என் மலர்
நீங்கள் தேடியது "Training School"
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
- அம்மன் கோவிலுக்கு சொந்தமான அர்ச்சகர் பயிற்சி பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டது.
மதுரை
தமிழகத்தில் 2006-ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அரசாணை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு மதுரை உள்பட தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக, அர்ச்சகர் பயிற்சி பள்ளி 2008-ம் ஆண்டு மூடப்பட்டது.
அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டில் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான அர்ச்சகர் பயிற்சி பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர்,
மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., தக்கார் கருமுத்து கண்ணன், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.