என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict: தந்தை போலீசில் புகார் The father filed a complaint with the police"
- சண்முகத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் துரைசாமியின் மனைவி சந்தியாவுடன் கடந்த சில மாதங்களாக பழக்கம்
- இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமம் வெள்ளையம்பாளையம் பெருமாகவுண்டன்வலவு பகுதியைச் சேர்ந்தவர் பாட்டப்பன் மகன் சண்முகம் (வயது 35). இவருக்கு திருமணமாகி காந்திமதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
சண்முகம், தனது தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துக் கொண்டு வீட்டிலேயே பவர்லூம் தறி போட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், சண்முகத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் துரைசாமியின் மனைவி சந்தியாவுடன் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளனர்.
இது குறித்து தந்தை பாட்டப்பனுக்கு தெரிந்து ஒரு மாதத்திற்கு முன்பு மகனை கண்டித்துள்ளார். அதற்கு சண்முகம் இனிமேல் அந்த பெண்ணுடன் பேச மாட்டேன் என்றும் ஒழுங்காக இருப்பதாக கூறியுள்ளார்.இந்நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி சண்முகம் மற்றும் எதிர் வீட்டில் வசிக்கும் சந்தியாவை காணவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்து அவர்களை கண்டுபிடிக முடியவில்லை.
நேற்று சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து பாட்டப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிந்து சண்முகம் மற்றும் சந்தியாவை தேடி வருகின்றனர். விசாரணை யில், சந்தியாவிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. அதுபோல் சண்முகத்துக்கும் குழந்தைகள் உள்ளன.இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






