search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. நிர்வாகிகள் சேலம் கோர்ட்டில் ஆஜர்
    X

    ஜி.கே. மணி எம்.எல்.ஏ., அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க. நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர் ஆகிவிட்டு வெளியில் வந்த காட்சி.

    பா.ம.க. நிர்வாகிகள் சேலம் கோர்ட்டில் ஆஜர்

    • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தின் உள்ள குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பாமக மாநகர் மாவட்ட தலைவர் ராச ரத்தினம் ஆகி யோர் இன்று ஆஜராயினர்.

    அவர்களுக்கு வக்கீல்கள் குமார், குலசேகரன், விஜய் ராஜா, சுதாகர், கண்ணன், மோகன்ராஜ் ஆகியோர் வாதாடினர். இதை தொடர்ந்து வழக்கு விசா ரணையை வருகிற 30-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×