search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Staff Selection"

    • 1,600 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
    • இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ந் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    மத்திய அமைச்சக அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்பட மத்திய அரசுக்கு பாத்தியப்பட்ட பல்வேறு அலுவலகங்களில் 1,600 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சில பணிகளுக்கு கூடுதல் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ந் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு கணினி வழியில் முதல்நிலை தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பணியாளர் நலன் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×