என் மலர்
சேலம்
- கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும் இருந்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சா லையில், ஆர்டரின் பேரில் மின் சாதன பொருட்கள் தயார் செய்து கொடுக்கப்படு கிறது. இந்த தொழிற்சா லையை சேலத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தொழிற்சாலையை ஒட்டியே மின் சாதன பொருட்களை சில்லரையாக விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார். ஓமலூரில் இருந்து மேச்சேரி செல்லும் சாலையில் கருப்பணம்பட்டி மேட்டில் இந்த கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு கடைய மூடிவிட்டு சென்ற கடை ஊழியர்கள் காலையில் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப் பட்டும் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர் கள் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைத்தி ருந்த பணம் 12 ஆயிரம் ரூபாய், கடையில் இருந்த காப்பர் மின் சாதன பொருட்கள், சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் ஆகிவை கொள்ளை போயிருந்தன.
இது தொடர்பாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசா ரும், ஓமலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக் கப்பட்டு கை ரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக் பட்டது. இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு சாமியார் தோட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
- பால் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்க ளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு சாமியார் தோட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில் கறவைமாடுகள், இறைச்சி ஆடுகள், மீன் மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள், பசுந்தீவனம் மற்றும் விதைகள் உற்பத்தி, பால் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்க ளும் ஒருங்கிணைக்கப்
பட்டுள்ளது.
இந்த கூட்டுப்பண்ணை முறையில் கிடைக்கும் கூடுதல் வருவாய், தீவனம் மற்றும் கழிவு மேலாண்மை, எளிய முறை சந்தைப்படு த்துதல், எந்திரங்கள் மற்றும் தொழிலாளர் மேலாண்மை குறித்து, சேலம், புதுக்கோட்டை மற்றும் ராம நாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உயரதிகாரிகள் குழுவி னர், நேரில் பார்வையிட்டு கலந்தாய்வு செய்தனர். கூட்டுப்பண்ணை முன்னோடி விவசாயி ஞான சேகரன் மற்றும் ஏத்தாப்பூர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவன தலைவர் ஜெயரா மன் ஆகியோரிடம், கூட்டுப் பண்ணையை நிர்வாக உத்திகள் குறித்து கேட்ட றிந்தனர்.
இதுகுறித்து சிங்கிபுரம் ஞானசேகரன் கூறுகையில், 'பல்வேறு பண்ணைகள், பல முன்னணி நிறுவனங்க ளின் வேளாண் அபிவிருத்தி கருவிகளை பார்வையிட்ட பிறகு, சிங்கிபுரத்தில் 5 ஏக்கர் தோட்டத்தில் ஒருங்கி ணைந்த கூட்டுப்பண்ணை அமைத்துள்ளேன். இதனால் செலவு குறைந்து கூடுதல் வருவாய்க்கு வழிவகை கிடைத்துள்ளது. மற்ற விவ சாயிகளும் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்க நிதியுதவியும் கூடுதல் வரு வாய் பெறுவதற்கு ஆலோ சனை வழங்க தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன் வர வேண்டும் என்றார்.
- சேலம் மாநகர ஆயுதப் படை போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
- மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
சேலம்:
சேலம் மாநகர ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சின்னண்ணன் (வயது 40). இவர் லைன்மேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்தவர் மதியம் 12.45 மணி அளவில் ஆயுதப்படை மைதானத்தில் சக காவலர்களுடன் பணியில் இருந்தார். அப்போது சின்னண்ணன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதைக் கண்ட சக காவலர்கள் உடனடியாக சின்னண்ணனை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சின்னண்ணன் மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து போன சின்னண்ணனுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் போலீஸ் மரியாதையுடன் இன்று சின்னண்ணன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. சின்னண்ணனுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
- புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கூத்தாண்டவர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
- நேற்று திருநங்கைகள் கூத்தாண்டவர் சுவாமி முன்னிலையில் திருநங்கை கள் திருமண நிகழ்ச்சி நடந்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கூத்தாண்டவர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் கூத்தாண்டவர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.
