search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police training"

    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 429 போலீசாருக்கு கடந்த 8 மாதங்களாக திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் விழுப்பரம், திருவண்ணாமலை, சேலம், கடலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், ஆவடி, சேலம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளை சேர்ந்த 429 பேருக்கு காவலர் பயிற்சி மற்றும் நீச்சல், ஓட்டுனர், முதலுதவி, தீயணைப்பு, கமாண்டோ மற்றும் இதர பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    பயிற்சி வகுப்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த இரண்டாம் நிலை காவலர் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், கனகவல்லிபுரம் காவலர் பயிற்சி பள்ளி முதல்வரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான வீரபெருமாள், திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் பேசியதாவது:-

    தமிழ்நாடு காவல்துறையில் இளம் காவலர்கள் இணைந்து உள்ளனர். இந்த 429 பயிற்சி பெற்ற காவலர்களை மட்டுமல்லாது அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்துகிறேன். இந்த பயிற்சி பள்ளியில் 429 பேரில் 204 பேர் பட்டப்படிப்பு, 27 பேர் மேல்பட்டபடிப்பு, 83 பேர் பொறியியல். 57 பேர் பட்டயபடிப்பு, 5 பேர் ஐ.டி.ஐ. படிப்பு, 3 பேர் உடற்பயிற்சியில் பட்டய படிப்பு, 45 பேர் மேல்நிலை வகுப்பு, 9 பேர் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார்கள்.

    இது மிகப்பெரிய மாற்றமாகும். ஒரு காலத்தில் 8-ம் வகுப்பு படித்து போலீஸ் பணியில் சேர்ந்தனர். போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது. இது பொதுமக்களிடையே போலீசாரின் மதிப்பை அதிகப்படுத்தும்.

    பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நியாயமான சட்டத்திற்கு உட்பட்டு, எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயிற்சி கல்லூரி துணை முதல்வர் கணேஷ் குமார், கவாத்து பயிற்சியாளர் பாஸ்கர், முதன்மை சட்ட பயிற்சியாளர் கலிய சுந்தரம் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    • கோட்டை அகழியில் ஒத்திைக
    • பருவ மழை தொடங்க உள்ளதால் நடவடிக்கை

    வேலுார்:

    தமிழகத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழை வெளுத்து வாங்கி விட்டது. பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பி வழிகிறது. பல நிரம்பும் சூழலில் உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

    வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது தொடர்பான பயிற்சிகளை போலீசாருக்கு வழங்கும் படி தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாக தேவி உத்தரவிட்டார். இதையடுத்து, கடல் சாரா மாவட்டங்களில் போலீசா ருக்கு மீட்பு, முதலுதவி குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கும் பணிகள் 3 நாட்கள் நடக்க உள்ளது.

    இதன் அடிப்படையில் வேலுார் மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் சாதா ரண போலீசார் என 60 பேருக்கு பயிற்சிகள் அளிக் கும் பணிகள் நேற்று முன் தினம் தொடங்கியது.முதல் நாளான நேற்று முன்தினம் பாதிக்கப்பட் டவர்களுக்கு மீட்டு முதல் உதவி அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று வெள் ளத்தில் தத்தளித்தவர்களை மீட்பது குறித்து கோட்டை அகழியில் செயல் விளக்க மளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு கமாண்டோ பிரிவு வேலுார் பொறுப் பாளர் ஸ்ரீதர் தலைமையி லான குழுவினர் பயிற்சி அளித்தனர்.

    பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் கலக்கி வரும் துபாய் போலீசார், தற்போது பறக்கும் மோட்டார்சைக்கிள்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்து வருகின்றனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
    அபுதாபி: 

    உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையில் துபாய் முதன்மை வகிக்கிறது. மேலும், உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாகவும் துபாய் பார்க்கப்படுகிறது.

    பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் போலீசார் பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன்மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

    இந்த ஹோவர் பைக்கை ரோந்து பணிகளுக்காகவும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதத்திலும் பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனை ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் ஆள் இல்லாமலும் இயக்கலாம்.



    ஸ்கார்பியன் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் கலிபோர்னியாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

    ஹோவர்சர்ஃப் மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடத்துக்கு வானத்தில் பறக்கும் என்றும், மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2020-ம் ஆண்டில் இந்த பறக்கும் மோட்டார்சைக்கிள்களின் பயன்பாடு வரவுள்ளது என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
    ×