என் மலர்
சேலம்
- மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும்.
- அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான கியூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமை (என் டி ஏ) சார்பில் நாளை முதல் வரும் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
சேலம்:
மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான கியூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமை (என் டி ஏ) சார்பில் நாளை முதல் வரும் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
முதல் கட்டமாக நாளை முதல் வருகிற 8-ந் தேதி வரை தேர்வு எழுத உள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது அவற்றை http://cuet.nta.nic.in/ என்ற இணையத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- மேட்டூர் அணைப் பூங்காவில் பொழுதுபோக்கவும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காகவும ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
- மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணைப் பூங்காவில் பொழுதுபோக்கவும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காகவும ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் ஈரோட்டைச் சேர்ந்த ராஜா (வயது 48) என்பவர் பண்ணவாடி பரிசல் துறை அருகே அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேபோல, கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (20) என்ற இளைஞர் மாசிலாபாளையம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
கோடை வெயிலின் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நீர்நிலைக்குச் சென்று குளிக்கும் போது, நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான விராலிக்காடு அருகே, 'ஆழமான பகுதி; குளிப்பதற்கு தடை' என எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.
இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளிக்கின்றனர். இதனால் ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
- கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற பின், வெயிலின் தாக்கம் குறையும்.
- நடப்பாண்டு மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்படுகிறது.கோடை வெயில், கத்திரி வெயில்
சேலம்:
சேலத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து, கடந்த ஏப்ரல் 2-வது வாரத்தில் சேலத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வெப்ப நிலை பதிவானது.
மே 1-ந்தேதி காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயின் தாக்கம் குறைந்தது.
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ந்தேதி தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் மே 8-ம் தேதிக்கு மேல் மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்பட்டது. சராசரியாக சேலத்தில் 100 முதல் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. அக்னி நட்சத்திரம் கடந்த 29-ம் தேதி நிறைவு பெற்றது.
அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற பின், வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் நடப்பாண்டு மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. நேற்று காலையில் வெயில் அதிகமாக இருந்தது. 102.4 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்றும் வெயில் வாட்டி எடுத்தது.
- வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஏற்காடு:
ஏற்காடில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வடமன் (45) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடமனின் மகள், அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தாகவும் அவர்களுக்கு வரதராஜன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்தே இருவருக்கும் தகராறு நிலவியது.
இந்நிலையில் கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கும் வரதராஜன் தான் காரணம் என ஆத்திரம் அடைந்த வடமன் தனது வீட்டில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜன் வீட்டிற்கு சென்று தேடியதில் வரதராஜன் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த வடமன் அங்கு இருந்த பசுமாட்டை சுட்டு கொன்றுவிட்டு தலை மறைவானார்.
இந்நிலையில் வரதராஜன் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரில் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக சுற்றி திரிந்த வடமன் ஏற்காட்டில் இருந்து தப்பி செல்வதற்காக கோட்டச்சேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ஏற்காடு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது.
- பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி:
கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு ஏதும் இன்றி வறண்ட வானிலை நிலவி வந்தது. பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நகர் முழுவதும் அனல் காற்று வீசியது.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை இரவு) திடீரென இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல், எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை பகுதியில் எடப்பாடி-சேலம் பிரதான சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நகரின் பல இடங்களில் மின் பாதைகளில் பழுது ஏற்பட்டதால் தொடர்ந்து நள்ளிரவு வரை நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
- ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.
- நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 1500 கன அடியாக வந்த நிலையில் நேற்று 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 1500 கன அடியாக வந்த நிலையில் நேற்று 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 1804 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 2267 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 103.73 கனஅடியாக உயர்ந்துள்ளது.
- ஆறுமுகம். வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வரும் இவருக்கு தங்கம்மாள் (வயது 72) என்ற மனைவி உள்ளார்.
- கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினார்.
சேலம்:
சேலம் பழைய சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வரும் இவருக்கு தங்கம்மாள் (வயது 72) என்ற மனைவி உள்ளார். இன்று காலை 10.30 மணி அளவில் தங்கம்மாள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தங்கம்மாளிடம் விலாசம் கேட்பது போல் பேசியவாறூ அவரது கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கம்மாள் கூச்சலிட்டார்.
இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மோட்டார் சைக்கிள் தப்பிச்சென்ற வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பினார்.
இதுகுறித்து தங்கம்மாள் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கொள்ளை யர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
- சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஓசூர் பஸ்கள் நிற்கும் இடம் அருகே டைம் கீப்பருக்கான சிறிய ஷெட் உள்ளது.
- இதில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஓசூர் பஸ்கள் நிற்கும் இடம் அருகே டைம் கீப்பருக்கான சிறிய ஷெட் உள்ளது. இதில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தான்காடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகீ.(55). இவர் வீட்டு மாடியில் மிட்டாய் தயாரிப்பு கூடம் வைத்துள்ளார். இங்கு நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
- சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு வீட்டில் இருந்து நைசாக வெளியேறினார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி திருச்சி மெயின்ரோடு அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வனிதாவின் தந்தை மத்திய அரசின் தகவல் ெதாழிற்நுட்ப துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் அதில் கிடைக்கும் ஓய்வூதிய பணத்தை கொண்டு வனிதா தனது குடும்ப செலவை கவனித்து வந்தார். இதனிடைேய சுகுமாரின் பெற்றோர், வனிதாவை விட்டு பிரிந்து வருமாறும், வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி தங்களது வீட்டுக்கு வருமாறு சுகுமாரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் மாறிய சுகுமார், கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு ச வீட்டில் இருந்து நைசாக வெளியே றினார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, பல்வேறு இடங்க ளில் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து வனிதா, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில், தனது காதல் கணவரை மீட்டு தருமாறு கூறி கதறினார். அவர் அளித்த புகாரின் பேரில், மாயம் என வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசா ரணை மேற்கொண்ட தில் மனைவியை ஏமாற்றிவிட்டு சுகுமார், சேலத்தில் தலை மறைவாக சுற்றி திரிவது தெரியவந்துள்ளது. இதனால் அவரை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி கூலித்தொழிலாளி.
- மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 58) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாலை வேலையை முடித்து விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சென்றபோது, அவருக்குப் பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சரிந்து கீழே விழுந்து வெள்ளைச் சாமி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச் சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வரை தேடி வருகின்றனர்.
கியாஸ் நிறுவன தொழிலாளி சாவு
மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் கிராமம், காட்டு பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேணுகுமார் (43). இவர் மோகனூரில் உள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு செல்வதற்காக மோகனூர் - வளையப்பட்டி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேணுகு மாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பல னின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
- அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பஸ் டயர், வாலிபரின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. இதனால் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்த தும் பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யதில், டிரைவர் கவனக்குறை வாக பஸ்சை ஓட்டி வந்ததாக ெதரிய வந்தது. பஸ் மோதி பலியான வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இத னால் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. பலியானவர் கருப்பு நிற ேராஸ் கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்தி ருந்தார். நீல கலர் கட்டம் போட்ட லுங்கி அணிந்தி ருந்தார். அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பள்ளப்பட்டி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்த வாலிபர் பிணமாக கிடக்கும் காட்சி.






