என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist vehicle service"

    • சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” என்னும் சொகுசு வாகனச் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
    • நாள்தோறும் காலை 9 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் ரெயில் நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடைய உள்ளது.

    சேலம்:

    ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் "ஏற்காடு சூழலியல் சுற்றுலா" என்னும் சொகுசு வாகனச் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    நாள்தோறும் காலை 9 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் ரெயில் நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடைய உள்ளது.

    ஏற்காடு ஏரி, சேர்வராயன் காட்சிமுனை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பீக்கு பூங்கா, பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், பட்டுப்புழு வளர்ப்புத்துறை, ரோஜா தோட்டம் மற்றும் அண்ணா பூங்கா ஆகிய சுற்றுலாப் பகுதிகளுக்கு நுழைவுக் கட்டணத்துடன், பயணிகளுக்கு கட்டணமாக (குளிர்சாதன வசதி யில்லாமல்) ரூ.860, (காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள்) உட்பட, குளிர்சாதன வசதியுடன் ரூ.960 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித பயணக் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் எனவும், அன்று மாலை 6 மணியளவில் ஏற்காட்டிலிருந்து புறப்பட்டு, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ×