என் மலர்tooltip icon

    சேலம்

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய கோவை அணி 193 ரன்களை குவித்துள்ளது.

    சேலம்:

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்துவருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.

    இந்நிலையில், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று அரங்கேறும் முதல் தகுதிச்சுற்றில் லைகா கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் சச்சின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முகிலேஷ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    சச்சின் 46 பந்தில் 70 ரன்னும், முகிலேஷ் 27 பந்தில் 44 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு சச்சின், முகிலேஷ் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. சுரேஷ்குமார் 26 ரன்னும், சுஜய் 12 ரன்னும் எடுத்தனர்.

    திண்டுக்கல் அணியின் சுபோத் பதி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • மேச்சேரி அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காளிகவுண்டனூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 28). இவருக்கும், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகள் சந்தியா (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காளிகவுண்ட னூரில் வசித்து வந்தனர்.

    கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி நடந்தது.
    • இது தொடர்பாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை சவுடேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுபா (வயது 33). இவர் அதே பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது நிறுவனத்தில், ஆன்லைன் மூலமும் சேலை கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ப வரின் மகள் உமா மகேஸ்வரி வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆன்லைன் மூலம் சுபா மற்றும் இவரது கணவரின் சகோதரர் அருண் என்பவர் கடைகளில் இருந்து விற்ற சேலைகளின் பணம் ரூ.30 லட்சத்தை உமா மகேஸ்வரி தனது சகோதரர் மாணிக்கம் வங்கி கணக்கிலும், மும்பையில் உள்ள நண்பர் உமா பிள்ளை என்பவரது கூகுள் பே கணக்கிலும் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுபா சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இன்று காலை உமா மகேஸ்வரி, மாணிக்கம், உமா பிள்ளை ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ மாரியம்மன் சுவாமி சக்திகளை நிகழ்ச்சி
    • அலகு குத்துதல், கேரளா செண்டை மேளம் மற்றும் மேளதாளம் முழங்க ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல்

    ஆத்தூர்

    சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் சுவாமி, மாரியம்மன் சாமி தேர் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ மாரியம்மன் சுவாமி சக்திகளை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அதன் பின்னர் நேற்று முன்தினம் ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி கண் திறப்பு நடைபெற்றது. பல வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மேலதாளம் முழங்க நூற்றுக்கணக்கான தேங்காய் தட்டுகளுடன் பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபாடு செய்து சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் கைதட்டியும் சுவாமி ஆடியும் பரவசம் ஏற்படுத்தினார்கள். அதன் பின்னர் ஆயிரக்கணக்கா னோருக்கு சாமியின் முன் படையலில் வைக்கப் பட்டிருந்த பிரசாதத்தை வழங்கினார்கள்.

    இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக் கானோர் அதை வாங்கிச் சென்றனர். அதன் பின்னர் மதியம் 2 மணி அளவில் அலகு குத்துதல், கேரளா செண்டை மேளம் மற்றும் மேளதாளம் முழங்க ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடை பெற்றது.

    மாரியம்மன் சுவாமி பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு தேரில் வைக்கப் பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • போராட் டத்தில் சுழற்சி முறையில் நாள்தோ றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்
    • தென்னை, பனை மரங்க ளில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கண்ணா மூச்சி கிராமம் மூலப் பனங்காடு பகுதியில் தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலி யுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைத்தலை வர் முத்துசாமி தலைமையில் தொடங்கியுள்ள இந்த போராட் டத்தில் சுழற்சி முறையில் நாள்தோ றும் 100-க்கும் மேற்பட்ட விவசா யிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தென்னை, பனை மரங்க ளில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மேட்டூர் அணை யின் உபரி நீரை கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகே இருந்து உயர் அழுத்தம் மூலம் எடுத்து பாலமலை அடிவாரத்தை ஒட்டி குழாய்கள் மூலம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரை எடுத்து சென்று வழியில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி னால் சுமார் 25 ஆயி ரம் விவசா யிகள் பயன் பெறு வார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண் டும் . விவசாயிகளின் அனைத்து கடன்களை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம், உழவு மானியமாக விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளார்கள். இதில் பெண் விவசாயிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • காடையாம்பட்டி அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் குண்டுக்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இந்த சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள், கடந்த 6 ஆண்டு காலமாக பயிர் கடன், நகை கடன், மாடு வாங்க கடன் ஆகிய எந்த லோன் கேட்டாலும் இன்று, நாளை என்று அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஊர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • தமிழக அரசு சார்பாக சுற்றுலாத்துறை விருந்துகள் வழங்கப்பட உள்ளன.
    • இவற்றை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டு உள்ளது.

