search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மாவட்ட செய்திகள்"

    • ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது.
    • இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30). வெள்ளி வியாபாரி.

    இவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது. இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றிய சரவ ணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி பகுதியில் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், உதயசங்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். அவரது நண்பர் அலெக்ஸ்பா ண்டி யன் லேசான வெட்டுக்கா யங்களுடன் உயிர் தப்பினார்.

    தி.மு.க. நிர்வாகி உள்பட 6 பேர் கைது

    கொலை யுண்ட உதய சங்கர், வசதியான வர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்து வந்தார். அதுபோல் சேலம் சின்னேரி வாய க்காட்டை சேர்ந்த 26-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகன் (49) என்பவரிடம் உதயசங்கர், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்ப டுகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த தால் அவரை கூலிப்படை கும்பல் தீர்த்துக்க ட்டியது தெரிய வந்தது.

    இந்த கொலை சம்பவம் குறித்து பள்ள ப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, முருகன் , காமலா புரத்தை சேர்ந்த பன்னீ ர்செல்வம் (23), 3 ரோடு ஜெயா நகரை சேர்ந்த ஆனந்த் (26) என அடுத்த டுத்து 5 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தொடர்ந்து தலைமறை வாக இருந்த சேலம் டவுன் கல்லாங்குத்து கோவிந்தன் தெருவை சேர்ந்த கணேஷ்மு த்துராஜ் மகன் விக்னேஷ்கு மார் (24) என்பவர் நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

    இவருடன் சேர்த்து வெள்ளி வியாபாரி கொலை யில் கைதானவர்க ளின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×