ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீரில் மிதந்த ஆண் பிணம்

சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது.தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.
ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீரில் மிதந்த ஆண் பிணம்
Published on

சேலம்:

சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சீனிவாசன் (வயது 38) என்பது தெரியவந்தது.

மேலும் அங்குள்ள திண்டில் அமர்ந்து மது குடித்த போது அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இது போல் ஏற்கனவே 4 பேர் அந்த பகுதியில் தவறி விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com