search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கான வீடுகள் கட்டும் பணி
    X

    சிவகங்கை யூனியன் ஒக்கூர் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணிக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ., மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கான வீடுகள் கட்டும் பணி

    • ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கான வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர்ஊராட்சியில்முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்புகள் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை

    மேம்படுத்துவதற்கெனஅரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவனங்களின்

    பங்களிப்புடன் ஆய்வு மேற்கொண்டு, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களைச் சார்ந்த 3,242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர்ஊராட்சியில் 236 குடும்பங்களுக்கு புதிதாக ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் கட்டித்தர தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், இன்றையதினம் முகாம் வாழ் தமிழர்களுக்கானகுடியிருப்புக்கள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 5 பகுதிகளிலும் மொத்தம் 372 வீடுகள் கட்டித்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மானா–மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளாபாலச்சந்திரன், ஊரக வளர்ச்சி

    துறை செயற்பொறி யாளர் சிவராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சாந்தாசகாயராணி, ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமாஅருணாசலம், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதசுந்தரம், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×