என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: மாணவியின் காதலன் நேற்று மதுரையில் அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றார்"

    • இவருக்கும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாணவியின் காதலன் நேற்று மதுரையில் அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றார். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. உடனே மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று மாணவியை சேலத்திற்கு அழைத்து வந்தனர்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியதும் மாணவி கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறினார். இதனை நம்பிய மாணவியின் பெற்றோர் கழிவறை அருகே காத்திருந்தனர் .

    ஆனால் வெகு நேரமாகியும் மாணவி திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அங்கிருந்து மாணவி தப்பியதை அறிந்து கண்ணீர் விட்டனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரண நடத்தி மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    ×