என் மலர்
சேலம்
- 1,600 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
- இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ந் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சேலம்:
மத்திய அமைச்சக அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்பட மத்திய அரசுக்கு பாத்தியப்பட்ட பல்வேறு அலுவலகங்களில் 1,600 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சில பணிகளுக்கு கூடுதல் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ந் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு கணினி வழியில் முதல்நிலை தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பணியாளர் நலன் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சின்ன கொல்லப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
- இதன் பின்னரும் நிற்காத அந்த கார், அங்கிருந்த இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சேலம்:
சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் இன்று காலை 6.45 மணி அளவில் ஏற்காட்டில் இருந்து சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. சின்ன கொல்லப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதன் பின்னரும் நிற்காத அந்த கார், அங்கிருந்த இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து வாகனத்தை மீட்டனர்.
பின்னர் வாகனத்தை ஒட்டி வந்த திருச்சி பூந்தோட்டம் அருகே உள்ள ஆர்.சி.காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் மார்ஷல் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஏற்காட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மத போதகர்கள் கூட்டம் நடைபெறுவதாகவும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து சேலம் ஜங்ஷனுக்கு வந்தவர்களை அழைத்து வர ஏற்காட்டில் இருந்து சென்றபோது, விபத்து நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மார்ஷலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்காடு பிரதான சாலையில் சொகுசு கார், மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீது கார் மோதியபோது, தானாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்ட தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.
- அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்ேபரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர் . அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .
மேலும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது உணவு பாதுகாப்பு சட்டம்- 2006 பிரிவு 52, 56, 58 -ன் படி நீதிவழி தீர்வு அலுவலரிடம் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
- சேலம் உழவர் சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
- சமீப காலமாக உழவர் சந்தைகளில் தக்காளி 12 ரூபாய் முதல் விற்பனை ஆகிறது.
சேலம்:
சேலம் உழவர் சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சமீப காலமாக உழவர் சந்தைகளில் தக்காளி 12 ரூபாய் முதல் விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை வருமாறு:-
தக்காளி ரூ.12-18. உருளைக் கிழங்கு ரூ.30-32, சின்ன வெங்காயம் ரூ.35-55, பெரிய வெங்காயம் ரூ 18-20, பச்சை மிளகாய் ரூ.50-55, கத்தரி ரூ.45-50, வெண்டைக்காய் ரூ.12, முருங்கைகாய் ரூ.30-40, பீர்க்கங்காய் ரூ.40, சுரக்காய் ரூ.18-20, புடலங்காய் ரூ. 24, பாகற்காய் ரூ.45, தேங்காய் ரூ.25-28, முள்ளங்கி ரூ.22-24, பீன்ஸ் ரூ.75-80, அவரை ரூ.50-60, கேரட் ரூ. 60-66, மாங்காய் ரூ.20-30, வாழைப்பழம் ரூ.35-50, கீரைகள் ரூ. 15-20, பப்பாளி ரூ.24, கொய்யா-ரூ.50, சப்போட்டா ரூ.35, மாதுளை ரூ.180, சாத்துக்குடி ரூ.70.
- நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
- தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஜாலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி.
அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான ஜாலிகொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை டிராக்டர் கொண்டு நேற்று மாலை சமன் செய்து கொண்டு இருந்தார். 1/2 ஏக்கர் நிலம் சமன் செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அப்பொழுது முருகன் டிராக்டரை நிறுத்திவிட்டு பின்னால் வந்து கலப்பையை சரி செய்யும் பொழுது கலப்பைக்குள் மாட்டி வெளியே வரமுடியாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.
- மின் நிலைய பராமரிப்புக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
- காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கதவனை மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன. இதனைக் கண்ட அந்த கிராம மக்கள் மீன்குஞ்சுகளை குவியலாக அள்ளிச் சென்றனர். ஒரு சிலர் மீன் குஞ்சுகளை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளில் காய வைத்து கருவாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
- நேற்று 103.51 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.53 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
தமிழக மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று 762 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து விநாடிக்கு 2,162 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 1500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
நேற்று 103.51 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.53 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
நீர்மட்டம் தற்போது 100 அடிக்கு மேல் இருப்பதால் வழக்கம் போல இந்த ஆண்டும் மேட்டூர் அணை வருகிற 12-ம் தேதி சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆசிரியர் பணிக்கான பி.எட்., டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆகிய தகுதியை என்.சி.டி.இ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
சேலம்:
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சிடெட் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலமாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் நடைபெற உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பிளஸ்-2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் 1 முதல் 5-ம் வரையிலான ஆசிரியர் பணிக்கு சிடெட் தாள்- 1 எழுத தகுதியுடையவர்கள் ஆவர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் சிடெட் தாள்-2 எழுத தகுதியுடைவர்கள் ஆவர்.
ஆசிரியர் பணிக்கான பி.எட்., டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆகிய தகுதியை என்.சி.டி.இ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
2 தாள் தேர்வையும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2023 ஆகும். தமிழ்நாட்டில் இந்த தேர்வு சேலம், நாகர்கோவில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகர், 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட அவர், வீட்டில் யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.
கடந்த 19-ந் தேதி அசோக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, எலி மருந்து சாப்பிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன.
ஆத்தூர்:
ஆத்தூர் வட்டார பகுதியில் உள்ள அனைத்து தனியார், நர்சரி, மெட்ரிக், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மணிவிழுந்தான் கிராமத்தில் உள்ள கல்லூரியில் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மோட்டார் வாகன ஆய்வாளர் தி. செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர் ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன. இவற்றில் 20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன.
- பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கதவணையின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 4-ந் தேதி அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது.
இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வந்தனர்.
கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அணையில் மீண்டும் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக மாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று மீண்டும்தொடங்கியது.
- நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள குரங்குச்சாவடி ஏழுமலை கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 27). இவருக்கு திருமணமாகி திவ்யா (24) என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் திவ்யாவின் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் மோகன்ராஜ் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






