என் மலர்tooltip icon

    சேலம்

    • தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது.
    • இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசுவதுடன், மழை பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று மாலையில் மேட்டூர், காடையம்பட்டி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    இதில் மேட்டூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரத்தில் கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மா பேட்டை, புதிய பஸ் நிலை யம், 5 ரோடு பகுதிகளில் மழை பெய்தது. இதில் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- மேட்டூர்-34, காடையாம்பட்டி-9, சேலம் - 8.7, பெத்தநாயக்கன் பாளையம் - 5, ஓமலூர்- 4.6, ஆத்தூர்- 4 ஏற்காடு - 4, கெங்கவல்லி - 2, எடப்பாடி - 1, சங்ககிரி - 12 என சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 73.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இன்று கனமழை பெய்யும்

    இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதி களில் மேலடுக்கில் வளி மண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் மேலும் மழை தீவிரமடைந்துள்ளது.

    இதையொட்டி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்க

    செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
    • அதன்படி சேலம்‌ மாநகராட்சிக்கு உட்பட்ட 14 ரேசன் கடைகளில்‌ முதற் கட்டமாக மலிவு விலையில்‌ தக்காளி விற்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 ரேசன் கடைகளில் முதற் கட்டமாக மலிவு விலையில் தக்காளி விற்கப்படுகிறது.

    சேலம் மாநகராட்சி கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், மத்திய மாவட்ட தி.மு.க. செய லாளருமான ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பின் னர் அவர் கூறியதாவது:-

    தக்காளி உள்ளிட்ட காய் கறிகள் மற்றும் அத்தி யாவ சிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற் கொண்டு வருகிறார். குறிப்பாக கூட்டு றவு பல்பொருள் அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்தி டும் திட்டம் விரிவுப்படுத்தப் படும் என தெரிவித்திருந் தார்கள். சேலம் மாநக ராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், டாக்டர்.சுப்பராயன் சாலை, சுப்பரமணிய நகர், பிடாரி அம்மன் கோவில் வீதி, புது திருச்சி கிளை சாலை, தாதம்பட்டி, திருவாக்கவுண் டனூர் , சீரங்கப்பாளையம், தேவாங்கபுரம், சாமிநாத புரம், ஜவகர் மில் காலனி, ஸ்வர ணபுரி மற்றும் மெய்யனூர் ஆகிய இடங்களில் 14 ரேசன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கப் பட்டுள்ளது.

    கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்று தமிழ்நாடு அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில் காய் கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவ லர்கள் தனிகவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் நுகர்வோர்க ளும் விவசாயி களும் பயன் பெறும் வகை யில் காய்கறி களை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட் களை பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங் கள் சட்டத்தின் கீழ் உரிய நட வடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தார். மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக் குமார் உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெங்களூரில் இருந்து சேலம் வழியே வேளாங் கண்ணிக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • இந்த ெரயில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    பெங்களூரில் இருந்து சேலம் வழியே வேளாங் கண்ணிக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

    மறு மார்க்கத்தில் நள்ளி ரவு 12.30 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது.

    கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்த ெரயில் நின்று செல்லும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது.
    • வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறு கிறது. இந்த முகாமில் களப்பணியாளர்களாக பங்கேற்கும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, பேளூர் வட்டார சுகாதார நிலையத்தின் வாயிலாக தொழுநோய் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகா மிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். மருத்துவமல்லா வட்டார மேற்பாற்வையாளர் சரவணன் தொழுநோய் அறிகுறிகள், கண்டறிதல்கள், முகாமிற்கான அறிக்கைகள் தயாரித்தல், வீடுவீடாக சென்று தொழுநோய் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து தல் மற்றும் நோயை கண்டறி யும் முறை குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளித்தார்.

    சேலம் தூயமரியன்னை மருத்துவமனை தொழு நோய் பிரிவு ஒருங்கி ணைப்பாளர் ஆண்டனி, தொழுநோய் பாதிப்புகள் மற்றும் அரசு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். இந்த பயிற்சி முகாமில், வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் சுகாதார ஆய்வாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

    • வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார்.
    • இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார். இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாழப்பாடி அடுத்த மலை யாளப்பட்டி கிராமத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாரா யத்தை போலீசார் பறிமுதல் செய்த னர். இதை விற்பனை செய்வ தற்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தொழி லாளி நாச்சி (வயது 49) என்ப வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
    • நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். அதன்படி கடந்த ஜூன் 12-ந்தேதி 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.

    பின்னர் பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு குறைத்தும் அதிகரித்தும் திறந்து விடப்பட்டு வந்தது. அதன்படி நீர் திறப்பு கடந்த 2-ந்தேதி 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் 7-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் முதல் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. குறிப்பாக 200 கன அடிக்கும் கீழ் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலையில் 198 கன அடியில் இருந்து நீர்வரத்து இன்று காலையில் 161 கன அடியாக சரிந்துள்ளது.

    நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. நேற்று 80.29 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 79.40 அடியாக சரிந்துள்ளது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர் இருப்பு 41.36 டி.எம்.சி.யாக உள்ளது.

    • குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோவில் ஊராட்சி வேல கவுண்டனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய நாதன் (வயது 32). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஹரிஷ் என்ற 3 வயது ஆண்குழந்தை, ரக் ஷிதா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.

    இவரது வீட்டிற்கு முன்பு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தண்ணீர் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் மின் மோட்டாரை பழுதுபார்க்க கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இவரது மனைவி திவ்யா வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக தண்ணீர் டேங்க் மூடியை அகற்றிவிட்டு தண்ணீரை எடுத்து துணி துவைத்து கொண்டு இருந்தார்.

    அப்போது குழந்தை ஹரிஷ் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். இதை கவனிக்காத திவ்யா துணி துவைத்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.

    அக்கம் பக்கம் தேடி பார்த்து விட்டு பின்பு தொட்டியில் பார்த்த போது குழந்தை தொட்டியில் கிடப்பதை பார்த்து கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் பகுதியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம்
    • பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்கும் வகையில், தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து குறுவள மைய அளவில் பயிற்சி கூட்டம் நடக்கிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

    • சண்முகத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் துரைசாமியின் மனைவி சந்தியாவுடன் கடந்த சில மாதங்களாக பழக்கம்
    • இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமம் வெள்ளையம்பாளையம் பெருமாகவுண்டன்வலவு பகுதியைச் சேர்ந்தவர் பாட்டப்பன் மகன் சண்முகம் (வயது 35). இவருக்கு திருமணமாகி காந்திமதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    சண்முகம், தனது தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துக் கொண்டு வீட்டிலேயே பவர்லூம் தறி போட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், சண்முகத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் துரைசாமியின் மனைவி சந்தியாவுடன் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளனர்.

    இது குறித்து தந்தை பாட்டப்பனுக்கு தெரிந்து ஒரு மாதத்திற்கு முன்பு மகனை கண்டித்துள்ளார். அதற்கு சண்முகம் இனிமேல் அந்த பெண்ணுடன் பேச மாட்டேன் என்றும் ஒழுங்காக இருப்பதாக கூறியுள்ளார்.இந்நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி சண்முகம் மற்றும் எதிர் வீட்டில் வசிக்கும் சந்தியாவை காணவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்து அவர்களை கண்டுபிடிக முடியவில்லை.

    நேற்று சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து பாட்டப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிந்து சண்முகம் மற்றும் சந்தியாவை தேடி வருகின்றனர். விசாரணை யில், சந்தியாவிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. அதுபோல் சண்முகத்துக்கும் குழந்தைகள் உள்ளன.இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இவருக்கும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாணவியின் காதலன் நேற்று மதுரையில் அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றார். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. உடனே மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று மாணவியை சேலத்திற்கு அழைத்து வந்தனர்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியதும் மாணவி கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறினார். இதனை நம்பிய மாணவியின் பெற்றோர் கழிவறை அருகே காத்திருந்தனர் .

    ஆனால் வெகு நேரமாகியும் மாணவி திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அங்கிருந்து மாணவி தப்பியதை அறிந்து கண்ணீர் விட்டனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரண நடத்தி மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    • மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
    • இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண் மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை கட்டி ட பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அருண் மகேஸ்வரன் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர்.
    • இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் முள்ளுவாடிகேட் அருகே உள்ள டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி நிலைய அதிகாரிகள் டவுன் போலீசாருக்கும், சேலம் ெரயில்வே பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து ெரயில்வே போலீசார், டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணா பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் .

    அழுகிய நிலையில் காணப்பட்ட நபர் வயது 45 இருக்கலாம் எனவும், அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    ரெயில் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது வாங்கி குடித்துவிட்டு மது போதையில் அவர் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்க ளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    எப்போதும் பரபரப்பாக காணக்கூடிய டவுன் ெரயில் நிலையத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×