நேற்று திருநங்கைகள் கூத்தாண்டவர் சுவாமி முன்னிலையில் திருநங்கை கள் திருமண நிகழ்ச்சி நடந்தது. பூசாரி தாலி எடுத்து கொடுக்க திருநங்கை கள் அதை கழுத்தில் கட்டிக் கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருநங்கைகள் கையால் ஆசி பெற்று திரு நீரு பெற்றுச் சென்றனர். அதன் பிறகு மானாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கை ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ரேசன் கடை ஊழியர் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார்.
- அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
சேலம்:
சேலம் முகமது புறா ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாஜில் பிகர் அலி (வயது 65). ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவர் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. நேற்று இரவு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்து அந்த பகுதியினர் சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விஷம் குடித்த நிலையில் அவர் இறந்து கிடந்தார்.
மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது .
அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு, பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் கோட்டம் சார்பில் சுபமுகூர்த்தத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 10-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம்:
சேலம் கோட்டம் சார்பில் சுபமுகூர்த்தத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 10-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் புறநகர் பெங்க ளூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திரு வண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து தடம் நீட்டிப்பு வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படுகின்றன.
இது தவிர பயணியர் வசதிக்கு அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம் வழியாகவும் முன்பதிவு நடக்கிறது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரி சலை தவிர்க்கலாம் என்று அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டபெரியாம்பட்டி கிராமத்தில் உள்ள நச்சுவா யனூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு உள்ளது. இதில், தற்போது 50-க்கும் மேற் பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கிராம பொது நிலம் உள்ளது. இங்கு அம்மன் கோவிலும் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியை சுற்றிலும் கடந்த ஆறு மாதமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், கிராமத்தில் பெய்யும் மழைநீரும் கசிவுநீரும் வந்து இங்கே தொடர்ந்து தேங்கி நிற்கிறது.
அங்கு மரங்கள் இருப்ப தால், மரத்தில் இருந்து உதிரும் இலைகள் தண்ணீ ரில் அழுகி அந்த பகுதி துர் நாற்றம் வீசுகிறது. மேலும், ஈக்கள் கொசுக்கள் தொல் லையும் அதிகரித்து காணப் படுகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல கிராமத்தின் பொது காரியங்கள், திரு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இந்த இடத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மருத்துவ முகாம் கள், கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற முடி யாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் கிராம மக்களும் அவதிப்படுகின்றனர்.
மேலும், அங்குள்ள வாக்குச்சாவடி மைய பழைய கட்டிடம் மிகவும் பாதிப்ப டைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், சுவர்களும், ஓடுகளும் உடைந்து விழுந்து வருகிறது.அதனால், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், தண்ணீர் செல்லும் கால் வாய்களின் ஆக்கிரமிப்பு களை அகற்றி குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளை விக்கும் பல்வேறு பொருட்க ளையும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் இ.நாமில் இணைக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் பொருட் களை சந்தை படுத்த முடியும்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இந்திராநகரில் வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளை விக்கும் பல்வேறு பொருட்க ளையும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் இ.நாமில் இணைக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் பொருட் களை சந்தை படுத்த முடியும்.
இந்த நிலையில், இ நாம் மூலம் தேங்காய் கொப்பரை பருப்பு மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில்,1.253 மெட்ரிக் டன் எடையுள்ள 39 மூட்டை கொப்பரை பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 12.53 குவிண்டால் அளவிற்கு இருந்த கொப்பரை பருப்பு 83 ஆயிரத்து 548 ரூபாய்க்கு வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
இதில், ஒரு கிலோ அதிக விலையாக 70 ரூபாய் 55 காசுக்கும், குறைந்தவிலை யாக 55 ரூபாய் 75 காசுக்கும், சராசரியாக 66 ரூபாய் 25 காசுக்கும் விற்பனை செய்யப் பட்டது. மற்ற இடங்களை விட ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப் பரை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படு கிறது. அதனால், கொப்பரை உற்பத்தியாளர்கள் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.
