என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது ரஸ்தா. இங்குள்ள காதி நகரைச் சேர்ந்தவர் ஜெய ராஜ் (வயது60). ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. இவரது மனைவி காணிக்கை மேரி.
இவர்களது 3 மகன்களும் பெங்களூர், ராமேசுவரம் பகுதிகளில் வசித்து வருகின்றனர். கடந்த 26-ந்தேதி ராமேசுவரத்தில் இருக்கும் மகன் வீட்டிற்கு ஜெயராஜூம், காணிக்கைமேரியும் சென்றனர்.
இதனால் ரஸ்தாவில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டிக் கிடந்தது. இதனை அறிந்த மர்ம மனிதர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஒவ்வொரு அறைக்கும் சென்று பீரோ, சூட்கேஸ் ஆகியவற்றை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு ஜெயராஜ் மனைவியுடன் வீடு திரும்பினார். வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சோமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 140 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை சாக்கவயலை சேர்ந்தவர் சேவுகன் (வயது80). இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக மகன் வீராசாமி வீட்டில் இருந்தார்.
வீராசாமியின் மனைவி மங்கலம் மற்றும் குழந்தைகள் நேற்று வெளியூர் சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சேவுகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சேவுகனை அவரது மகன் வீராசாமிதான் கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம்? என போலீசார் சந்தேகப்பட்டனர். இதனை தொடர்ந்து . தலைமறைவாக உள்ள அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மறைந்திருந்த வீராசாமியை போலீசார் கைது செய்தனர். வீட்டில் தந்தையை கவனிக்க ஆள் இல்லாமல் இருந்ததால் குடிபோதையில் சேவுகன் கழுத்தை அறுத்து வீராசாமி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது 51). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவர், நேற்று வீட்டின் மொட்டை மாடியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
மனைவி பூமதி, 2 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்த அவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தது. பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்குள் புகுந்து கொலை செய்த கும்பல் யார்? வீட்டில் இருப்பவர்கள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண், வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர், மணிமுத்துவின் மனைவி பூமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இது பற்றி போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட மணிமுத்துவின் சொந்த ஊர் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் ஆகும். அங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ராமேசுவரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் குறி சொல்வதற்காக வந்துள்ளார்.
அவருடன் மணிமுத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டது. வேல்முருகன் குறி சொல்வதோடு, சில பரிகார பூஜைகளையும் செய்து வந்துள்ளார். இதனால் பலரும் அவரை சாமியார் என அழைத்தனர். அவரை மனைவி பூமதிக்கும், மணிமுத்து அறிமுகம் செய்தார்.
அதன் பின்னர் மணிமுத்து வெளிநாட்டு வேலைக்குச் சென்று விட்டார். இந்த சூழ்நிலையில் வேல்முருகனை அடிக்கடி பூமதி சந்தித்துள்ளார்.
பூஜை, பரிகாரம் என பழகிய அவர்களுக்குள் நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கானாடுகாத்தானில் இருந்து பூமதி குடும்பம், காரைக்குடிக்கு மாறியது. அங்கு தனி வீடு என்பதால் சாமியார் வேல்முருகனுடன் தொடர்பு அதிகமானது.
இந்த விவகாரம் மணிமுத்துவுக்கு தெரியவந்ததும், பூமதியை கண்டித்தார். மேலும் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய அவர், மனைவியை சாமியாருடனான பழக்கத்தை கைவிடும்படி கூறினார்.
இது பூமதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கள்ளக்காதல் விவகாரம், கணவரை தீர்த்துக்கட்டும் அளவிற்கு செல்ல, சாமியார் வேல்முருகனுடன் ஆலோசித்தார்.
அதன்படி நேற்று அதிகாலை 3 மணிக்கே சாமியார் வேல்முருகன் மயானத்தில் உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் பிரகாஷ்குமார் ஆகியோருடன் ராமேசுவரத்தில் இருந்து காரில் காரைக்குடி வந்துள்ளார். அவர்கள் வந்ததும் பூமதி, வீட்டுக் கதவை திறந்து விட்டுள்ளார்.
சாமியார் வேல்முருகன் உள்பட 3 பேரும் மொட்டை மாடிக்குச் சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த மணிமுத்து கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். அவர் சத்தம் போடாமல் இருக்க, முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி உள்ளனர்.
பின்னர் 3 பேரும் அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டனர். முன்னதாக ராமநாதபுரம் அல்லக்கண்மாய் பகுதியில், சாமியார் வேல்முருகன் நிர்வாண பூஜை நடத்தி விட்டு வந்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பூமதி, சாமியார் வேல்முருகன் மற்றும் பிரகாசை போலீசார் கைது செய்தனர். குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 2 மணி முதல் பூமதி செல்போனில் ஒரே நம்பருக்கு அடிக்கடி பேசியதை வைத்து தான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.
