என் மலர்
நீங்கள் தேடியது "Tomatoes for sale"
- பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
- அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 ரேசன் கடைகளில் முதற் கட்டமாக மலிவு விலையில் தக்காளி விற்கப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் தக்காளி விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 ரேசன் கடைகளில் முதற் கட்டமாக மலிவு விலையில் தக்காளி விற்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், மத்திய மாவட்ட தி.மு.க. செய லாளருமான ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பின் னர் அவர் கூறியதாவது:-
தக்காளி உள்ளிட்ட காய் கறிகள் மற்றும் அத்தி யாவ சிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற் கொண்டு வருகிறார். குறிப்பாக கூட்டு றவு பல்பொருள் அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்தி டும் திட்டம் விரிவுப்படுத்தப் படும் என தெரிவித்திருந் தார்கள். சேலம் மாநக ராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், டாக்டர்.சுப்பராயன் சாலை, சுப்பரமணிய நகர், பிடாரி அம்மன் கோவில் வீதி, புது திருச்சி கிளை சாலை, தாதம்பட்டி, திருவாக்கவுண் டனூர் , சீரங்கப்பாளையம், தேவாங்கபுரம், சாமிநாத புரம், ஜவகர் மில் காலனி, ஸ்வர ணபுரி மற்றும் மெய்யனூர் ஆகிய இடங்களில் 14 ரேசன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கப் பட்டுள்ளது.
கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்று தமிழ்நாடு அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில் காய் கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவ லர்கள் தனிகவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் நுகர்வோர்க ளும் விவசாயி களும் பயன் பெறும் வகை யில் காய்கறி களை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட் களை பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங் கள் சட்டத்தின் கீழ் உரிய நட வடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார். மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக் குமார் உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






