என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election of Planning"

    • வருகிற 23-ந்தேதி திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என்று கலெக்டர் கூறினார்.
    • உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4- நகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 117 நபர்கள், 11- பேரூராட்சிகளின் 167 வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் ஆவர்.

    இந்த வாக்காளர்களில் 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிலிருந்து 9 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்களிக்கும் 284 பேர்களிலிருந்து 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    இதுகுறித்து தொடர்பு டைய உள்ளாட்சி அமைப்பு அலுவல கங்களான மாவட்ட ஊராட்சி அலுலவகம், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பேரூராட்சி அலுவல கங்களின் அறிவிப்பு பலகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

    வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிவாளரால் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 10-ந் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனு படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனைக்காக வருகிற 12-ந் தேதி எடுத்துக் கொள்ளப்படும்.

    வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள 14-ந் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் போட்டி இருக்கு மானால் வாக்குப்பதிவு 23-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க ஒரு வாக்குச்சாவடியும், மேலும், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் ஒரு வாக்குச்சாவடி என 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 23-ந் தேதி அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதிதாக தேர்ந்தெ டுக்கப்படும் சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள், 28-ந் தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×