என் மலர்
சிவகங்கை
- திருப்பத்தூரில் மாலை நேர உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.
- வேளாண் அலுவலர் காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயன் பெறுவதற்காக இந்த உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை செயல்பட்டு வருகின்றன. உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் சரக்கு கட்டணம் ஏதுமின்றி உழவர் சந்தைக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் தங்களது விளைநிலங்களில் இருந்து விளைந்த பொருட்களை கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றர்.
மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் உழவர் சந்தை மாலை நேர உழவர் சந்தையாக மாற்றப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தையில் களத்தி அய்யனார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பால விநாயகர் மகளிர் சுய உதவி குழு, பண்ணை மகளிர் சுய உதவி குழுவினர் கடை அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு பாரம்பரிய அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணெய், சிறு தானியம் மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நாட்டுக்கோழி முட்டை, காளான் வத்தல், வடகம் மற்றும் மூலிகை பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
உழவர் சந்தை திறப்பு விழாவில் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை நேர உழவர் சந்தைக்கு நுகர்வோர்கள் அனைவரும் வருகை புரிந்து பயன்பெறுமாறு வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுரேஷ் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் வணிகம் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை வகித்தார்.
வேளாண் அலுவலர் காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார். வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி, புவனேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர்கள் காந்தி, ராகவன், காஜா, நாகராஜ், ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
- துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகளும் யாக பூஜையில் கலந்து கொண்டு பேசினார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புரவி திடலில் தமிழ் வேத ஆகம முறையில் வட்டார மக்கள் நல வேள்வி மற்றும் பூசாரி (அர்ச்சகர்) பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
இதில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சேலம் சிம்மம் சத்யபாமா அம்மையார் தலைமையில் நடைபெற்ற யாக வேள்வியில் பங்கேற்று 100 பேருக்கு அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசினார். துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகளும் யாக பூஜையில் கலந்து கொண்டு பேசினார்.
பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராமேசுவரன், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சாந்தி சோமசுந்தரம், சங்கம் பாண்டியன், விஜயசேகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி கோவில் அறங்காவலர் ஓம் பிரகாஷ், புதுப்பட்டி அகத்தீஸ்வரர் ஆலய அறங்காவலர் பாண்டி , சத்தியபாமா அறக்கட்டளை நிர்வாகிகள், புதுப்பட்டி துரைப்பாண்டி, வேல்முருகன், மதி வதனன், திருப்பத்தூர் சித்தர் சிவரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- விருதுநகர் மாவட்டம், முகவூரை சேர்ந்தவர் அய்யங்காளை.
- மின்வேலியில் சிக்கி தந்தை-2 மகன்கள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மானாமதுரை:
விருதுநகர் மாவட்டம், முகவூரை சேர்ந்தவர் அய்யங்காளை. இவரது மகன்கள் அஜீத், சுதந்திரபாண்டி.
ராணுவ வீரரான அஜீத்துக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதையடுத்து அஜீத் குழந்தையை பார்ப்பதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அய்யங்காளை, தனது 2 மகன்களுடன் அருகில் உள்ள திருப்பாச்சேத்தி மாரநாடு காட்டுப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் முயல்பிடிக்க சென்றபோது அங்கு போட்டிருந்த மின்வேலியில் அடுத்தடுத்து 3 பேரும் சிச்கினர்.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் அய்யங்காளை, அஜீத், சுதந்திரபாண்டி ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாச்சேத்தி போலீசார் சம்பவ இடம் சென்று 3 பேரின் உடல்களை மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்த சுதந்திரபாண்டி அண்மையில் நடந்த போலீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்வேலியில் சிக்கி தந்தை-2 மகன்கள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று உள்ளனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முத்துமாரி அம்மனுக்கு காப்பு கட்டி விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான கோவில் கரகம் எடுப்பு பாரம்பரிய முறைப்படி இரு சமூக மக்களிடையே தலா ஒரு சீட்டு அம்மன் சன்னதியில் குலுக்கி போட்டு யார் பெயர் வருகிறதோ, அந்த சமூக மக்கள் கரகம் எடுப்பது வழக்கம்.
ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று உள்ளனர். இந்த நிலையில் மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடி மாற்று உத்தரவு பெற்று உள்ளதாகவும், நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வட்டாட்சியர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் கரகம் எடுத்து திருவிழா நல்ல முறையில் நடக்கவும், தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கவும் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று மாலை கோவில் வாசலில் வட்டாட்சியர், அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இரு தரப்பு மக்களிடையே தற்போது உள்ள நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் கரகம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஆனால் தற்போது நீதிமன்ற ஆணை பெற்ற தரப்பினர், மற்றொரு தரப்பினர் கரகத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் வெளியேற்றினர். இதில் ஒரு தரப்பினர் கோவில் முன்பு அமர்ந்து இன்று பெற்றுள்ள உத்தரவுபடி அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும். அதுவரை ஒரு தரப்பினர் கரகம் எடுக்க அனுமதிக்க கூடாது என்று கூறினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
- சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
- இதற்கான சிறப்பு முகாம்கள் 2-ந் தேதி தொடங்குகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவி த்திறனற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை ஆலிம்கோ என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த சிறப்பு முகாமானது கீழ்கண்டவாறு, வட்டாரந்தோறும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. 2-ந் தேதி திருப்பத்தூரிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும், 4-ந் தேதி மானாமதுரை யிலும், 5-ந் தேதி திருப்புவ னத்திலும், 6-ந் தேதி இளையான்குடியிலும், 10-ந் தேதி தேவகோட்டையிலும், 11-ந் தேதி கண்ணங்கு டியிலும், 12-ந் தேதி சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கையிலும் நடைபெற உள்ளது.
இதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2, ஆதார் அட்டை அல்லது வயதினை உறுதி செய்யும் ஏதாவது அங்கிகரிக்கப்பட்ட அடையாள சான்று மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் வழங்கிய வருமானச்சான்று அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான ரேசன் கார்டு அல்லது மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை அல்லது இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, தேசிய சமூகநல உதவித்திட்ட அடையாள அட்டை அல்லது வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை அல்லது மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மிகாமல் வருவாய்த்துறை அலுவலர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட வருமானச்சான்று மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாம் நாட்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டமுறையிலான எடைக்கற்களை வணிகர்கள் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்து.
சிவகங்கை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகளை மீறுவதாக பெறப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்து.
இந்த ஆய்வின்போது 19 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகள்-2011ன் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 4 நிறுவனங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்களில் அதிகபட்ச சில்லரை விலை தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு மாதம், வருடம், நுகர்வோர் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் இல்லாத காரணத்தினால், நிறுவன உரிமையாளர்கள் மீது குற்ற இசைவுத்தீர்வு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
எனவே, கடைநிறு வனங்களில் விற்கப்படும் பொட்டலப்பொருட்களில் மேற்கண்ட விவரங்களுடன் விற்பனை செய்யுமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், சட்டமுறை எடையளவுகள் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்டமுறை எடையளவுகள் (அமலாக்கம்) விதிகள் 2011-ன்படி, வணிகர்களால் பயன்படுத்தப்படும் மின்னனு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும் மற்றும் பிற மேசை தராசுகள், விட்டத் தராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை 2 வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து, அரசு முத்திரையிட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு முத்திரையிடாமல் வணிகர்கள் எடையளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சிவகங்கையில் 7 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
- பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது 7 பயனாளிகளுக்கு ரூ.9.2 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:-
கூட்டுறவு கடன் சங்க பணியாயாளர்கள் நடப்பாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கினை எய்திட முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியின் போது பொதுமக்களிடம் கனிவாகவும், முறையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
ஒவ்வொரு திட்டங்களின் வாரியாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கால அளவு, விவசாயிகளின் பயிர்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றை முறையாக பராமரித்து உயர்அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள, தேவையுள்ள பயனாளிகளுக்கு முழு அளவில் சென்றடைய பணி யாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்.
எனவே தன்னலமற்ற பணி செய்து அரசின் திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு சென்றடைய சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, மேலாண்மை இணை இயக்குநா; ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், துணைப்பதிவாளர்கள் வெங்கட்லட்சுமி, சரவணன், கூட்டுறவு கடன் சங்க சார்பதிவாளர் மூகாம்பிகை உட்பட சங்கச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது, 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன் பேசும்போது, ஒன்றிய குழு கூட்டத்திற்கு ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. எனவே அந்த துறை சார்ந்த நலத்திட்டங்கள் என்ன? அரசு அறிவித்த திட்டங்கள் எவை? என்று எங்களுக்கு தெரியாததால் எங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவரின் கேள்விக்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜா, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை இனிவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என கூறினார்.
முடிவில் மேலாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
- மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கி பலியான மாணவர் குடும்பத்துக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.
- மற்றொரு மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சீனிமடை கிராமத்தை சேர்ந்த மருது பாண்டி என்பவர் மகன் மனோஜ் (வயது 13).இவர் கொம்புகாரனேந்தல் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.இதே பள்ளியில் மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பரது மகன் விக்னேஸ்வரன் (15) பிளஸ்-1 படித்து வந்தார் .
நேற்று மனோஜ், விக்னேஸ்வரன் உள்பட சில மாணவர்கள் பள்ளி மதிய உணவு இடைவேளை நேரத்தில் பள்ளிக்கு வெளியே சென்று ஒரு நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்தனர் .
