என் மலர்
சேலம்
- வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
- தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு விசாரித்தனர்.
இது தொடர்பாக வீரகனூர் அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை படித்த நீதிபதி, சிறுமியின் வாக்குமூலம் தெளிவாக இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வத்தை கைது செய்து ெஜயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
ஜெயிலில் அடைப்பு
இதையடுத்து வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டு தலைமறைவாக இருந்த கார் டிரைவர் தற்போது தான் கைது செய்து இருக்கும் சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
- மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.
சேலம்:
சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு முன்னர் சம்ந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநரிடம் பதிவுச்சான்று பெற்ற பின்புதான் பணியமர்த்த வேண்டும்.
பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தினை dcifsalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சாப்ட் காப்பி ஆகவும் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம், 27/2 ஏ 2, காந்தி ரோடு, வருமான வரித்துறை அலுவலகம் அருகில், சேலம்-636007. என்ற முகவரிக்கு அதன் நகல்களை அனுப்புமாறு சேலம், தொழிலக பாதுபாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிமாநிலத் தொழிலாளர்களில் பணியின்போதும், பணியில் இல்லாமல் ஓய்வின் போதும் மற்றும் இரவு நேரங்களிலும் உயிருக்கு கேடு ஏதும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பது தொழிற்சாலை நிர்வாகங்கள் உரிய முறையில் கண்காணித்திட வேண்டும், வேறு ஏதாவது நேர்ந்தால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவகல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இது குறித்து சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகாக்க ளை சேர்ந்தவர்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தினகரனை 9597386807, 9445869224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுக்காக்களை சேர்ந்தவர்கள் மேட்டூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநரை 9445869225 என்ற எண்ணிலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சந்திரமோகனை 9994847205 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
- அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சேலம்:
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சிடெட் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலமாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் நடைபெற உள்ளது.
கல்வி தகுதி
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ெதாடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பிளஸ்-2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் 1 முதல் 5-ம் வரையிலான ஆசிரியர் பணிக்கு சிடெட் தாள்- 1 எழுத தகுதியுடையவர்கள் ஆவர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் சிடெட் தாள்-2 எழுத தகுதியுடைவர்கள் ஆவர்.
ஆசிரியர் பணிக்கான பி.எட்., டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆகிய தகுதியை என்.சி.டி.இ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்
களுடன் தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
2 தாள் தேர்வையும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2023 ஆகும். தமிழ்நாட்டில் இந்த தேர்வு சேலம், நாகர்கோவில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளின் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் இன்று சேலம் காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
- பயிற்சி கலகெடர் சங்கேத் பல்வந்த் வாகே தொடங்கி வைத்தார்.
சேலம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பன்ளிகளில் பயிலும், மாணவ-மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, ஊட்டி, விழுப்புரம், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவியர்க கான விளையாட் விடுதிகள் ஈரோடு. திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி, ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோட்டிலும், மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சத்தூவாச்சாரி, வேலூர் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளின் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் இன்று சேலம் காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. பயிற்சி கலகெடர் சங்கேத் பல்வந்த் வாகே தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மற்றும் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். இத்தேர்வு போட்டியில் மாணவ-மாணவியர்கள் 108பேர் கலந்து கொண்டனர்.
- வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, கைது செய்தனர்.
- போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு விசாரித்தனர்.
இது தொடர்பாக வீரகனூர் அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை படித்த நீதிபதி, சிறுமியின் வாக்குமூலம் தெளிவாக இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வத்தை கைது செய்து ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டு தலைமறைவாக இருந்த கார் டிரைவர் தற்போது தான் கைது செய்து இருக்கும் சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- பிளஸ்-2 மாண–வி–யான மேகலா தற்–போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்–தேர்–வில் தேர்ச்–சி–ய–டைந்–தார்.
- இது–தொ–டர்–பாக போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.
ஆத்–தூர்:
சேலம் மாவட்–டம் ஆத்–தூர் அருகே உள்ள பைத்–தூர் கிரா–மம் 9-வது வார்டை சேர்ந்–த–வர் கணே–சன் (வயது 44), எலக்ட்–ரீ–சி–யன். இவ–ரு–டைய முதல் மனைவி சத்யா. இவர்–க–ளுக்கு பிர–வீணா, மேகலா என்ற 2 மகள்–கள் உள்ள–னர். பிர–வீ–ணா–வுக்கு திரு–ம–ணம் ஆகி–விட்–டது.
பிளஸ்-2 மாணவி
பிளஸ்-2 மாண–வி–யான மேகலா தற்–போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்–தேர்–வில் தேர்ச்–சி–ய–டைந்–தார். முதல் மனைவி சத்யா இறந்–து–விட்–ட–தால் கணே–சன் வெள்–ளை–யம்–மாள் என்–ப–வரை 2-வதாக திரு–ம–ணம் செய்து கொண்–டார். இவர்–க–ளுக்கு 2 வய–தில் பிர–வீண் என்ற மகன் உள்–ளார்.
