என் மலர்tooltip icon

    சேலம்

    • ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விழாவை காண ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • ஏற்காட்டில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் 46-வது கோடை விழா கடந்த 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விழாவை காண ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    இவ்வாறு ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டி நடத்தப்படுகிறது.

    நேற்று மகளிர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இணைந்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தின. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திட்ட அலுவலர் பரிமளா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்

    இதில் கொழு கொழு குழந்தை, நடனம், வடிவங்களை கண்டுபிடித்தல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. ஏற்காட்டில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    கொழு கொழு குழந்தை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கான பரிசுகள் கோடை விழா இறுதி நாளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    குழந்தைகள் அழகைக் காண அதிகளவில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் வந்திருந்தனர். மழலையரின் கொஞ்சும் பேச்சும் நடனமும் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க செய்தது.

    இதேபோல் இன்று மாரத்தான், கால்பந்து, பெண்களுக்கான கயிறு இழுத்தல் மற்றும் சாக்கு போட்டி, இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, பல்சுவை நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.

    • எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கப்பட்டி அருகே கல்மேட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் திடீரென அய்யனாரப்பன் கோவிலுக்குள் நுழைந்து, தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கப்பட்டி அருகே கல்மேட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

    இக்கோவிலின் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து இரு தரப்பினரும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இதுகுறித்து மறு உத்தரவு வரும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர்.

    கோவிலுக்கு பூட்டு

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் திடீரென அய்யனாரப்பன் கோவிலுக்குள் நுழைந்து, தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாயிலுக்கு பூட்டு போட்டனர்.

    தர்ணா போராட்டம்

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்து முன்னணி இயக்கத்தைச் சார்ந்த மாவட்ட நிர்வாகி பழனிசாமி தலைமையிலான திரளான பக்தர்கள் சம்பந்தப்பட்ட கோவில் முன் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடன்பாடு

    அவர்கள் இரவு பகலாக ஆன்மீக பாடல்களை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, நேற்று சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்றப்பட்டது.

    இரு தரப்பினரும் வெவ்வேறு தேதிகளில் சம்பந்தப்பட்ட கோவிலில் தவ பூஜை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டதன் பேரில், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலின் நுழைவாயில் இருந்த பூட்டினை அகற்றினார். இதனை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

    • ஆபரேஷனுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் மூதாட்டி நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
    • அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 60). இவரது இடுப்பு எலும்பில் சவ்வு கிழிந்துள்ளதால், அவருக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதற்காக அவருக்கு மயக்க மருந்து செலுத்தி இருந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து பல மணி நேரமாகியும் அவர் மயக்கத்தில் இருந்து தெளியவில்லை.

    இதை அடுத்து டாக்டர்கள் பெரியம்மாளை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை வினாடிக்கு 2,162 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,176 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.68 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

    • மேட்டூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில் மாதாந்திர பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு விதைப்பண்ணையில் மாதாந்திர பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம், சேலம் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஏத்தாப்பூர் மர வள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர் வெங்க டாசலம், கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்கு னர் ராஜகோபால், காடை யாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகரா ஜன், வேளாண் அலுவலர் மாநில திட்டம் சுதாகர், வேளாண் அலுவலர் பண்ணை நிர்வாகம் சந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ஆய்வுக்கு முன்னதாக இணை இயக்குனர் சீரங்கன் விதைப் பண்ணையில் தற்போது 15 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள ராகி, 4 ஏக்கரில் பயிர் செய்யப்பட் டுள்ள சோளம், 5 ஏக்கரில் பயிற்சி செய்யப்பட்டுள்ள பச்சைப்பயிர், 20 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள உளுந்து ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பயிர் வகை கள் மாவட்டத்தில் உள்ள 20 வேளாண்மை மையங்க ளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    • அண்ணாமலை (வயது 36) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு பணம் ரூ. 25 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.
    • சில மாதங்களாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம். செவந்தானுர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 36) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு பணம் ரூ. 25 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். பிறகு சில மாதங்களாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார். பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்த செல்வம் சம்பவத்தன்று பணம் கேட்டு வந்த அண்ணா மலையை அடித்து உதைத்தா தாக தெரிகிறது. காயம் அடைந்த அண்ணாமலை ஓமலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தாரமங்கலம் போலீசார் செல்வம், பிரகாஷ், பாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் மாநகர பகுதி களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதி கரித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென சீதோசண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
    • மேலும் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    சேலம்:

    சேலம் மாநகர பகுதி களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதி கரித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென சீதோசண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சூறை க்கா ற்றுடன் கனமழை பெய்தது.