காரைக்குடி:
காரைக்குடி தந்தை பெரியார் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது 51). இவரது மனைவி பூமதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மணிமுத்து, கத்தார் நாட்டில் வெல்டராக பணியாற்றி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெளி நாட்டில் இருந்து மணிமுத்து ஊர் திரும்பினார்.
நேற்று இரவு அவர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். நள்ளிரவில் புழுக்கமாக இருந்ததால், மணிமுத்து மொட்டை மாடிக்கு சென்று படுத்துள்ளார்.
இன்று காலை கணவருக்கு காபி கொடுப்பதற்காக பூமதி மொட்டை மாடிக்குச் சென்றார். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மணி முத்து பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு பூமதி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு அருண் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
மணிமுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்தவர் கொலை செய்யப்பட்டது எப்படி? கொலையாளிகள் யார்? என்பது மர்மமாக உள்ளது.
காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி:
கீழடி அகழாய்வு இடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.
இவை தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. எனவே கீழடி அகழாய்வு இடத்தை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிக்கு சென்று அங்கு அகழாய்வு நடைபெற்ற இடத்தையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.பி.க்கள் கனிமொழி, வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் டெல்லி சென்று தொல்லியில் துறை இணை அமைச்சரை சந்தித்து கீழடி பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை கீழடியில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளது என்பது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.
இதுவரை 5 கட்டமாக நடந்துள்ள இந்த பணிகள் மூலம் பண்டைய கால தமிழர் நாகரீகம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. குறிப்பாக 4, 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின்போது இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன.
இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இதுவரை 13,638 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
இவற்றை ஆய்வு செய்ததில் 2,600 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிந்து சமவெளி நாகரிகத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் கீழடி நகர நாகரிகம் விளங்கியிருக்கலாம் என தெரிகிறது.
கீழடியில் கிடைத்த பழமையான தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கீழடியில் கிடைத்த எலும்புகள் மற்றும் தொன்மையான பொருட்களின் காலம், தன்மை குறித்து ஆய்வு செய்ய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் தமிழக தொல்லியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து 6-வது கட்டமாக ஆய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முறை கீழடி அருகில் உள்ள மணலூர் கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சி பணி நடைபெறும் என தெரிகிறது.
கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிகம் குறித்த வியக்கத்தக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக கீழடி மற்றும் அங்கு கிடைத்த பொருட்களை பொதுமக்கள் காண ஆர்வத்துடன் வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்களின் வருகை கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது.

டிக்-டாக் செயலி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட வினிதாவுக்கு, அதன்மூலம் திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் ‘டிக்-டாக்’ செயலி மூலம் பாடல்களுக்கு ஏற்ப நடித்து, ஒருவருக்கு ஒருவர் அனுப்பியும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.
இது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு, வினிதாவை அவரது தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் ஆரோக்கிய லியோ. சமீபத்தில் அங்கிருந்து வினிதா காணாமல் போனார். டிக்-டாக் தோழியுடன் அவர் மாயமானதாகவும், தாய் வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்றதாகவும் புகார் கூறப்பட்டது. இதுபற்றி திருவேகம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வினிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான வினிதா நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆஜரானார். அவரிடம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
வினிதா மாயமானது குறித்து திருவேகம்புத்தூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கிருந்து போலீசார் வந்து வினிதாவை அழைத்து சென்றனர்.
முன்னதாக வினிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமணத்தின்போது எனக்கு வழங்கிய நகைகளை அடகு வைத்துதான் எனது கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்தேன். திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது. இது என் கணவருக்கும் தெரியும். இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்த எனது கணவர் கடந்த 18-ந்தேதி திடீரென ஊருக்கு வந்தார். என்னை அவர் சந்தேகப்பட்டு அடித்தார். இதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன்.
இந்நிலையில் டி.வி.யில் நான் நகையுடன் டிக்-டாக் தோழியுடன் மாயமானதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்த நான் எனது தோழி சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர் போலீசில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன். நான் வீட்டில் இருந்து 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் பிரேஸ் லெட்டுடன் மட்டும்தான் சென்றேன். மற்றபடி எந்த நகையையும் எடுத்து செல்லவில்லை. தற்போது வெளியான தவறான செய்திகளால் எனது டிக்-டாக் தோழிக்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான், நான் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சானாவூரணியைச் சேர்ந்தவர் ஆரோக்கியலியோ. இவருக்கும் கடம்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த வினிதா (வயது19) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருணம் நடந்தது.
