search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 102.4 டிகிரி வெயில் பதிவு
    X

    சேலத்தில் 102.4 டிகிரி வெயில் பதிவு

    • அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற பின், வெயிலின் தாக்கம் குறையும்.
    • நடப்பாண்டு மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்படுகிறது.கோடை வெயில், கத்திரி வெயில்

    சேலம்:

    சேலத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து, கடந்த ஏப்ரல் 2-வது வாரத்தில் சேலத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வெப்ப நிலை பதிவானது.

    மே 1-ந்தேதி காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயின் தாக்கம் குறைந்தது.

    கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ந்தேதி தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் மே 8-ம் தேதிக்கு மேல் மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்பட்டது. சராசரியாக சேலத்தில் 100 முதல் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. அக்னி நட்சத்திரம் கடந்த 29-ம் தேதி நிறைவு பெற்றது.

    அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற பின், வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் நடப்பாண்டு மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. நேற்று காலையில் வெயில் அதிகமாக இருந்தது. 102.4 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்றும் வெயில் வாட்டி எடுத்தது.

    Next Story
    ×