    குறிப்பாக கன்னங்குறிச்சி, மணக்காடு, மூக்கனேரி, அழகாபுரம், அஸ்தம்பட்டி, பெரமனூர் உட்பட பல பகுதிகளில் சூறைக்காற்று டன் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    சேலம் காந்தி மைதா னத்தில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதே போல சேலம் கோர்ட்டில் 4 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

    இதனால் அஸ்தம்பட்டி பகுதியில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலை களில் ஓடிய தால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சாலைகளில் விழுந்த மரங்களை மாநக ராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று வெட்டி அப்புறப்ப டுத்தினர். சேலம் புறநகர் மாவட்டத் தில் வீரகனூர், ஆனை மடுவு உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. வயல்வெ ளிகளிலும் தண்ணீர் தேங்கிய தால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக வீரகனூரில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. சேலம் 9.7, ஆனை மடுவு 9 என மாவட்டம் முழுவதும் 45.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நேற்று மழையை தொடர்ந்து மாவட்டம் முழு வதும் குளிர்ந்த சீதோசண நிலை நிலவினாலும், இன்று காலையில் இருந்து வெயி லின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    • குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவி லின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பரா மரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிதாக புனர மைக்கப்பட்ட இக்கோவிலின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினர்களும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த

    22-ம் தேதி எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பி னருக்கிடையே சமாதான பேச்சு வார்த்தை நடை பெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் இதுகுறித்து சங்க கிரி வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் சமா தான பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

    பாதுகாப்பு கருதி சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினார் திடீரென அயனாரப்பன் கோவி லுக்குள் நுழைந்து தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர்.

    இதற்கு மற்றொரு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறை அலு வலர்கள் சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாயி லுக்கு பூட்டு போட்டனர். இன்று சங்ககிரி கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் சமா தான பேச்சு வார்த்தைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததிருந்தனர்.

    இதனை அடுத்து சம்மந்தப்பட்ட ஒரு ஒரு தரப்பினர்கள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் திரண்டு வந்து அய்யனா ரப்பன் கோவில் பிரதான வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்ப பகுதியில் விடிய விடிய பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக இன்றும் அப்பகுதியில் சாமியான பந்தல் அமைத்து திரளான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கை யிலான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் கோவில் பகுதி யில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா. மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும்.

    தாரமங்கலம்:

    மேச்சேரி அருகிலுள்ள தெதித்திகிரிபட்டி பகு தியைசேர்ந்தவர் சின்னு என்பவரின் மனைவி பாப்பா (வயது 45) இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்த போது கருக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த திருச்சி சமயபுரம் பகுதியைசேர்ந்த டவர் வேலை செய்யும் தொழி லாளி கிரிதரன் (26) என்ப வரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா.

    மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும். கிரி தரன் சேலம் அரசு மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பாப்பா கொடுத்து வாக்கு மூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    மேச்சேரி அருகிலுள்ள தெதித்திகிரிபட்டி பகு தியைசேர்ந்தவர் சின்னு என்பவரின் மனைவி பாப்பா (வயது 45) இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்த போது கருக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த திருச்சி சமயபுரம் பகுதியைசேர்ந்த டவர் வேலை செய்யும் தொழி லாளி கிரிதரன் (26) என்ப வரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா.

    மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும். கிரி தரன் சேலம் அரசு மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பாப்பா கொடுத்து வாக்கு மூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    தமிழக மின் வாரியத்தில், உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக , கேங்மேன் பணிக்கு 10 ஆயி ரம் பேர் தேர்வு செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. தேர்வான, 9,600 பேரின் பட்டியல், 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

    எழுத்து தேர்வில் பங்கேற்று வேலை கிடைக் காத 5,400 பேர் வேலை கேட்டு, 2 ஆண்டு களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சி னைக்கு தீர்வு காண, செய லர், 3 தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழுவை, மின் வாரியம், கடந்த ஆண்டு நியமித்தது.

    அக்குழு ஆய்வு செய்து, தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், 54 ஆயிரம் காலி பணி யிடங்கள் இருப்பதால், எழுத்து தேர்வில் பங்கேற்று விடுபட்ட 5,400 பேரை வேலைக்கு நியமிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    • யு.பி.எஸ்.சி. ஆணையம் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமனம் செய்கிறது.
    • மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாது காப்பு படையில் சேரு வதற்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி தற்போது வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    இந்திய அரசு துறைகளில் உள்ள உயர் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி. ஆணையம் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமனம் செய்கிறது. அந்த வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாது காப்பு படையில் சேரு வதற்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி தற்போது வெளி யிட்டுள்ளது. ராணுவ பிரி வில் 208 பேர், கப்பல் படை யில் 42 பேர், விமானப்ப டையில் 120 பேர், பயிற்சி அகாடமிக்கு 25 பேர் என மொத்தம் 395 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த 395 பணியிடங்க ளுக்கு கல்வி தகுதி நிர்ண யிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவ பிரி வுக்கு இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதுபோல் விமானப்படை, பயிற்சி பிரிவு, கப்பல் படையில் சேருவதற்கும் தனித்தனியாக கல்வி தகுதிகள் உள்ளது.

    எழுத்துத்தேர்வு, உள வியல் திறன், நுண்ணறிவு தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2023 ஆகும்.

      சேலம்:

      சேலம் அருகே புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் இன்று மதியம் எருது விடும் விழா நடைபெறுகிறது.

      இந்த விழாவில், மாடுகளுக்கு வர்ணம் பூசி மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வந்து, துணியால் சுற்றப்பட்ட பொம்மைகளை வைத்து மாடுகளுக்கு முன்பாக காண்பித்து அந்த பொம்மையை மாடுகள் முட்ட செய்து மகிழ்வது வழக்கம். இந்த சமயத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் அன்னதா னப்பட்டி உதவி கமிஷனர் அசோகன், கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

      ×