அதன் பிறகு கணவன்- மனைவி காளையார் கோவிலில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். திருமணமான 45 நாளில் வேலைக்காக ஆரோக்கிய லியோ மனைவியை தனியாக விட்டுவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டார்.
தனிமையில் இருந்த வினிதா இணையத்தில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். டிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்து பதிவிடும் பழக்கம் அவருக்கு இருந்தது.
டிக்-டாக் செயலி மூலம் திருவாதவூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டிக்-டாக் செயலியில் இணைந்து வீடியோ வெளியிட்டு வந்தனர்.
அவர்களது நட்பு எல்லை மீறவே அபி பரிசு பொருட்களை வினிதாவுக்கு அனுப்பி உள்ளார். இதன் உச்சக்கட்டமாக வினிதா தனது தோள்பட்டையில் அபியின் படத்தை ‘டாட்டூ‘ செய்து பெயரையும் பச்சை குத்தி இருந்தார்.
இதையறிந்த சிங்கப்பூரில் இருக்கும் கணவர் ஆரோக்கிய லியோ மனைவியை செல்போனில் கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லியோ சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
வீட்டில் இந்த பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதற்கு வினிதா உரிய பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து ஆரோக்கிய லியோ மனைவி வினிதாவை கடம்பாக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார்.
இதனிடையே சம்பவத்தன்று வீட்டில் இருந்த வினிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது. எனவே நகைகளை எடுத்துக் கொண்டு வினிதா சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நகைகளுடன் மாயமான வினிதா திருவாதவூரில் உள்ள தனது தோழி அபியுடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பழமையான தமிழர் நாகரிகத்தின் தொல்பொருட்கள் கண்டெக்கப்பட்டன. கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு 3 கட்டமாக அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் பூமிக்கடியில் புதையுண்டு இருந்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 7,818 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது. 4-வது கட்ட அகழாய்வில் 5,820 தொல் பொருட்கள் கிடைத்தன.
இதையடுத்து தமிழர் நாகரீகத்தை மேலும் அறிய கீழடியில் விரிவான அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 5-வது கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்த ஆய்வின் மூலம் தமிழர் நாகரீகத்தின் பழமை குறித்து வியத்தகு தகவல்கள் தெரிய வந்தன.
கீழடியில் முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.
இதில் இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன.
இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்தன.
இதனை ஆய்வு செய்து 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை உலகில் சிந்து சமவெளி நாகரீகம் பழமையானது என கருதப்பட்டு வந்த நிலையில் கீழடியில் கிடைத்த பொருட்கள் அந்த கருத்தை மாற்றியுள்ளது. கீழடி ஆய்வின் மூலம் உலகின் மூத்தக்குடி தமிழ்க்குடி என தெரியவந்துள்ளது.
சிந்து சமவெளி நாகரீகத்தை முந்திய அல்லது அதற்கு நிகரான நாகரீகத்தை கொண்டதாக கீழடி நகர நாகரீகம் விளங்கி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது நடக்கும் 5-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து 6-வது கட்ட அகழாய்வு பணியை மேற்கொள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த முறை கீழடியை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுவரை நடத்த கீழடி ஆய்வுகளின் முடிவுகள் வெளிவந்ததை தொடர்ந்து 6-ம் கட்ட அகழாய்வு பணி மீதான ஆர்வம் தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன். இவர் கடந்த மே மாதம் 26-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆவரங்காட்டையை சேர்ந்த தங்கமணி (வயது 42) சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் கடந்த 18-ந் தேதியன்று தன்னுடைய நண்பர் கணேசுடன் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை மரக்கடை வீதியில் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர்கள், அவர்களை துரத்தினர்.
அப்போது உயிர் தப்புவதற்காக 2 பேரும் அருகில் உள்ள ஒரு அரசு வங்கிக்குள் புகுந்தனர். ஆனால் அந்த கும்பல் விடாமல் இருவரையும் துரத்தி சென்று வங்கிக்குள் புகுந்து வெட்டினர். இதைப்பார்த்த வங்கி காவலாளி செல்லநேரு, துப்பாக்கியால் சுட்டு அந்த கும்பலை விரட்டியதால் தங்கமணி, கணேஷ் உயிர்தப்பினர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் காயம் அடைந்த நிலையில், மற்றவர்கள் தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த கும்பலை போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊமைத்துரை (57), பூமிநாதன் (38), மச்சம் (60), முருகன் (44), சலுப்பனோடையை சேர்ந்த தங்கராஜ்(40), மச்சக்காளை (49), பிச்சைப்பிள்ளையேந்தலைச் சேர்ந்த முத்துசெல்வம் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.