    சேலம்:

    உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விருதுகள் வருகிற செப்டம்பர் மாதம்  வழங்கப்படுகிறது.

    அதன்படி தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள் நாட்டு சுற்றுலா ஏற்பட்டாளர், சிறந்த பயண பங்குதா ரர், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம் உள்ளிட்ட 17 வகையான விருதுகள் வழங்கப்படுகிறது.

    விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாதுறை இணையதளத்தில் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும். இந்த தகவலை சுற்றுலாத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    • சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.
    • அவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம்- வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கிடையே நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி சேலம் ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் பெயர்? மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனால், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. இறந்த நபர் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை, அதே நிறத்தில் லுங்கி அணிந்திருந்தார்.

    பச்சை, வெள்ளை நிறம் கலந்த துண்டு வைத்திருந்தார். அவருடைய வலது பக்க கன்னத்தில் ஒரு கருப்பு மச்சம் காணப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். அவரை பற்றி அறிந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • விஞ்ஞானி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹசானே ஒச்சேயிட் என்பவரை திருமணம்
    • மாணவர்களுக்கு ரோபா தொழில்நுட்பம் குறித்து பயிற்சி

    வாழப்பாடி

    வாழப்பாடியைச் சேர்ந்த பெண் பொறியாளர் கிருத்திகா (30), ஜெர்மன் நாட்டில் சர்வதேச அளவிலான முன்னணி ரோபோ தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இதே துறையில் பணிபுரியும் விஞ்ஞானி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹசானே ஒச்சேயிட் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு, ரோபோ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அடிப்படை பயிற்சி அளிக்கும் நோக்கில், மையா மற்றும் ரோபாட்டிக் பவுன்டேசன் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    இந்த அமைப்பின் வாயிலாக வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணித மற்றும் எந்திரவியல் மன்றத்துடன் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரோபா தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். பள்ளி கணினி ஆய்வகத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். கணினி ஆசிரியர் ஸ்ரீமுனிரத்தினம் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலைஞர்புகழ், குணாளன், ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி பயிற்சியை தொடங்கி வைத்தார். பெண் பொறியாளர் கிருத்திகா மற்றும் இவரது ரோபோ தொழில்நுட்ப விஞ்ஞானி ஹசானே ஒச்சேயிட் ஆகியோர் ஜெர்மனியில் இருந்து, ரோபா தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

    விழாவில், ரோபோ தொழில்நுட்ப பயிற்சியாளர் செந்தில்குமார், சதீஸ்குமார் ஆசிரியர்கள் பரிமளா, ஜோதிசுடர், பழனிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து 2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ரோபோ வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க செய்ய திட்டமிட்டுள்ளதாக, பெண் பொறியாளர் கிருத்திகா தெரிவித்தார்.

    • சேலம் அருகே மேச்சேரி பகுதியில் வடமாநில இளம்பெண் பாட்டிலால் தாக்கப்பட்டார்.
    • இது தொடர்பாக செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    உத்தரபிரதேச மாநிலம் ஜெயின்பூர் குஷிநகரை சேர்ந்தவர் சைலேஷ். இவர் தனது மனைவி கிரண்தேவி (20). இந்த தம்பதியினர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி அமரத்தானூரில் வசித்து வருகின்றனர். கிரண் தேவி நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார்.

    அங்கு கடை உரிமையாளர் கலையரசியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவர் கலையரசி, கிரண்தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெளி மாநிலத்தில் இருந்து வந்து என்னையே எதிர்த்து பேசு கிறாயா? என கூறி சோடா பாட்டிலை எடுத்து உடைத்து கிரண்தேவியை தாக்கினார்.

    அதில் கிரண்தேவிக்கு காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவரை மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மேச்சேரி போலீ சில் கிரண்தேவி புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, செல்வராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த செல்வராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டிலும் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. பனிமூட்டமும் காணப்படுகிறது.

    இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தற்போது ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஏற்காட்டில் படகு குழாம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் லேடீஸ் சீட் ஜெண்ட் சீட், மீன் பண்ணை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்படுகிறது.

    இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பால வாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டுள் ளனர்.
    • மேட்டூர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பால வாடி வெடிகாரனுர் மற்றும் காவிரிபுரம் வெளியிட்ட பகுதிகளில் காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது. பால வாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டுள் ளனர். அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் ஏராள மான குழந்தைகளும் பாதிக் கப்பட்டுள்ளன.

    மேலும் மேட்டூர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறு வார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே காய்ச்சலை தடுக்க அதிகாரி கள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×