இந்த மரத்தை தொட்டு மின் கம்பி சென்றது. இதை கவனிக்காத மனோஜ், விக்னேஸ்வரன் நாவல் பழங்களை பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தின் ஒரு கிளை முறிந்து மின் கம்பி மீது விழுந்தது.
அப்போது மனோஜ், விக்னேஷ்வரன் மீது மின்கம்பி விழுந்து மின்சாரம் பாய்ந்தது.இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விக்னேஸ்வரன் படுகாயம் அடைந்தார்.
இதனை கண்ட பொது மக்கள் விக்னேஸ்வரனை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகங்கை கலெக்டர் மதுசூதன ரெட்டி மற்றும் டி.எஸ்.பி. கண்ணன் ஆசிரியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மானாமதுரை யூனியன் தலைவர் லதா,ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தாசில்தார் சாந்தி ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியான மாணவர் மனோஜ் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- மனோஜ், விக்னேசுவரன் பள்ளிக்கு வெளியே சென்று, சிறிது தூரத்தில் உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தனர்.
- நாவல் பழங்களை பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மரக்கிளை முறிந்து மின்சார வயர் மீது விழுந்தது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சீனிமடை கிராமத்தை சே்ாந்த மருதுபாண்டி மகன் மனோஜ் (வயது 13). இவர் கீழ கொம்புகாரனேந்தல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
மிளகனூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் விக்னேசுவரன் (15). அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
நேற்று மனோஜ், விக்னேசுவரன் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில், மதிய உணவு இடைவெளியின்போது அவர்களும், மேலும் சில மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கு வெளியே சென்று, சிறிது தூரத்தில் உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தனர். அந்த மரத்தை தொட்டு மின்சார வயர் சென்றது.
நாவல் பழங்களை பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த மரக்கிளை முறிந்து மின்சார வயர் மீது விழுந்தது. இதில் வயர் மீது விழுந்த மனோஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேசுவரன் பலத்த காயம் அடைந்தார்.
- இளையான்குடி பேரூராட்சி பெண் தலைவருக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளார்.
- இது குறித்து மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி தலைவராக தி.மு.க. வை சேர்ந்த ஜெமிமா உள்ளார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. நகரச் செயலாளர் நஜூமுதீன் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.
இதனால் தி.மு.க. வைச் சேர்ந்த ஜெமிமா என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 13-வது வார்டில் நடந்த இடைதேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தி.மு.க. நகர்செயலாளர் நஜூமுதின் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நஜூமுதின் மீண்டும் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெமிமாவை தலைவர் பதவியிலிருந்து விலக ஒரு தரப்பினர் வற்புறுத்தி வருகின்றனர்.ஆனால் பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஜெமிமா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் ஜெமிமா, 13-வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜூமுதீன் அ.தி.மு.க. உறுப்பினர் நாகூர் மீரா ஆகிய 3 பேர் மட்டும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 15 வார்டு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர். கூட்டம் நடத்த போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைவர் ஜெமிமா நிருபர்களிடம் கூறிய தாவது:-
இளையான்குடி பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி எனக்கும், எனது கணவருக்கும் நஜூமுதீன் தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் விவகாரத்தில் மாவட்ட செயலாளர், என்ன சொல்கிறாரோ? அதை கேட்பதற்கு தயாராக உள்ளோம். இதற்கிடையில் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இது தொடர்பாக தி.மு.க. நகர்செயலாளர் நஜிமுதின் கூறும்போது, இந்த குற்றச்சாட்டு பொய்யான தாகும். நான்யாரையும் மிரட்டவும் இல்லை. இதுபற்றி மாவட்ட செயலாளரிடம் தெரிவித்து உள்ளேன்.
தற்போது தமிழக முதல்வர் உள்ளாச்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நேரில் பாராட்டு தெரிவித்த இளையான்குடி பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் இளையான்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஓ.பி.எஸ் அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்று அளித்தனர்.
- ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம் வந்தார்.அவருக்கு பூவந்தி அருகே அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக திரண்டு வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்பு காரைக்குடிக்கு வந்த அ.தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகனுக்கு மாவட்ட பேரவை துணைச் செயலா ளர் பாலா, இளைஞர் அணி திருஞானம், காரைக்குடி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அங்கு ராஜ், ரவி, மகளிர் அணி ராமாமிர்தம், பத்மா, சாந்தி, இளைஞர் அணி காட்டு ராஜா, பக்கீர் முகமது, கண்ணதாசன் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
காரைக்குடி 5 விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கே.ஆர்.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செய்தி தொடர்பாளர் மருது அழகராஜ், வழக்கறிஞர் ராமநாதன், மாணவரணி ஆசைத்தம்பி, சுமித்ரா ரவிக்குமார் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.






