சேலத்தில், வேலை கிடைக்காத விரக்தியில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார்.
சேலத்தில், வேலை கிடைக்காத விரக்தியில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகர், 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட அவர், வீட்டில் யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.

கடந்த 19-ந் தேதி அசோக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, எலி மருந்து சாப்பிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com