என் மலர்
சேலம்
- வெங்க டேசன் (வயது 48). இவர் நேற்று இரவு குரங்குசாவடி யில் இருந்து மேம்பாலத்தில் ஏறி புதிய பஸ் நிலையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
- முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இவர் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
சேலம்:
சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டிரைவராக பணி புரிந்து வந்தவர் வெங்க டேசன் (வயது 48). இவர் நேற்று இரவு குரங்குசாவடி யில் இருந்து மேம்பாலத்தில் ஏறி புதிய பஸ் நிலையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இவர் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சென்டர் மீடியனில் மோதிய அவர், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீ சார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- (தேசிய தகுதி தேர்வு )- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டி.ஏ) சார்பில், ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப் பட்டு வருகிறது.
- இதில் சில அறிவியல் பாடப் பிரிவுக ளுக்கு மட்டும் சி.எஸ்.ஐ.ஆர். பிரத்யோகமாக நடத்துகிறது.
சேலம்:
இந்திய நாட்டில் பல்க லைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற விரும்புபவர்கள் நெட் (தேசிய தகுதி தேர்வு )- யு.ஜி.சி. தேர்வு எழுதுகி றார்கள். இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டி.ஏ) சார்பில், ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப் பட்டு வருகிறது. இதில் சில அறிவியல் பாடப் பிரிவுக ளுக்கு மட்டும் சி.எஸ்.ஐ.ஆர். பிரத்யோகமாக நடத்துகிறது.
முதுநிலை பட்டதாரிகள்
அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர், இள நிலை ஆராய்ச்சிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு அறிவிப்பு தேசிய தேர்வு முகமை கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வை எழுத கல்வி தகுதி முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த வர்கள் உள்பட நாடு முழுவ தும் முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் ஏராளமா னோர் விண்ணப்பித்தனர்.
சேலம், நாமக்கல்
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு நாளை (6-ந்தேதி) தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் 12 மணி வரை லைப் சயின்ஸ் பாடப்பிரி வுக்கும், நாளை மறுநாள் (7-ந்தேதி ) கெமிக்கல் சயின்ஸ் , கணித அறிவியல் உள்ளிட பாடப்பிரிவுக்கும், 8-ந்தேதி இயற்பியல் அறிவி யல், பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கும் தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை, இதன் இணையதளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதி விறக்கம் செய்து ெகாள்ளலாம்.
தேர்வு எழுத செல்ப வர்கள் ஹால்டிக்கெட்டுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மத்திய, மாநில அரசு வழங்கியுள்ள ஒர்ஜினல் அடையாள அட்டை ஏதேனும் ஒன்ைற எடுத்துச் செல்லுமாறு என்.டி.ஏ. அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த தேர்வு சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
- 484 ஆண் பயிற்சி காவலர்களுக்கு மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
- பயிற்சி வகுப்புகளை டி.ஜிபி. சைலேந்திரபாபு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மேட்டூர்:
தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற வர்களில் 484 ஆண் பயிற்சி காவலர்களுக்கு மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. பயிற்சி வகுப்புகளை டி.ஜிபி. சைலேந்திரபாபு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:-
பயிற்சி வகுப்புக்கு வந்துள்ள அனைவரும் ஏழை எளிய குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளீ ர்கள். பயிற்சிப் பள்ளியில் அளிக்கப்படும் கவாத்து பயிற்சி, சட்ட பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் படித்து சப் -இன்ஸ்பெக்டர், துணை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் தேர்ச்சி பெற வேண்டும். பொது மக்களிடம் அன்போடு பழக வேண்டும். காவல் நிலையங்களில் பணிபுரியும் பொழுது புகார் தரும் பொதுமக்களிடம் பணிவு டன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
21 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்
பயிற்சி வகுப்பில் தர்மபுரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உட்பட 21 மாவட்டங்களில் இருந்து பயிற்சி காவலர்கள் கலந்து கொண்டார்கள். 7 மாத அடிப்படை பயிற்சியாக கவாத்து பயிற்சி, சட்ட பயிற்சி, துப்பாக்கி சூடு பயிற்சி, ஒழுக்கம், பொது மக்களிடம் அணுகுமுறை பற்றிய சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு அதன் பிறகு தமிழக காவல் துறையில் பணியாற்றுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜேந்தி ரன் தலைமையில் துணை முதல்வர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.
- கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
சேலம்:
இந்தியாவில் மாம்பழம் சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழக அளவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்பட பல பகுதிகளில் மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த ஆண்டில் மாம்பழம் விளைச்சல் சீராக இருந்தது. குறிப்பாக மே மாதம் தொடக்கத்தில் மாம்பழம் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதனால் மாம்பழம் சீசன் ஓரிரு வாரத்தில் முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சேலம் கடைவீதி மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.
இந்த பகுதிகளில் இருந்து மாம்பழம் சேலம் மார்க்கெட்டுக்கும், இதைதவிர தமிழகத்தில் பிற இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, இமாம்பசந்த், குதாத், கிளிமூக்கு மாங்காய் வரத்து கணிசமாக இருந்தது. மே 15-ந் தேதிக்கு மேல் உச்சக்கட்டமாக வரத்து 70 முதல் 80 டன்னாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மார்க்கெட்டுக்கு 30 டன் மாங்காய்தான் விற்பனைக்கு வந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் மாங்காய் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் மாம்பழம் சீசனில் கடைசி ரகமான நீலம் வரத்து தொடங்கும். நீலம் பழம் இரு வாரத்திற்கு இருக்கும்.
