என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அதிகாலை முதல் பெரியகாரை கிராமத்தை சுற்றியுள்ள பணங்காட்டான்வயல், கள்ளிக்குடி, கோட்டவயல், நயினார்வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, வாளி, கூடையுடன் வந்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கிராமத்து முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளைக்கொடி காட்டிய தும் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கி னர்.

    இதில் விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ அளவிலும் மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுபோன்ற மீன் பிடி திருவிழாக்களால் விவசா யம் செழித்து கிராம மக்க ளின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.

    • கருப்பர் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
    • அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் சூரக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நொண்டி கருப்பர் கோவிலில் கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, பூமி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, கணபதி பூஜை மற்றும் ஹோமங்களும் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், சிங்கம்புணரி நகர அவைத்தலைவர் காந்திமதி சிவா, ஆனந்த கிருஷ்ணன், சிங்கப்பூர் வாழ் எம்.எம்.எம் கன்ஸ்சக்சன் உரிமையாளர் மலைச்சாமி தமிழ்மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் 16 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
    • வேட்புமனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4 நக ராட்சிகளின் வார்டு உறுப்பி னர்கள் 117 நபர்கள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 167 நபர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த வாக்காளர்களில் 9 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்களும், 3 நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்களும் தேர்ந்தெடுக்கப் படுவர்.

    வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று (10-ந்தேதி) வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 9 வேட்பு மனுக்களும், பேரூ ராட்சி மற்றும் நகராட்சி உறுப்பினர்களிடமிருந்து இருந்து 6 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான மனுக்களை 14-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 14-ந் தேதிக்குள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம்.

    வருகிற 23-ந்தேதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதிதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்கள் 28-ந்தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,78,84 வரை கிடைத்தது.
    • வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி ஆகியோர் வழக்குகளை விசாரித்தார்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2 குற்ற வியல் வழக்குகள், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், அதே போல் 19 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் 16 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 20 வங்கிக்கடன் வழக்குகள் என மொத்தம் 122 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.86,28,346 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 47 வழக்கு தீர்வு காணப்பட்டு ரூ.56,50,500 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • சுந்தர விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் சுந்தரவிநாயகர் உள்ளது. இந்த கோவிலில் 19-ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், சிறப்பு கணபதி ஹோமம், மற்றும் கும்ப கலசங்கள் உள்ள புனித நீரால் சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.

    இதை தொடர்ந்து பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தாயமங்கலம் ரோட்டில் உள்ள மயூரநாதர் கோவிலில் பாம்பன்சுவாமி குருபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ெதாடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயராமன், அரசு பஸ் டிரைவர். அவர் ஓட்டி சென்ற பஸ் கீழநெட்டூர் கிராமத்தின் வழியாக சென்ற போது, அதே ஊரை சேர்ந்த காளிமுத்து, அவரது மகன் அஜித்குமார் இருவரும் அவர்களின் வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தி ஏறினர். இதனை ஜெயராமன் கண்டித்தார். அப்போது இருவரும் ஜெயராமனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வீடு புகுந்து பணம் திருடப்பட்டிருந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கேப்பார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தமேரி. இவர் வெளிேய சென்று திரும்பி வந்த போது முன்கதவு திறந்து கிடந்தது. கதவில் இருந்த பூட்டு உடைக்ககப்பட்டி ருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.19 ஆயிரம் காணாமல் போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் முன்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வசந்தமேரி மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நாடு வடக்கு தெரு சேகரம் வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயினார் பட்டி கிராமத்தில் உள்ளது வீரய்யா சுவாமி பட்டவர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது.

    தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்து தீபாராதனை, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியாத்தூர், வாணியம்பட்டி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், யகருங்குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயா அப்புச்சி வகையறா பங்காளிகள், நயினார் பட்டி கிராமத்தார்கள் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து கணவன்-மனைவி காயமடைந்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை நேரு பஜார் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி செண்பகதேவி. இருவரும் மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் மாடு குறுக்கே வந்தது. அப்போது இருசக்கர வாகனம் மாடு மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இளையான்குடி தகியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சுகாசினி. இருவரும் காரில் கால் குளம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரோட்டோ ரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

    இதில் சுகாசினி படுகாய மடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வருகிற 23-ந்தேதி திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என்று கலெக்டர் கூறினார்.
    • உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4- நகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 117 நபர்கள், 11- பேரூராட்சிகளின் 167 வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் ஆவர்.

