என் மலர்
சேலம்
- அம்மா உணவகம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் ஆற்றோரம் மார்க்கெட், அம்மா உணவ கம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பல னின்றி கடந்த 2-ந் தேதி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
- இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி உட்கோட் டத்தில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் துரை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் காரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மனோசூரியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலைச்செல்வன், பொன்னுமலை, மாரியப்பன் மற்றும் உதவிக்கோட்டப் பொறியாளர் கவிதா, உதவிப்பொறியாளர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் 200 மரக்கன்றுகளும், அயோத்தியாப்பட்டிணம் – பேளூர்- கிளாக்காடு சாலை பகுதியில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டன. 2 மாதத்திற்குள் 1,600 மரக்கன்றுகளும் நடப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வையாபுரி (வயது 85). இவருக்கு பூமாலை, துரைராஜ் (வயது 55) என்கிற 2 மகன்களும், சகுந்தலா என்ற 1 மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மூத்த மகன் பூமாலை இறந்துவிட்ட நிலையில், 2-வது மகன் துரைராஜூடன், வையாபுரி வாழ்ந்து வருகிறார். இதனிடையே இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, துரைராஜின் மனைவி மல்லிகா மற்றும் அவரது மகன் கோபி, மகள் சத்யா ஆகியோர் நேற்றிரவு காமக்காபாளையத்திற்கு சென்று விட்டனர்.
இதனால் தந்தை, மகன் இருவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சொத்து சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் துரைராஜ் வீட்டின் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் குடிபோதையில் படுத்து தூங்கினார். இதையறிந்த தந்தை வையாபுரி, வீட்டில் இருந்த பெரிய சுத்தியலை கொண்டு மகன் துரைராஜின் தலையில் பலமாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் துரைராஜ் துடி துடித்து பரிதாபமாக பலியானார்.
மகன் உயிரிழந்ததை அறிந்த வையாபுரி, கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி போலீசார், கொலையான துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, வையாபுரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சினையில் பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம், கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.
- 12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் இடையப்பட்டியில் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் மாவிளக்கு சுமந்து, அம்மனுக்கு துதி பாடிச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, சேலம் லட்சுமணூர் கோடங்கி நாயக்கனூர் கிராமிய கலை குழுவினரின் தேவராட்டம் நடைபெற்றது. வெண்ணிற வேட்டி சட்டை அணிந்து, தாரை தப்பட்டை, உறுமிமேள இசைக்கேற்ப நடனமாடிய கலைஞர்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.
புதன்கிழமை மகா சக்தி மாரியம்மன் ரதம் ஏறுதல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல், உருளைத்தண்டம் போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விமான வாகனம், ரதத்தேர் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் பரவசத்தை ஏற்படுத்தினர்.
நேற்று (வியாழக்கிழமை) கிராமிய தோல் இசைக்கருவி கள் முழங்க மகாசக்தி மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்து. ராஜவீதியில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கோகிலா, கணவனிடம் கோபித்துக் கொண்டு இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செல்லபிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவரது மனைவி கோகிலா (வயது 45). கோகிலாவின் அண்ணன், அதே பகுதியில் கடை தொடங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என கோகிலா காணவரிடம் அனுமதி கேட்டார்.
ஆனால் காசி விஸ்வநாதன், விழாவிற்கு போககூடாது என கோகிலாவை தடுத்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த கோகிலா, கணவனிடம் கோபித்துக் கொண்டு இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஓமலூர்-மேக்னசைட் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் கோகிலா உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோகிலா அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்தது. இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.
அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 715 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,178 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1040 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.54 அடியாக உள்ளது.
- மூதாட்டி மெகருன்னிசா கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணை பிடித்து தர்ம அடி கெடுத்தனர்.
- கழுத்து அறுக்கப்பட்ட தால் காயம் அடைந்த மெகருன்னிசாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சவுந்தர் நகரை சேர்ந்தவர் நசீர் (வயது 45), மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ளார்.
இவரது தாய் மெகருன்னிசா (73). இவர் மேல் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், மெகருனிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.
தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற அந்தப் பெண், கத்தியால் மெகருன்னிசாவின் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த தோடு சங்கிலியை பறித்தார்.
இதையடுத்து, மூதாட்டி மெகருன்னிசா கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணை பிடித்து தர்ம அடி கெடுத்தனர்.
பின்னர் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் லைன்மேடு தர்மலிங்கம் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்த பாஷா என்பவரது மனைவி ஜன்மா (32) என்பதும், ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கழுத்து அறுக்கப்பட்ட தால் காயம் அடைந்த மெகருன்னிசாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது.
- தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.
சேலம்:
சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சீனிவாசன் (வயது 38) என்பது தெரியவந்தது.
மேலும் அங்குள்ள திண்டில் அமர்ந்து மது குடித்த போது அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இது போல் ஏற்கனவே 4 பேர் அந்த பகுதியில் தவறி விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.
- பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார்.
சேலம்:
சேலம் சாமிநாயக்கன்
பட்டி அடிக்காரை பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி விஜயா (வயது 47). இவர் சம்ப வத்தன்று சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.
பஸ்சை விட்டு இறங்கி வேறு பகுதிக்கு செல்வ தற்காக பேருந்து நிலை யத்தில் காத்திருந்தபோது, பையில் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
மேட்டூர்:
ேசலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்பு மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளை போய் இருந்தது. இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள்.
- சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர்.
- அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.
சேலம்:
சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், திராவிட புலிகள் இயக்க தலைவர் சுப்பிர மணி தலைமையில் கிராம மக்கள் சுமார் 20 பேர், கலெக்டர் அலுவலக வாசல் அருகே அமர்ந்து பட்டா வழங்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், மாவட்ட வருவாய் அதிகாரி 3 மாதத்தில் பட்டா வழங்குவதாக கூறினார். ஆனால் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். எனினும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
- எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. சுற்றுப்புற பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக கல்வடங்கம் காவிரி நதிக்கரையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், பாலதண்டாயுதபாணி சாமி கோவில் சன்னதியில் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரம் முழங்க, இன்று காலை கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷம் முழங்க முருகப்பெ ருமானை வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடு களை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.






