என் மலர்

  நீங்கள் தேடியது "main road accident"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சின்ன கொல்லப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
  • இதன் பின்னரும் நிற்காத அந்த கார், அங்கிருந்த இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  சேலம்:

  சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் இன்று காலை 6.45 மணி அளவில் ஏற்காட்டில் இருந்து சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. சின்ன கொல்லப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

  இதன் பின்னரும் நிற்காத அந்த கார், அங்கிருந்த இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து வாகனத்தை மீட்டனர்.

  பின்னர் வாகனத்தை ஒட்டி வந்த திருச்சி பூந்தோட்டம் அருகே உள்ள ஆர்.சி.காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் மார்ஷல் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

  இதில், ஏற்காட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மத போதகர்கள் கூட்டம் நடைபெறுவதாகவும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து சேலம் ஜங்ஷனுக்கு வந்தவர்களை அழைத்து வர ஏற்காட்டில் இருந்து சென்றபோது, விபத்து நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மார்ஷலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ஏற்காடு பிரதான சாலையில் சொகுசு கார், மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீது கார் மோதியபோது, தானாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்ட தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

  ×