என் மலர்
சேலம்
- விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண் டாபுரம் பேருந்து நிலையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
நங்கவள்ளி:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜலகண்டாபுரம் பேருந்து நிலை யத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
இதில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 கொள்முதல் செய்ய வேண்டும், அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், சேலம் மாவட் டத்தில் நிபந்தனை இன்றி விவசாயிகளிட மிருந்து தேங்காய் கொப்பரையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி, வரியை ரத்து செய்ய வேண்டு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட் டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சேலம்:
அரியலூர் மாவட்டம் அந்தோணியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் மீது சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரை போலீசார் தேடி வந்தனர். கோர்ட்டிலும் அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. இதனால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சேலம் டவுன் ரெயில்வே போலீ சாரிடம் நேற்று இரவு அவர் சிக்கினார். அவரை ரெயில்வே போலீசார் அஸ்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பாஸ்கரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.
- நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.
பின்னர், நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென் றார் . அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீ சாரிடம் என் மோட்டார் சைக்கிளை பாதுகாக்காமல் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டபடி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதை அடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி, வாகனத்திற்கான ஆவணங்களை எடுத்து வரு மாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதற்கு இடையே கலெக்டர் அலுவலகம் வந்த அவர், பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார், ராமரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை பள்ளப் பட்டி போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இந்த சம்பவம் நேற்று இரவு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
- தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது.
சேலம்:
மத்திய ஆயுதப்படை சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது. மின்னணு ஹால்டிக்கெட் எனப்படும் இ-அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள்https://www.crpfonline.com என்ற சி.ஆர்.பி.எப் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த இ-அட்மிட்டின் அச் சிடப்பட்ட நகலை கொண்டு தேர்வு மையத்து கொண்டு மாறு வர வேண்டும். ஹால்டிக்கெட் கொண்டு வராத விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார் கள் என மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) அறிவுறுத்தி உள்ளது.
- தீவட்டிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தீவட்டிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார்.
பொம்மியம்பட்டியில் கடந்த 15 ஆண்டு காலமாக மூடியுள்ள மாரியம்மன் கோவிலை திறக்க கோரியும், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், எலத்தூர் கிராமத்தில் பட்டா வழங்காமல் கடந்த 20 ஆண்டாக காலம் தாழ்த்தி வருவது கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகம், மணிக்குமார், வீரமணி, முனுசாமி, மதியழகன், தெய்வானை, வீரம்மாள், ஆராயி, நகர செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் சின்ன பார்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூகிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.
நங்கவள்ளி:
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் சின்ன பார்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூகிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.
உள்ளாட்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் 152, 139, 115, 10 ஆகிய அரசாணைகளை திரும்ப பெற வேண்டும், உள்ளாச்சி பணிகளில் காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,
ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
- அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நங்கவள்ளி:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
நீர்வரத்து வினாடிக்கு குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 161 கன அடியாக இருந்தது. இன்று இது 107 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று 79.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 78.51அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 40.48 டி.எம்.சி.யாக உள்ளது. ஒரு மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 24.84 அடி சரிந்துள்ளது.
வரும் காலங்களில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதால், பருவமழையை எதிர்பார்த்து டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்தது.
அதேபோன்று, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
- சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
சேலம்:
தமிழக கவர்னர் மாளிகை சார்பில் சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு 2024 குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் பாராட்டு சான்று மற்றும் ரொக்கம் பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிறுவனம் மற்றும் 3 தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன் ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன் 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு செயலர் அல்லது அதற்கு கீழ் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, அதே நிலையில் ஓய்வு பெற்றவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரைக்கலாம்.
விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பப் படி வத்தை வருகிற 31-ந்தே திக்குள் கவர்னரின் துணை செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செய லகம் சென்னை -600022 என்ற முக வரிக்கு அனு ப்ப வேண்டும்.
- வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 2023-2024 ம் ஆண்டில் தேர்ந்தெ டுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022- ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2023-2024 ம் ஆண்டில் தேர்ந்தெ டுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்ப ட்டு வருகிறது.
வேளாண்மை – உழவர் நலத்துறையில் பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன் பெறு வதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி என்ற செயலியினை துறை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் உழவன் செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப் பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் தங்கள் செல்சிபோனில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்றுப் பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- 10,178 குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது.
- இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு அரசு துறை களில் காலியாக உள்ள 10,178 குரூப்-4 பணியி டங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.
சேலம், நாமக்கல்
இந்த தேர்வை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ் ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பலர் எழுதினர். குறிப்பாக தமிழ்நாடு முழுவ தும் பல லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதையடுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது, சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்க ளுக்கு தரவரிசை அடிப்ப டையில் பணி நியமன கவுன்சிலிங் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
20-ந்தேதி தொடங்குகிறது
கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்ட 8,500 பேரின் பதிவெண் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணை யதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. கவுன்சிலிங் வரு கிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது.
- மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்களுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரி களில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது. மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்க ளுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம், நாமக்கல்
இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ள னர். விண்ணப்பங்கள் அனைத்தும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தர வரிசை பட்டியல் வெளி யிட்டு, விரைவில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி இயக்க கம் முடிவு செய்துள்ளது.
தரவரிசை பட்டியல்
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதி காரிகள் கூறுகையில், எம்.பி.பி.எஸ்- பி.டி.எஸ் படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்பட்டு, அடுத்த நாள் முதல் கவுன்சிலிங் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் துணை மருத்துவ படிப்பு களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளி யிடுவதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.
- கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
- இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது.
சேலம்:
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளி லும் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.
2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது. . அதில் 3½ வருடங்க ளுக்கு முன்னர் பள்ளி களுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் எந்திரங்கள் எத்தனை? அதில் எத்தனை இயங்குகின்றன? எத்தனை இயங்கவில்லை? என்ற விவரத்தை அவசரமாக கேட்டுள்ளது.
கேட்ட சில மணி நேரங்க ளிலே பயோமெட்ரிக் எந்திரங்களை அந்தந்த கல்வி அலுவலர்கள் பெற்று மாவட்ட அலுவலகங்களில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக முழு வதும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப் பட்டதால் தற்போது பள்ளி களில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஆசிரி யர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை சென்னையில் இருந்தபடி கண்காணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.






