என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "issue of hall tickets"

    • (தேசிய தகுதி தேர்வு )- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டி.ஏ) சார்பில், ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப் பட்டு வருகிறது.
    • இதில் சில அறிவியல் பாடப் பிரிவுக ளுக்கு மட்டும் சி.எஸ்.ஐ.ஆர். பிரத்யோகமாக நடத்துகிறது.

    சேலம்:

    இந்திய நாட்டில் பல்க லைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற விரும்புபவர்கள் நெட் (தேசிய தகுதி தேர்வு )- யு.ஜி.சி. தேர்வு எழுதுகி றார்கள். இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டி.ஏ) சார்பில், ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப் பட்டு வருகிறது. இதில் சில அறிவியல் பாடப் பிரிவுக ளுக்கு மட்டும் சி.எஸ்.ஐ.ஆர். பிரத்யோகமாக நடத்துகிறது.

    முதுநிலை பட்டதாரிகள்

    அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர், இள நிலை ஆராய்ச்சிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு அறிவிப்பு தேசிய தேர்வு முகமை கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வை எழுத கல்வி தகுதி முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த வர்கள் உள்பட நாடு முழுவ தும் முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் ஏராளமா னோர் விண்ணப்பித்தனர்.

    சேலம், நாமக்கல்

    இந்த நிலையில் நடப்பாண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு நாளை (6-ந்தேதி) தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் 12 மணி வரை லைப் சயின்ஸ் பாடப்பிரி வுக்கும், நாளை மறுநாள் (7-ந்தேதி ) கெமிக்கல் சயின்ஸ் , கணித அறிவியல் உள்ளிட பாடப்பிரிவுக்கும், 8-ந்தேதி இயற்பியல் அறிவி யல், பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கும் தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை, இதன் இணையதளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதி விறக்கம் செய்து ெகாள்ளலாம்.

    தேர்வு எழுத செல்ப வர்கள் ஹால்டிக்கெட்டுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மத்திய, மாநில அரசு வழங்கியுள்ள ஒர்ஜினல் அடையாள அட்டை ஏதேனும் ஒன்ைற எடுத்துச் செல்லுமாறு என்.டி.ஏ. அறிவுறுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த தேர்வு சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    ×