என் மலர்tooltip icon

    சேலம்

    • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தின் உள்ள குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பாமக மாநகர் மாவட்ட தலைவர் ராச ரத்தினம் ஆகி யோர் இன்று ஆஜராயினர்.

    அவர்களுக்கு வக்கீல்கள் குமார், குலசேகரன், விஜய் ராஜா, சுதாகர், கண்ணன், மோகன்ராஜ் ஆகியோர் வாதாடினர். இதை தொடர்ந்து வழக்கு விசா ரணையை வருகிற 30-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறஉள்ளது.
    • வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
    • இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் பல பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி, சங்ககிரி, கரிய கோவில், கெங்கவல்லி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக எடப்பாடியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    சங்ககிரி- 21, கரியக்கோவில்-12, கொங்கவல்லி -10, தம்மம்பட்டி-6, பெத்தநாயக்கன்பாளையம் -7, சேலம் -3, ஆத்தூர் -2.4, ஏற்காடு -1.6 என மாவட்டம் முழுவதும் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சேலம் மாநகரில் பல்வேறு சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.

    • 2022-2023 நடப்புக் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு 6.4.2023 முதல் 20.4.2023 வரை நடைபெற்றது.
    • இதற்காக மாவட்டத்தில் 189 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் 2022-2023 நடப்புக் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு 6.4.2023 முதல் 20.4.2023 வரை நடைபெற்றது.

    537 பள்ளிகள்

    சேலம் மாவட்டத்தில் 288 அரசு பள்ளிகள், 25 அரசு உதவி பெறும் பள்ளிகள், 224 தனியார் பள்ளிகள் என மொத்தம் 537 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள்.

    இதற்காக மாவட்டத்தில் 189 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் 179 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 10 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இத்தேர்வு மையங்களில் 21,835 மாணவர்கள், 21,593 மாணவிகள் என மொத்தம் 43,428 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    39,578 பேர் தேர்ச்சி

    கடந்த 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வெளியிட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் 19,168 மாணவர்கள், 20,410 மாணவிகள் என மொத்தம் 39,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளோம் போன்ற மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டனர். செல்போன், கனினி வழியாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

    தற்காலிக மதிப்பெண் பட்டியல்

    வழக்கம்போல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி களுக்கு கொண்டு சேர்க்க தாமதம் ஆகும் என்பதால், மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு ஏதுவாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அவர்கள் பயின்ற பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வருகிற 26-ந்ேததி மதியத்தில் இருந்து விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 300 பள்ளிகளை சேர்ந்த 18,143 மாணவ- மாணவிகளுக்கும் வருகிற 26-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. எனவே மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, இந்த தற்காலிக மதிப்பெண் சான் றிதழை பெற்று கொள்ளலாம். தலைமை ஆசிரியர் கையொப்பம், பள்ளி சீல் வைத்து இந்த மதிப்பெண் சான்றிதழ் பெற வேண்டும் என கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, இருபாளி ஊராட்சி, பூசாரிமூப்பன் வளவு பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார்.
    • வலுக்கட்டாயமாக அருகில் உள்ள புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, இருபாளி ஊராட்சி, பூசாரிமூப்பன் வளவு பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார்.

    மூதாட்டி கடந்த சனிக்கிழமை இருப்பாளி பகுதியில் உள்ள கந்த மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, இரவு தனியாக வீடு திரும்பினார். பூசாரிமூப்பன் வளவு பகுதியில் அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர், மூதாட்டியின் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக அருகில் உள்ள புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அவரை மீட்ட அவரது உறவினர்கள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து அவர் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார், 78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை கண்டுபிடிக்க எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளியான தவசியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    • இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    ஆத்தூர்:

    கெங்கவல்லி இந்திரா காலனி 1-வது வாா்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த விஜி (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அரசு சிமெண்ட் தொழிற்சாலைக்கு, ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • எதிர்பாராத விதமாக மேம்பாலத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பெரம்ப லூர் அரசு சிமெண்ட் தொழிற்சாலைக்கு, ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.

    புறவழிச் சாலை மேம்பா லத்தில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக மேம்பாலத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை.

    மேலும் 60 டன் எடை கொண்ட ராட்சத லாரி என்பதால், ஆத்தூரில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு அகற்றும் முயற்சி யில் ஈடுபட்டனர். ஆனால் லாரியை நகர்த்த முடிய வில்லை. லாரியின் எடை அதிகமாக இருந்ததால் அதிலிருந்து சிமெண்ட் சாம்பலை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து, நகர்த்த முயற்சி செய்தனர். அந்த முயற்சியும் பலன் அளிக்க வில்லை.

    இதை யடுத்து கள்ளக்கு றிச்சி, சேலம் ஆகிய பகுதி யிலிருந்து நேற்று ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, மொத்த 3 ராட்சத கிரேன்கள் மூலம் இந்த கண்டெய்னர் லாரியை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    சுமார் 36 மணி நேரத்திற்கு மேலாக, லாரியை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சேலம் - சென்னை நெடுஞ்சாலை என்பதால் இந்த வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் நகரப் பகுதிக்குள்ளும் காட்டுப் பகுதிக்கும் திருப்பி விடப்பட்டு உள்ளது.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் எந்த வழியே செல்ல முடியும் என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    • கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.
    • கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகு தியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி அவரது மனைவி விமலா தார மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
    • போலீசார் விரைந்து சென்ற , திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுவேதா (வயது 21), பி.காம். பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர்.

    அதன்படி சுவேதாவுக்கும், வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா மகன் எம்.பி.ஏ. பட்டதாரி லோகநாதன் (27) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் பேசி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

    இருவருடைய திருமணம் நேற்று காலை நடைபெறவிருந்த நிலையில், காதலன் கவியரசனுக்கு சுவேதா செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.

    உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.

    இதனால் காவல் துறையின் உதவி எண் 100-க்கு கவியரசன் தொடர்பு கொண்டு, தனது காதலிக்கு சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க உள்ளனர். எனவே உடனடியாக தடுத்து நிறுத்தி என்னையும், காதலியையும் சேர்த்து வையுங்கள் என தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து காவல் துறை கட்டுப்பாடு அறை மூலமாக வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம், விசாரித்தனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாழப்பாடி மகளிர் போலீசார், சுவேதாவை மீட்டு காதலன் கவியரசனுடன் சேர்த்து வைத்தனர். மேலும் பாதுகாப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதே சமயம் பாதிக்கப்பட்ட மணமகன் தரப்பினர், திருமணம் நிறுத்தப்பட்டதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். திருமணத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம், என புகார் கொடுத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • நேற்று 103.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.58 அடியானது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 762 கன அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 103.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.58 அடியானது.

    இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரியாக வாய்ப்பு உள்ளது.

    • 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
    • 2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலையில் இந்திய அரசின் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.

    கடந்த 20-ந் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள் ஆவர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60 சதவீதம் ஆவர்.

    2.57 லட்சம் பெண்கள் பதிவு

    பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாடு 2-வது இடம்

    மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63 சதவீதம் உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83 சதவீதம் உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.

    2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2021-2022 உடன் ஒப்பிடும்போது 13.22 சதவீதம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • (யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
    • நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    சேலம்:

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு களில் மாணவர்கள் சேர ஒவ்ெவாரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    சேலம், நாமக்கல்

    அதன்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் நேற்று 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் எழுதினர். சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    அடுத்தக் கட்ட தேர்வுகள் ஜூன் முதல் வாரம் வரை நடைபெறுகின்றன. அதுபோல் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

    ×