என் மலர்tooltip icon

    சேலம்

    • மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும்.
    • மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ந் தேதியான நாளை (திங்கட்கிழமை) அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சராசரியாக டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முன்கூட்டியே திறந்ததாலும், பருவமழை கைக்கொடுத்ததாலும், கடைமடை வரை நீர் பாய்ந்து, 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது.

    நடப்பாண்டிலும், இதேபோல், அதிக சாகுபடிக்கு திட்டமிட்டு, 80 கோடி ரூபாய் மதிப்பில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன. மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையில், 103.48 அடி நீர் மட்டம் இருப்பதால், குறிப்பிட்டபடி நாளை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை, மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார்.

    இதன் மூலம், 4 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக, விவசாயிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
    • இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கு கிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    குறுவை பாசனத்துக்கு

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர்

    அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்க ளில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    19-வது முறையாக

    இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்க ளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட

    வைகளை தூர்வா

    ரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ந் தேதியான நாளை(திங்கட்கிழமை) அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவ

    சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சராசரி

    யாக டெல்டா மாவட்டங்க ளில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முன்கூட்டியே திறந்ததாலும், பருவமழை கைக்கொடுத்ததாலும், கடைமடை வரை நீர் பாய்ந்து, 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது.நடப்பாண்டிலும், இதேபோல், அதிக சாகுபடிக்கு திட்டமிட்டு, 80 கோடி ரூபாய் மதிப்பில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன. மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையில், 103.48 அடி நீர் மட்டம் இருப்பதால், குறிப்பிட்டபடி நாளை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சராக பெறுப்பேற்ற பின், ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை, மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார்.இதன் மூலம், 4 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக, விவசாயிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.
    • நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் நுண்ணறிவு பிரிவு சார்பில் தலா ஒரு சப்- இன்ஸ்பெக்டர் நியமிக் கப்பட்டு, இவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்களின் உண்மை தன்மை குறித்த தக வல்களை திரட்டி நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லது உதவி கமிஷனர் மூலம் நேரடி யாக போலீஸ் கமிஷனருக்கு தகவல்களை தெரி விப்பார்கள். இந்த நிலையில் சேலம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக் டராக இருந்த கற்பகம், ஆட்சி மாற்றத்திற்கு பின் மாறுதல் செய்யப் பட்டார். அதை த்தொடர்ந்து இன்று வரை இன்ஸ்பெக்டர் இல்லாமல் இப்பிரிவு செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

    நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

    • சேலம் மாவட்டத்திற்கு கணக்கிலடங்காத திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது.
    • கருணாநிதி நூற்றாண்டின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று.

    சேலம்:

    சேலம், கருப்பூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. கருணாநிதியை முழு வசனகர்த்தாவாக மாற்றிய ஊர் சேலம். கருணாநிதி நூற்றாண்டின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று.

    சேலம் மாவட்டத்திற்கு கணக்கிலடங்காத திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற அப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
    • ஒரே நேரத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.

    தனி விமானம் மூலம் சேலம் வந்த அவரை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் இரவு அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு ரூ.170.32 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேட்டூரில் ரூ.6.7 கோடி செலவிலும், எடப்பாடியில் ரூ. 5 கோடி மதிப்பிலும் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

    போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுப்படுத்தும் பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் உத்தமசோழபுரம்-திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம்-வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.235.82 கோடி யில் 331 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.653 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் உள்பட சேலம் மாவட்டத்தில் ரூ.1,367.47 கோடியில் முடிவுற்ற 390 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.
    • சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை (வெண்கலம்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சேலம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அண்ணா பூங்கா வளாகத்தில் மண்டபம் கட்டுமான பணி மற்றும் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

    சுமார் 1,713 சதுரடி பரப்பில் மண்டபம் அமைக்கப்பட்டு, அங்கு 20 அடி உயரத்தில் பிரமாண்டமாக கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது கட்சியினர் மகிழ்ச்சி பொங்க, ஆரவாரத்துடன் கலைஞர் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். பிரமாண்ட கருணாநிதி சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

    கருணாநிதியையும், சேலத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திரையுலகில் உச்சம் தொடவும், அரசியல் அஸ்திவாரத்திற்கும் கருணாநிதி வாழ்வில் சேலம் முக்கிய பங்காற்றி உள்ளது. கருணாநிதிக்கு திருவாரூரை தாய் வீடு என்றால், சேலத்தை அவரது புகுந்த வீடு என்று குறிப்பிடும் அளவுக்கு சேலத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவாரூரில் வசித்தபோது நாடகத்துறையில் இருந்த அவர் திரைப்படத்துறைக்கு வந்தது சேலத்தில்தான்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் இணைந்து அவர் மந்திரி குமாரி படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு அவர் கதை வசனம் எழுத தொடக்கமாக அமைந்தது சேலம். அந்த காலத்தில் தனது தாயார் அஞ்சுகம் அம்மாளுடன் சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் கருணாநிதி ரூ.50 வாடகைக்கு குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சேலத்துக்கும் கருணாநிதிக்கும் உள்ல நெருங்கிய தொடர்பை அறியலாம். அவருக்கு சேலத்தில் பிரமாண்டமான சிலை அமைந்திருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை என்று தி.மு.க. தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    • கருணாநிதி நூற்றாண்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.
    • நாடும் நமதே நாற்பதும் நமதே. இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன் என்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    திராவிட இயக்கம் உருவாகிய மண் சேலம்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட உள்ளோம்.