    இந்த வாக்காளர்களில் 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிலிருந்து 9 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்களிக்கும் 284 பேர்களிலிருந்து 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    இதுகுறித்து தொடர்பு டைய உள்ளாட்சி அமைப்பு அலுவல கங்களான மாவட்ட ஊராட்சி அலுலவகம், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பேரூராட்சி அலுவல கங்களின் அறிவிப்பு பலகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

    வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிவாளரால் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 10-ந் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனு படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனைக்காக வருகிற 12-ந் தேதி எடுத்துக் கொள்ளப்படும்.

    வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள 14-ந் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் போட்டி இருக்கு மானால் வாக்குப்பதிவு 23-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க ஒரு வாக்குச்சாவடியும், மேலும், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் ஒரு வாக்குச்சாவடி என 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 23-ந் தேதி அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதிதாக தேர்ந்தெ டுக்கப்படும் சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள், 28-ந் தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்தடை பற்றி தகவல் தெரிவிக்க மின்பொறியாளர்கள் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி அரளிக் கோட்டை, ஜமீன்தார்பட்டி, வலையபட்டி, ஏரியூர், மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, பெருங்குடி, நாமனூர், ஒக்கூர், பர்மா காலனி, காளையார்மங்கலம் பகுதியினர் உதவிமின் பொறியாளர் மதகுபட்டி பகிர்மானம் 9445853073 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    தமறாக்கி, குமாரபட்டி, கண்டாங்கி பட்டி, புதுப் பட்டி, இடையமேலூர், மங்காம்பட்டி, கோமாளி பட்டி, தேவன்கோட்டை, சிவந்திபட்டி பகுதியினர் உதவி மின்பொறியாளர் மலம்பட்டி பகிர்மானம் 9445853075 என்ற எண்ணிலும், சிவகங்கை நகர், ரோஸ்நகர், முத்துநகர், ராகினிபட்டி, சமத்துவபுரம், அரசனேரி, கிழமேடு பகுதியினர் சிவகங்கை நகர் மின்பகிர்மானம் உதவி மின்பொறியாளர் 9445853076 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    முளக்குளம், சருக னேந்தல், வேம்பத்தூர், பச்சேரி, கருங்குளம், படமாத்தூர், வாணியங்குடி, வீரவலசை, பனையூர், மானாகுடி, அரசனி பகுதியினர் ஊரகம் மின் பொறியாளர் 9445853077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட பகுதியினர் மேலும் சந்தேகங்களுக்கு சிவகங்கை மின்பகிர்மானம் உதவி செயற்பொறியாளர் 9445853074 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    மாந்தாளி, சீகூரணி, உசிலங்குளம், சருகனி, காட்டாத்தி, கல்லுவழி, குரந்தனி, கோபாலபுரம் பகுதியினர் காளையார் கோவில் உதவி மின்பொறி யாளர் 94458 53079 என்ற எண்ணையும், சோழபுரம், நாலுகோட்டை, விட்டனேரி, ஒருபோக்கி, செங்குளம், ஆலங்குளம், சூரக்குளம் பகுதியினர் நாட்ட ரசன்கோட்டை உதவி மின்பொறியாளர் 94458 53081 என்ற எண்ணையும், அஞ்சாம் பட்டி, மாராத்தூர், நந்தனூர், புலிக்கண்மாய், ஆண்டுரணி, சிறுவேலங்குடி பகுதியினர் மறவமங்கலம் உதவி மின்பொறியாளர் 94458 53082 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    மேற்கண்ட பகுதியினர் தங்கள் சந்தேகங்களுக்கு உதவி செயற்பொறியாளர் காளையார்கோவில் பகிர்மானம் 9445853078 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட அனைத்து மின்பகிர்மான எல்லைக் குட்பட்ட பகுதி யினர் சிவகங்கை மின்பகிர் மானம் செயற்பொறியாளர் 94458 53080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    • கூடுதல் வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தானிப்பட்டி வள்ளல் கருப்பையா-சிவகாமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டித்தரப்பட்டது. இதனை பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர்

    கரு.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் ராமேஸ்வரன், கரு.சிதம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×