தும் அகன்ற 2 காதுகளுடன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பமானது நான்கு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் வலது கரத்தில் மழுவும், பின் இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் முறிந்த தந்தமும், முன் இடது கரத்தில் மோதகமும் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தும்பிக்கை மோதகத்தை எடுப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கே உரித்தான கலை நயத்தில் இந்த விநாயகர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் கோவில் முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. முன் மண்டபத்தூணில் 2 ஆண் சிலை ஆடை ஆபரணங்களுடன் எதிரெதிரே இரு கை கூப்பி வணங்கியபடி உள்ளது. அதில் ஒருவர் திருமலை நாயக்க மன்னராக இருக்கலாம். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர். இவர் கி.பி.1623-1659 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்துள்ளார். இவரது காலத்தில் தான் எந்த ஒரு கோவில் பணி செய்தாலும் அங்கு தனது உருவச்சிலையை இரு கை கூப்பி அந்த தெய்வத்தை வணங்கியபடி வைப்பது வழக்கம். இங்கும் அதுபோல் வணங்கியபடி சிலை உள்ளது. இந்த கோவிலின் முன் மண்டபம் அவரால் கட்டப்பட்டு இருக்கலாம். மற்றொருவர் அவரது பிரதானியாக இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
- ரூ. 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை
சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி பேசியதாவது:-
பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.அனைவருக்கும் வீடு, துாய்மை இந்தியா வீடுகளுக்கான கழிப்பறை, பொது கழிப்பறை, வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம், அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர், இலவச வங்கி கணக்கு, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி, முத்ரா கடன் திட்டம் , மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, இலவச உணவு தானியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மட்டும் 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சத்திய நாதன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட பார்வையாளர் சண்முகராஜா, மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்குமார், சுகனேசுவரி, மாவட்ட செயலாளர் கந்த சாமி, சங்கரசுப்பிரமணியன், நகர தலைவர் உதயா, மண்டல தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, லோகுமுனியாண்டி, விவசாய அணி பொது செயலாளர் சரவணன், ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் நாகேசுவரன், ஒன்றிய பொது செயலாளர் பரமசிவம் உள்பட நிர்வாகி கள் பங்கேற்றனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்
சிவகங்கை
திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாஷ் மற்றும் போலீசார் சைனாபுரம், டி.புதூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டி கடையில் விற்பனை செய்த சைனாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (46), டி.புதூர் பகுதியை சேர்ந்த மெஹாராஜிபேகம் (38) ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரிய கோட்டை புதைகுழி பகுதி அருகே பெரியகோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், புயல் ராமன், நேதாஜி, செல்வம், அழகன் ஆகிய 5பேர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.6½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
- பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவு றுத்தினார். தொடர்ந்து 14 பயனாளி களுக்கு ரூ6.50லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிக ளையும், அதன் பயன்களையும் கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கோட்டீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெற செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இளையாத்தங்குடி உள்வட்டம் தெற்கு இளையாத்தங்குடி குரூப், விராமதி கிராமத்தில், நாளை 7-ந் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகராட்சி தலைவர் ெதாடங்கி வைத்தார்.
- இந்த கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.
மானாமதுரை
மானாமதுரையில் தமிழக அரசின் தூய்மை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி அலுவலகம் அருகே வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர் மன்றத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நகரங்களில் தூய்மை இயக்கத்தின் சார்பில் மானாமதுரை நகராட்சியில் பல இடங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இக்கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.
- சாகிர் உசேன் கல்லூரியில் புதிய முதல்வர் பதவியேற்றார்.
- முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார். இதையடுத்து வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லாஹ் கான் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் மற்றும் உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலையில் ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் புதிய முதல்வர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
கல்லூரி துணைமுதல்வர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- அதிக மதிப்பெண் பெற்ற கிராமபுற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே குன்னங்கோட்டை, கீழப்பங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னங்கோட்டை கள்ளர் பேரவை அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் எடுத்த காளீஸ்வரன் என்ற மாணவனுக்கும், 2-வது மதிப்பெண் பெற்ற திருவிளங்கை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவனுக்கும், மாலைகண்டனைச் சேர்ந்த தமிழரசனுக்கும், தேவபட்டு சசிகலா என்ற மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கபட்டது.
இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- சேர்மன் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் பேரூர்களில் அ.தி.மு.க. மகளிர் அணி, மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறைகளுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடந்தன. முகாமிற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் இப்ராஹிம்சா, திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, துணைச் செயலாளர் சின்னையா, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்களான சபா ராஜாமுகமது, ஆசிப் இக்பால், எம்ஜிஆர் மன்ற செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைச் செயலாளர் துலாவூர் பார்த்திபன், எஸ்.புதூர் சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் கருப்பையா, சிங்கம்புணரி ஒன்றிய சேர்மன் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






