என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே அடுத்தடுத்த விபத்தில் 2 பேர் பலி
- பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி கூலித்தொழிலாளி.
- மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 58) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாலை வேலையை முடித்து விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சென்றபோது, அவருக்குப் பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சரிந்து கீழே விழுந்து வெள்ளைச் சாமி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச் சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வரை தேடி வருகின்றனர்.
கியாஸ் நிறுவன தொழிலாளி சாவு
மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் கிராமம், காட்டு பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேணுகுமார் (43). இவர் மோகனூரில் உள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு செல்வதற்காக மோகனூர் - வளையப்பட்டி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேணுகு மாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பல னின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