இம்மாதம் கடைசியில் சீசன் முழுமையாக முடிந்து விடும். ஜூலையில் மொத்த மார்க்கெட்டுக்கே 3 முதல் 5 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழம் வரத்து இருக்கும். தற்போது மாம்பழம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
- ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து நேற்று 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து நேற்று 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 2267 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 1,805 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் நேற்று 103.73 கனஅடியாக இருந்தது. இன்று காலையும் அதே நிலையில் நீடிக்கிறது.
- நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார்.
- கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 27), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார். அவருடன் நண்பர் ஒருவரும் குடும்பத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்ததாக தெரிகிறது.
பூலாம்பட்டி கதவணை பகுதியில் குடும்பத்துடன் சுற்றி பார்த்த ஜனார்த்தனன், விசைப்படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தார். மேலும் படகு சவாரியின் போது 'செல்பி'யும் எடுத்து கொண்டனர். பின்னர் அங்குள்ள மோளப்பாறை பகுதிக்கு சென்ற ஜனார்த்தனன், குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்து விட்டு மனைவியுடன் காவிரி ஆற்றில் குளிக்க இறங்கினார்.
கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அபய குரல் கேட்டு குழந்தைகள் இருவரும் கரையில் இருந்து ஆற்றை பார்த்து அழுதனர்.
குழந்தைகளின் அழுகுரலும், அந்த தம்பதியின் அபய குரலும் கேட்டு சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கணவன்-மனைவியை மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். அதற்குள் ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் தண்ணீரில் மூழ்கினர்.
ஆற்றுக்குள் இறங்கிய மீனவர்கள் கணவன்-மனைவி இருவரையும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர். பெற்றோரின் உடல்களை பார்த்து குழந்தைகள் இருவரும் பரிதவித்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.
சேலம்:
சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி கந்தசாமி மகன் சதீஷ்குமார் தொழிலாளர்கள் நடேசன், பானுமதி ஆகியோர் பலியானார்கள்.
பலத்த காயம் அடைந்த 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் நேற்று மகேஸ்வரி (32) என்பவர் இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அருகே மேச்சேரியில் செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
- சேலம் கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் பிரசாத் தலைமையிலான அலுவலர்கள், மேச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே மேச்சேரியில் செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில், சேலம் கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் பிரசாத் தலைமையிலான அலுவலர்கள், மேச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, தொப்பையாறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்த அதிகாரிகள் முயன்றபோது, லாரியை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் தப்பியோடினார். இதையடுத்து லாரியை சோதனை செய்ததில் 3 யூனிட் செம்மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியை கைப்பற்றிய அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நாளை (5-ந்தேதி) முதல் கிச்சிபாளைம் பிரிவு அலுவலகம், களரம்பட்டி பிரிவு மற்றும் கிச்சி பாளையம் உபக்கோட்டம் அலுவலகம், ஆகிய 3 அலுவலகங்களும் எருமாபாளையம் பஞ்சாயத்து கிச்சிபாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்க உள்ளது.
- இந்த தகவலை சேலம் நகரம் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் சன்னியாசி குண்டு மெயின் ரோடு கணபதி நகரில் கிச்சிபா ளையம் பிரிவு மின்வாரிய அலுவலகம், களரம்பட்டி மெயின் ரோடு, வீரவாஞ்சி தெருவில் களரம்பட்டி பிரிவு உதவி பொறியாளார் அலுவலகம் (இயக்கமும், பராமரிப்பும்) மற்றும் திருச்சி மெயின் ரோடு ஜவுளி கடை பஸ் நிறுத்தத்தில் கிச்சிபாளையம் உபக்கோட்ட அலுவலகம் உதவி செயற்பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும்) அலுவலகம் இயங்கி வருகிறது.
நாளை (5-ந்தேதி) முதல் கிச்சிபாளைம் பிரிவு அலுவலகம், களரம்பட்டி பிரிவு மற்றும் கிச்சி பாளையம் உபக்கோட்டம் அலுவலகம், ஆகிய 3 அலுவலகங்களும் எருமாபாளையம் பஞ்சாயத்து கிச்சிபாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்க உள்ளது.
இந்த தகவலை சேலம் நகரம் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.
- ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
- அதிகாலை 5.30 மணி அளவில் நடுமேடு வழியாக நாவலூர் சென்ற போது பூனை ஒன்று சாலையின் குறுக்கே ஓடியதாக தெரிகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 54), இவர், ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு பிரவீன், பிரகதீஸ்வரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சென்னையில் பணிபுரிந்து வரும் பிரவீன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார். தலைவாசல் வந்து இறங்கிய அவர், தன்னை கூப்பிட வருமாறு தந்தைக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். அதன்பேரில் செல்வராசு மோட்டார் சைக்கிளில் தலைவாசலுக்கு வந்து மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 5.30 மணி அளவில் நடுமேடு வழியாக நாவலூர் சென்ற போது பூனை ஒன்று சாலையின் குறுக்கே ஓடியதாக தெரிகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் செல்வராசு, அவருடைய மகன் பிரவீன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த செல்வராசு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வராசு பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.
- தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் புதூர் பகுதி சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தவமணி (வயது 39).
இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.
பின்னர் மேற்கண்ட நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது, இதையறிந்த தவமணி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் திவாகர் (29).
இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு அதிகம் சம்பளம் தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து பதிவு செய்துள்ளார். அதற்கு சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்ட மர்ம நபர் சில டாஸ்-க்குகளை செய்யச் சொல்லி அதன் மூலம் பணத்தைக் கட்ட சொல்லியுள்ளனர். இதை உண்மை என்று நம்பி திவாகர் ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கட்டியுள்ளார்.
சில நாட்களில் வேலை தருவதாக கூறி குறுந்தகவல் வந்ததை தொடர்ந்து காத்திருந்த திவாகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத் தொடர்ந்து திவாகர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
- பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஏராளாமான போலீசார் ஷிப்ட் முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்த போது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






