என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 28 நாட்களில் 22 கனஅடி சரிவு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 28 நாட்களில் 22 கனஅடி சரிவு

    • காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 400 கனஅடியாக தண்ணீர் வருகிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று 104 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 152 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து வெகுவாக சரிந்த நிலையில் தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஜூன் 12-ந் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை 81.32 அடியாக சரிந்தது. கடந்த 28 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 22 அடி சரிந்துள்ளது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது.

    அதேபோல் அணையின் நீர் இருப்பும் நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி குறைந்து வருகிறது. நேற்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 44.32 டி.எம்.சி மட்டுமே இருந்தது.

    மேட்டூர் அணையில் உள்ள மீன் வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் திட்டங்களுக்காகவும் அணையில் 9.5 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள தண்ணீர் 35 நாள் பாசனத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

    அதன் பிறகு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்தாலும் அங்குள்ள அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×