இந்த நிலை–யில் பிளஸ்-2 முடித்த மேகலா தனது தந்–தை–யி–டம் கல்–லூ–ரி–யில் சேர்ந்து மேற்–ப–டிப்பு படிக்க வேண்–டும் என்று கூறி–னார். ஆனால் இதற்கு கணே–சன் மறுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது. இது–தொ–டர்–பாக தந்தை, மகள் இடையே அடிக்–கடி வாக்–கு–வா–தம் ஏற்–பட்டு வந்–துள்–ளது.
தற்–கொலை
இந்த நிலை–யில் நேற்று மாலை வீட்–டில் பிர–வீண் டி.வி.யில் கார்ட்–டூன் படம் பார்த்–துள்–ளான். அப்–போது மேகலா ரிமோட்டை எடுத்து வேறு ஒரு சேனலை மாற்–றி–னார். இத–னால் பிர–வீண் அழு–துள்–ளான்.
அந்த நேரத்–தில் வீட்–டுக்கு வந்த கணே–சன், மேக–லா–வி–டம் இருந்து டி.வி. ரிமோட்டை வாங்கி கீழே போட்டு உடைத்–தார். இத–னால் தந்தை, மகள் இடையே வாக்–கு–வா–தம் ஏற்–பட்–டது. அப்–போது மன–வே–தனை அடைந்த மேகலா நான் கிணற்–றில் குதித்து தற்–கொலை செய்து கொள்ள போகி–றேன் என்று கூறி–விட்டு வீட்–டின் அரு–கில் உள்ள கிணற்றை நோக்கி ஓடி–னார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணே–சன் மகளை காப்–பாற்–று–வ–தற்–காக பின் தொடர்ந்து ஓடி–னார். ஆனால் அதற்–குள் கிணற்–றில் குதித்த மேகலா தண்–ணீ–ரில் மூழ்கி பலி–யா–னார். அதே நேரத்–தில் மகளை காப்–பாற்ற கணே–ச–னும் கிணற்–றுக்–குள் குதித்–தார். எதிர்–பா–ரா–த–வி–த–மாக அவ–ரும் தண்–ணீ–ரில் மூழ்கி பரி–தா–ப–மாக இறந்–தார். இதை பார்த்த வெள்–ளை–யம்–மாள் சத்–தம் போட்–டார். இதை–ய–டுத்து அக்–கம் பக்–கத்–தி–னர் அங்கு திரண்டு வந்–த–னர்.
மாணவி உடல் மீட்பு
இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் ஆத்–தூர் தீய–ணைப்பு நிலைய அலு–வ–லர் அசோ–கன் தலை–மை–யில் வீரர்–கள் அங்கு விரைந்து சென்–ற–னர். பின்–னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மாணவி மேக–லா–வின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்–த–னர்.
உறவினர்கள் கதறல்
தொடர்ந்து கணே–ச–னை தீயணைப்பு வீரர்கள் தேடினர். கிணறு பல அடி ஆழம் என்பால் நீரில் மூழ்கிய கணேசனின் கதி என்ன? என தெரியாமல் இருந்தது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணியை நிறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அவரது குடும்பத்தினர் கிணற்றின் கரையில் கூடி சோகத்துடன் இருந்தனர். இன்று காலை கணேசன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
போலீசார், உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோ–த–னைக்–காக அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்–த–னர். இது–தொ–டர்–பாக போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.
- ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது.
- இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30). வெள்ளி வியாபாரி.
இவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது. இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றிய சரவ ணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி பகுதியில் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், உதயசங்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். அவரது நண்பர் அலெக்ஸ்பா ண்டி யன் லேசான வெட்டுக்கா யங்களுடன் உயிர் தப்பினார்.
தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேர் கைது
கொலை யுண்ட உதய சங்கர், வசதியான வர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்து வந்தார். அதுபோல் சேலம் சின்னேரி வாய க்காட்டை சேர்ந்த 26-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகன் (49) என்பவரிடம் உதயசங்கர், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்ப டுகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த தால் அவரை கூலிப்படை கும்பல் தீர்த்துக்க ட்டியது தெரிய வந்தது.
இந்த கொலை சம்பவம் குறித்து பள்ள ப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, முருகன் , காமலா புரத்தை சேர்ந்த பன்னீ ர்செல்வம் (23), 3 ரோடு ஜெயா நகரை சேர்ந்த ஆனந்த் (26) என அடுத்த டுத்து 5 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தொடர்ந்து தலைமறை வாக இருந்த சேலம் டவுன் கல்லாங்குத்து கோவிந்தன் தெருவை சேர்ந்த கணேஷ்மு த்துராஜ் மகன் விக்னேஷ்கு மார் (24) என்பவர் நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
இவருடன் சேர்த்து வெள்ளி வியாபாரி கொலை யில் கைதானவர்க ளின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- செங்கல் சூளை மற்றும் மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர்.
- தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் சேலம் மாவட்ட ஆள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறை, சைல்டு லைன் கள அலுவலர்கள், காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், கிராமிய பெண்கள் மேம்பாட்டு சமூக ஆர்வலர் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணம் தைலானூர் வலசையூர், சின்ன வீராணம் மற்றும் குப்பனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கொத்தடிமை தொழிலாளர், குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உள்ளனரா என்று அதிரடி ஆய்வு செய்தனர்.
மேலும் செங்கல் சூளை மற்றும் மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள்
கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின் போது அரிசி ஆலை உரிமையாளர்கள், செங்கல் சூலை மற்றும் மரம் அறுக்கும் ஆலை உரிமை யாளர்களிடம் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் எவரையும் தொழிற்கூடங்களில் பணியமர்த்த கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. நிர்வாகத்தினரிடம் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தி னர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவன ங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும் என்றும் எச்சரிக்கை செய்யப்ப ட்டது.
மேலும் குழந்தை களை பணி செய்ய அனுப்பி வைக்கும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரி வித்துள்ளார்.
- நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் முழுவதும் ரூ.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடு களுக்கும், 158 பெட்ரோல் பங்குகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சேலம் மாநகரப் பகுதி முழுவதும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 450 வீடு களுக்கு இணைப்பு வழங் கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 50 வீடுக ளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் குழாய் மூலமாக தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜாகீர் அம்மாபாளையம், திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட மற்ற பகுதிக ளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று, இரும்பாலை ஆவின் பெட்ரோல் பங்க்கில் வாக னங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பும் பணியும் இன்று தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்தி யன் ஆயில் அதிகாரிகள் டி.எஸ்.நானாவேர், எஸ்.கே.ஷா, சைலேஷ் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
- ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள வண்ண மயமான மலர்களையும், மலர்கள், காய்கறிகள் பழங்க ளால் உருவாக்கப்பட்ட காந்தி கண்ணாடி, எறும்பின் உருவம், மேட்டூர் அணை, முயல் உருவம், புலி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் மலர்களால் ஆன சின்சான் பொம்மை குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதேபோல், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு வரும் 28-ந் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டி கள், விளை யாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
2-வது நாளான நேற்று ஏற்காடு டவுன் பேசன் ஷோ மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியும், கலைய ரங்கத்தில் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கரகம், மான், மயில், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சியும், சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்பில் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.
கோடை விழாவின் 3-ம் நாளான இன்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணி களுக்கும், இளைஞர்க ளுக்கும், அரசு ஊழியர்க ளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த விழாவையொட்டி ஏற்காட்டில் தங்கும் விடுதி, ஓட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு விளையும் பலாப்பழம், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, காப்பிக் கொட்டை, காபி தூள், ஆட்டுக்கால் கிழங்கு, ஆரஞ்சு பழம், கொய்யா, அத்தி, முள் சீத்தா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
இதனிடையே நேற்று மதியம் ஏற்காட்டில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள நீரோட்டங்களில் மழைநீர் ஓடியதைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால், மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- மலை பிரதேசங்களில் நரவள்ளிக்காய் அதிக அளவில் விளையும்.
- ஏற்காடு, கொல்லி மலையில் தற்போது நர வள்ளிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால், அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது.
சேலம்:
மலை பிரதேசங்களில் நரவள்ளிக்காய் அதிக அளவில் விளையும். ஏற்காடு, கொல்லிமலை, பச்சமலை, ஜவ்வாது மலை உள்பட பல மலை பிரதேசங்களில் ஒவ்வொரு ஆண்டும் ேம, ஜூன், ஜூலை மாதங்களில் நரவள்ளிக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
ஏற்காடு, கொல்லி மலை
ஏற்காடு, கொல்லி மலையில் தற்போது நர வள்ளிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால், அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இவ்வாறு விற்பனைக்கு வரும் காயை அதன் மருத்துவ குணம் தெரிந்து, ெபாதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நரவள்ளிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவை. ஒரு கிலோ ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் 2 மாதத்திற்கு இக்காய் வரத்து இருக்கும், என்றனர்.
- சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” என்னும் சொகுசு வாகனச் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
- நாள்தோறும் காலை 9 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் ரெயில் நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடைய உள்ளது.
சேலம்:
ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் "ஏற்காடு சூழலியல் சுற்றுலா" என்னும் சொகுசு வாகனச் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
நாள்தோறும் காலை 9 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் ரெயில் நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடைய உள்ளது.
ஏற்காடு ஏரி, சேர்வராயன் காட்சிமுனை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பீக்கு பூங்கா, பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், பட்டுப்புழு வளர்ப்புத்துறை, ரோஜா தோட்டம் மற்றும் அண்ணா பூங்கா ஆகிய சுற்றுலாப் பகுதிகளுக்கு நுழைவுக் கட்டணத்துடன், பயணிகளுக்கு கட்டணமாக (குளிர்சாதன வசதி யில்லாமல்) ரூ.860, (காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள்) உட்பட, குளிர்சாதன வசதியுடன் ரூ.960 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித பயணக் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் எனவும், அன்று மாலை 6 மணியளவில் ஏற்காட்டிலிருந்து புறப்பட்டு, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.