    கருணாநிதி நூற்றாண்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். குறிப்பாக சேலத்தில் வென்றாக வேண்டும்.

    நாடும் நமதே நாற்பதும் நமதே. இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரலாம். அடுத்த ஆண்டு என அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    உழைப்பிறகான அங்கீகாரம் கட்சியினரை நிச்சயம் வந்து சேரும்.

    தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு செய்த திட்டங்களின் பட்டியலை அமித்ஷா வெளியிட வேண்டும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமித்ஷா விளக்க வேண்டும்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏராளமான திட்டங்களைப் பெற்றுத் தந்தோம் என தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி இரவு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நிறுத்தி விட்டு டிரைவர் சேகர் டிபன் சாப்பிட்டு வர சென்றுள்ளார்.
    • மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை அங்கு காணவில்லை.

    அன்னதானப்பட்டி:

    விழுப்புரம் மாவட்டம், கோம்பையாம் புலியூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதித்தன் (வயது 48). இவருக்கு சொந்தமான லாரியை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி இரவு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நிறுத்தி விட்டு டிரைவர் சேகர் டிபன் சாப்பிட்டு வர சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை அங்கு காணவில்லை.

    இது குறித்து அன்ன தானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், லாரி உரிமை யாளர் ஆதித்தன் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன்பேரில் ஓராண்டுக்கு பின்பு வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றாலை விசிறியின் இறக்கைகளை அதிக நீளமான 6-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றது.
    • போலீஸ் செக்போஸ்ட் எதிரே ஒன்றன் பின் ஒன்றாக 6 லாரிகளில் காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கைகளை அதிக நீளமான 6-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி க்கொண்டு சென்றது. போலீஸ் செக்போஸ்ட் எதிரே ஒன்றன் பின் ஒன்றாக 6 லாரிகளில் காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்றனர்.

    அதன் காரணமாக மிகவும் நீளமான இறக்கைகளை லாரிகளில் கொண்டு செல்வதால் அந்த லாரிக்கு பின்னால் வரிசையாக காவிரியாற்று பாலத்தின் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள், வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    நீண்ட நேரத்திற்கு பிறகு காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகள் மிகவும் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக தவிட்டுப்பாளையம் மேம்ப்பாலத்தின் வழியாக சென்றது. இதனால் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் முதல் காவிரி ஆற்று பாலம் அருகே மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் காற்றாலை விசிறி ரெக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு முழுவதும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்துவிட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு மேல் இந்த சாலை வழியாக செல்கின்றன.

    பகல் நேரங்களில் இந்த வாகனங்கள் செல்வதால் அடிக்கடி தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக உள்ளது.

    அதேசமயம் மேட்டூர் அணைக்கு, நேற்று விநாடிக்கு 1,040 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 865 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.48 அடியாக சரிந்து உள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை மாலை சேலம் வருகிறார்.
    • 2-ந் தேதி காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார்.

    சேலம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை (சனிக்கிழமை) மாலை சேலம் வருகிறார். தனி விமானம் மூலம் ஓமலூர் விமான நிலையத்துக்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட தி.மு.க. சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து அவர் சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும் சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

    கூட்டம் முடிந்ததும் கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஓய்வு மாளிகையில் தங்குகிறார். நாளை மறுநாள்(11-ந் தேதி) காலை 8 மணிக்கு அரசு பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டு செரி ரோடு, அம்பேத்கார் சிலை, தமிழ் சங்கம் வழியாக அறிஞர் அண்ணா பூங்கா வருகிறார்.

    அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.97 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு அடுக்கு பஸ் நிலையம், பெரியார் பேரங்காடி, வ.உ.சி மார்க்கெட், நேரு கலையரங்கம் ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார்.

    அதன் பின்னர் காலை 10 மணிக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு சட்டக் கல்லூரி, இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்து, முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    அன்று மாலை மேட்டூர் செல்லும் முதலமைச்சர், இரவில் அங்கு ஓய்வு எடுக்கிறார். 12-ந் தேதி காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார். பின்னர் விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். முதலமைச்சர் வருகையை ஒட்டி 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்காக கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமான பந்தல், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மைதானம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
    • டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை, அல்லிகுட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    மேலும் அந்த டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய கோகுல் கண்ணன், அவர் குறிப்பிட்ட வங்கியில் ரூ.1 லட்சத்தை செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு, அந்த மர்மநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுல் கண்ணன், இது குறித்து சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

    ×