search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "placard"

    • மேட்டூர் அணைப் பூங்காவில் பொழுதுபோக்கவும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காகவும ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    • மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணைப் பூங்காவில் பொழுதுபோக்கவும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காகவும ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த மாதம் ஈரோட்டைச் சேர்ந்த ராஜா (வயது 48) என்பவர் பண்ணவாடி பரிசல் துறை அருகே அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேபோல, கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (20) என்ற இளைஞர் மாசிலாபாளையம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

    கோடை வெயிலின் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நீர்நிலைக்குச் சென்று குளிக்கும் போது, நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான விராலிக்காடு அருகே, 'ஆழமான பகுதி; குளிப்பதற்கு தடை' என எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.

    இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளிக்கின்றனர். இதனால் ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×