மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,040 கனஅடியாக சரிவு

காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,040 கனஅடியாக சரிவு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்தது. இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.

அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 715 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,178 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1040 அடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.54 அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com