அதேபோல பல்வேறு விளைபொருட்களையும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடை யலாம். தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்ப தால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இங்கு அதிகளவில் விவசாய விலை பொருட்களை இருப்பு வைப்பதற்கான இட வசதி உள்ளது.
மேலும், இங்கு இருப்பு வைக்கப்படும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஈட்டு கடன் வழங்கபடுகிறது. அதனையும் விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று ஓமலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
- வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
- புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திருக்கோவில்களில் எளி யோருக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ், சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
சேலம் மண்டல இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, வாழப் பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கர வர்த்தி, பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, துணைத்தலைவர் பேபி, தி.மு.க. நகர செயலா ளர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் கஸ்தூரி, ஆய்வா ளர் சங்கர் ஆகியோர் புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதி கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப் பட்டது.
அரசு சார்பில் தங்கத்தா லியுடன் திருமணம் நடத்தி வைத்ததோடு, புதிய குடித் தனத்திற்கு தேவையான அனைத்து சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. இதற்கு தமிழக அரசுக்கு புதுமணத் தம்பதிகளும், பெற்றோர்க ளும் நன்றி தெரிவித்தனர்.
- பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை.
- தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள், காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குள் நுழைந்ததும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது.
பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை. குடும்பத்தோடும், ஜோடியாகவும் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, படகு இல்லத்தில் பல்வேறு ரகங்களில் படகுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
10 பேர் அமர்ந்து செல்லக்கூடிய மோட்டார் பொருத்திய விசைப்படகுகள், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயக்கப்படும் துடுப்பு படகுகள், தாங்களே இயக்கக்கூடிய மிதிபடகுகள், குழந்தைகளை கவரும் விதமாக மிக்கிமவுஸ், அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதிபடகு போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உல்லாச சவாரி செய்வது வழக்கம்.
தற்போது, புதிய வரவாக நவீன படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படகு குழாம் அதிகாரிகள் கூறுகையில், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயங்கக்கூடிய மிதிவண்டி வடிவிலான படகு புதிய வரவாக வந்துள்ளது. தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த படகு வந்த முதல் நாளிலேயே, ஏராளமானோர் சவாரி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர். முழங்கால் வலி ஏற்படாத வகையில், இந்த படகு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். வயதானவர்கள் கூட சுலபமாக இயக்க முடியும். சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பினை பொறுத்து, கூடுதல் படகுகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 174 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 700 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை முதல் விநாடிக்கு 500 கன அடியாக சரிந்துள்ளது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 174 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 84.34 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 83.35 அடியாக சரிந்தது.
- கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
- 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்துவருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.
இந்நிலையில், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று அரங்கேறும் முதல் தகுதிச்சுற்றில் லைகா கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
அந்த அணியின் சச்சின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முகிலேஷ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சச்சின் 46 பந்தில் 70 ரன்னும், முகிலேஷ் 27 பந்தில் 44 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு சச்சின், முகிலேஷ் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. சுரேஷ்குமார் 26 ரன்னும், சுஜய் 12 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் அணியின் சுபோத் பதி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக சரத் குமார் அரை சதம் அடித்து 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, பூபதி குமார் 25 ரன்களிலும், பாபா இந்திரஜித் 21 ரன்களிலும், சுபோத் பாதி 14 ரன்களிலும், சிவம் சிங் 10 ரன்களிலும், மதிவாணன் 9 ரன்களிலும், ஆதித்யா கணேஷ் 5 ரன்களிலும், வருண் சக்ரவர்த்தி 4 ரன்களிலும் சரவண குமார் மற்றுமு் கிஷோர் தலா 2 ரன்களிலும், விமல் குமார் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்ட முடியாமல் திண்டுக்கல் அணி தோல்வியடைந்தது.
இதனால், லைகா கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் லைகா கோவை கிங்ஸ் நுழைந்தது.
https://www.dailythanthi.com/Sports/Cricket/lyca-kovai-kings-won-by-30-runs-against-dindigul-dragons-1002903






