என் மலர்
நீங்கள் தேடியது "ஒமன் suicide"
- கோகிலா, கணவனிடம் கோபித்துக் கொண்டு இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செல்லபிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவரது மனைவி கோகிலா (வயது 45). கோகிலாவின் அண்ணன், அதே பகுதியில் கடை தொடங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என கோகிலா காணவரிடம் அனுமதி கேட்டார்.
ஆனால் காசி விஸ்வநாதன், விழாவிற்கு போககூடாது என கோகிலாவை தடுத்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த கோகிலா, கணவனிடம் கோபித்துக் கொண்டு இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஓமலூர்-மேக்னசைட் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் கோகிலா உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோகிலா அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






