என் மலர்
சேலம்
- நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது.
சேலம்:
சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் அடுத்த வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஹேமலதா (வயது 37). இவர் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த ஹேமலதாவை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வலசையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பெரியேரிபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சஞ்சய் (வயது 17), அவரது தம்பி ஜெயகாந்தன் (13) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரிடம் மாணவர்கள் கூறுகையில், எனது தந்தை கோபால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக எனது தாயும் அங்கு இருந்து வருகிறார்.
இந்த நிலையில், எங்கள் வீட்டுக்கு செல்லும் வழித்தடத்தை அருகில் வசிக்கும் முருகன், கோவிந்தன் ஆகியோர் அடைத்து முட்களை போட்டுள்ளனர். இதனால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.
பால் விற்பனை செய்து தற்போது சாப்பிட்டு வருகிறோம். வீட்டுக்கு செல்ல முற்படும்போது அருகில் உள்ளவர்கள் எங்களை வரக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுகின்றனர்.
வழித்தட பிரச்சனைக்காக 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு தாய் தந்தை ஆகியோர் வந்து மனு அளித்துள்ளனர். போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே வீட்டின் முன்பு முட்களை போட்டு வழித்தடத்தை மறைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது வீட்டுக்கு செல்ல முடியாமல் இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு தந்து காப்பகத்தில் இருக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
- அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர்.
சேலம்:
சேலம் அன்ன தானப்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64). இவரது மகன் விஷ்ணுகுமார் (37). இருவரும் அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆத்துகாரன் காடு பகுதியைச் சேர்ந்த லலித்குமார் (23) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார்.
வாகனங்கள் வழியில் நின்றதால் காரில் செல்ல முடியாத அவர் வெங்கடேசன் மற்றும் விஷ்ணுகுமாரிடம் ஏன் இப்படி சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தினீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து லலித்குமாரை இரும்பு கரண்டியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த லலித்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசன், விஷ்ணுகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை.
சேலம்:கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்
சேலம் மாவட்டம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.
இதையடுத்து மனு அளித்துவிட்டு வந்து நிருபர்களிடம் பெரியஅண்ணன் கூறும்போது, எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். தற்போது விவசாயம் நலிவடைந்து விட்டதால் விசைத்தறி தொழில் செய்வதற்காக எந்திரத்திற்கு ரூ.10 லட்சம் வங்கியில் கடனை பெற்றேன்.
இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு மின் இணைப்பு கேட்டு 17 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளேன். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தேன்.
பின்னர் மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்பு வழங்குவதற்காக அதிகாரி மற்றும் ஊழியர்கள் வருகை புரிந்தனர். அப்போது அருகில் இருந்த வசதி படைத்த மணி உள்ளிட்டோர் மின் இணைப்பு வழங்க கூடாது என தடுத்துள்ளனர். மேலும் மின்சாரத் துறை ஊழியர்களுகடகு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மின்சார துறை அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் சென்று விட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வாழ்ந்து வருகிறோம். தற்போது கடன் பெற்ற இடத்தில் ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே தொழில் தொடங்குவதற்கு மின் இணைப்பு அவசியம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருட்டில் வாழக்கூடிய நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
- 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
- வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.
ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
- எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் (வயது 60) மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எனது பெயர் பொன்னம்மாள். எனக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், எனது கணவர் பெயரில் இருந்த 2 1/2 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டார். என் பெயரில் 1 1/2 ஏக்கர் சொத்து இருந்தது. இதை எனது இளைய மகன் லோகநாதன் எடுத்துக்கொண்டார்.
எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை வற்புறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
- நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
சேலம்:
தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்று விக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
சேலம், நாமக்கல்...
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப் பட்டுள்ள பேராசிரியர்கள், கணினி மூலம் மாண வர்களின் விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
கல்லூரிகளில் திரண்டனர்
இதனிடையே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 19-ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை வழங்கியது. அதாவது இன்று (22-ந்தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்தற்காக மாணவ- மாணவிகள் கல்லூரிகளில் திரண்டனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
- பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது.
- ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் காவலாளியை கொலை செய்து கோயில் உட்பிரகாரத்தில் இருந்த நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் ஆனது அச்சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தாரமங்கலம் சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல காலையில் கோயிலில் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு குழம்பிப் போன பூசாரி கோயில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோயில் உள்ளே இருந்த 8 ஐம்பொன் சாமி சிலைகள் மாயமானது தெரியவந்தது.
அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து அதன் பின்னர் தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் காவல்துறை யினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் தாரமங்கலம் பகுதியில் பழங்கால 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதற்கட்ட விசாரணையாக அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளையர் குறித்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
- 78 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கந்தமாரியம்மன் கோவில் திடலில் தெருக்கூத்து நடந்தது.
- அப்போது மது போதையில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர், மூதாட்டியை பலவந்தமாக பலாத்காரம் செய்தார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி பூசாரிமூப்பர் வளவு பகுதியை சேர்ந்த 78 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கந்தமாரியம்மன் கோவில் திடலில் தெருக்கூத்து நடந்தது. இந்த தெருக்கூத்தை பார்த்து விட்டு இரவு மூதாட்டி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர், மூதாட்டியை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். தலைமறைவான வாலிபரை பிடிக்க இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள், பூசாரி மூப்பர் பகுதியில் வசிப்ப வர்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் சந்தேகபடும்படி உள்ள நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இரவு கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
- மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது.
மின்சார வயர் துண்டிப்பு
நேற்று இரவு இந்த கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
இந்த நிறுவனத்தில் பணம் வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகத்தை யாராவது தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையிலான வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்களை எடுத்துச் சென்று, மேட்டூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் அதனை போட்டு சேதப்படுத்தினர்.
கூரியர் நிறுவனத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னதாக, அந்த பகுதியில் இருந்த தெரு விளக்குகள், கட்டிடத்தின் முன்பு இருந்த டியூப் லைட்டுகளை சேதப்ப டுத்தி, அந்த பகுதியை இருட்டாக்கிவிட்டு உள்ளே நுழைந்து பணத்தை திருடி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
அதிர்ச்சி
வழக்கம்போல் இன்று காலை கூரியர் நிறு வனத்திற்கு வேலைக்கு வந்த ஊழியர்கள், ஷட்டர் உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்த னர். பின்னர் இது தொடர்பாக மேட்டூர் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் தான், கொரியர் நிறுவ னத்தில் இருந்து திருட்டுப் போன பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- குறித்த நாளான ஜூன் 12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது.
இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.
கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 24-ந்தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட்டார்.
மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது.
இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.
குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.
மேட்டூர் அணையின் உச்ச நீர் மட்டம் 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.654 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1075 கன அடியாக உள்ளது.
குடிநீருக்காக விநாடிக்கு 1508 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் ஜூன் 12-ம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல் 4.36 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் அதிகாரிகள் கூறினர்.
மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6 டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
- அ.தி.மு.க.வினர் திரண்டு, புகழேந்தியின் காரை வேகமாக தட்டி, தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றனர்.
- புகழேந்தி நல்விதமாக எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள சேலம் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினர்.
அப்போது திடீரென அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டத்தில் புகுந்து அங்கிருந்த அ.தி.மு.க கொடி மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும் என கூச்சலிட்டு அங்கிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளை அகற்ற முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து நிர்வாகிகள் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். அப்போது எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு, புகழேந்தியின் காரை வேகமாக தட்டி, தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட புகழேந்தியின் கார் டிரைவர், காரை விரைவாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் புகழேந்தி நல்விதமாக எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






