என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்த்தல்"

    • வன உயிரினங்களை வளர்த்தல் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்தல் ஆகிய வற்றை ஒழுங்குபடுத்து வதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.
    • உயிரி னங்களை வளர்ப்பவர்களுக் கான உரிம விதிகளின்படி சென்னையில் உள்ள தலைமை வன உயிரின காப்பாளரிடம் உரிமம் பெற வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பாண்டா மற்றும் கரடி, சிற்றி னங்கள் நாய், ஓநாய், பூனை, குரங்கு, அணில், கிளிகள், ஆந்தை, புறா உள்ளிட்ட வன உயிரினங்களை வளர்த்தல் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்தல் ஆகிய வற்றை ஒழுங்குபடுத்து வதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்த விதிகளின் கீழ் தமிழ்நாட்டில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அட்ட வணை 4-ல் (இணைப்பு-1) உள்ள உயிரினங்களை வளர்த்து வருபவர்கள் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்பவர்கள், புதிதாக இந்த தொழிலில் ஈடுபட விரும்புவோர் உயிரி னங்களை வளர்ப்பவர்களுக் கான உரிம விதிகளின்படி சென்னையில் உள்ள தலைமை வன உயிரின காப்பாளரிடம் உரிமம் பெற வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை நேரடியா கவோ அல்லது தலைமை வன உயிரின காப்பாளர் அலுவல கம், கன்னிகாபுரம் செக் போஸ்ட் அருகில், கிண்டி, சென்னை-32 என்ற முகவ ரிக்கு பதிவு அஞ்சல் மூலம் வருகிற 24-ம் தேதிக் குள் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பத்துடன் முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை நகல், டிஜி எப்டி (DGFT) உரிமச் சான்றி தழ் (வேண்டி இருப்பின்), தலைமை வன உயிரின காப்பாளரால் வழங்கப்பட்ட தடையின்மை சான்றிதழ் (வேண்டி இருப்பின்), தேவை யான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதற்கான புகைப்படங் கள் (கால்நடை மருத்துவ வசதி, தனிமைப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி வசதி மற்றும் அனுமதி தேவைப்ப டும் உயிரினங்களின் புகைப்ப டம்) ஆகியவற்றை சேர்த்து அனுப்ப வேண்டும். மேலும் உரிமம் பெறு வதற்காக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சென்னை என்ற பெயரில் ரூ.25 ஆயிரத்துக்கான வரைவோலை அல்லது மின் செலுத்துகை முறையில் செலுத்தியதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×