என் மலர்tooltip icon

    சேலம்

    • சண்முகம் இனிமேல் அந்த பெண்ணுடன் பேசமாட்டேன் என்றும் ஒழுங்காக இருப்பதாக கூறியுள்ளார்.
    • கடந்த மாதம் 4-ம் தேதி சண்முகம் மற்றும் எதிர் வீட்டில் வசிக்கும் சந்தியாவை காணவில்லை.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமம் வெள்ளையம்பாளையம் பெருமாகவுண்டன்வலவு பகுதியைச் சேர்ந்தவர் பாட்டப்பன் மகன் சண்முகம் (வயது 35). இவருக்கு திருமணமாகி காந்திமதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    சண்முகம், தனது தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துக் கொண்டு வீட்டிலேயே பவர்லூம் தறி போட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், சண்முகத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் துரைசாமியின் மனைவி சந்தியாவுடன் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளனர்.

    இது குறித்து தந்தை பாட்டப்பனுக்கு தெரிந்து ஒரு மாதத்திற்கு முன்பு மகனை கண்டித்துள்ளார். அதற்கு சண்முகம் இனிமேல் அந்த பெண்ணுடன் பேசமாட்டேன் என்றும் ஒழுங்காக இருப்பதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி சண்முகம் மற்றும் எதிர் வீட்டில் வசிக்கும் சந்தியாவை காணவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்து அவர்களை கண்டுபிடிக முடியவில்லை.

    நேற்று சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து பாட்டப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பழனி சாமி ஆகியோர் வழக்குப்பதிந்து சண்முகம் மற்றும் சந்தியாவை தேடி வருகின்றனர். விசாரணையில், சந்தியாவிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. அதுபோல் சண்முகத்துக்கும் குழந்தைகள் உள்ளன.

    இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோர் விடிய விடிய காவிரி ஆற்றங்கரையில் தேடினர்.
    • குழந்தையை கடத்திச் சென்று காவிரி ஆற்றில் வீசிய லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி அருகே உள்ள வெள்ளாளபாளையம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி லோகநாதன் (வயது 28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (43) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகநாதனின் 4 வயது மகன் சிவகார்த்திக், நேற்று மாலை திடீரென காணாமல் போனார்.

    வீட்டின் அருகே விளையாடிய கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் குழந்தையின் பெற்றோருக்கு, லட்சுமணன் மீது சந்தேகம் ஏற்பட்டு தேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை அடுத்து போலீசார் குழந்தையும், புகாருக்குள்ளான லட்சுமணனையும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் லட்சுமணனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், முன் விரோதத்தின் காரணமாக, லோகநாதனின் குழந்தையை கடத்திச் சென்று வெள்ளாளபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் வீசியதாக லட்சுமணன் தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோர் விடிய விடிய காவிரி ஆற்றங்கரையில் தேடினர்.

    இந்நிலையில் இன்று காலை வெள்ளாளபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதயில் உள்ள ஒரு வாழை தோப்பு அருகே குழந்தை சிவக்கார்திக் மயங்கி கிடந்ததை கண்ட காவல்துறையினர், குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    மேலும் குழந்தையை கடத்திச் சென்று காவிரி ஆற்றில் வீசிய லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக 4 வயது குழந்தையை கடத்தி சென்று காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
    • போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின் ஐ.டி.யில் இருந்து குறும் தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து மூர்த்தி அந்த பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார்.

    பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்பு கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் மூர்த்தி தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

    3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5-ந்தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில், போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில், ரஷீதா பற்றி திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மயக்கி உள்ளார். சொகுசு கார், மோட்டார்சைக்கிளில் பியூட்டியாக போஸ் கொடுத்து அவரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும், அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார்.

    ரஷீதாவுடன் பழகியதும் மூர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மேலும் பணத்தை அவருக்கு வாரி வழங்கி உள்ளார். பணத்தை சுருட்டிக் கொண்டு ரஷீதா ஓட்டம் பிடித்து விட்டார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 20-ந்தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், எது கணவர் சத்ய கணேஷ், ரஷீதாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்கிறார் என கூறியுள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்தது.

    பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றி திருமணம் செய்து, நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த ரஷீதா, இதுவரை 8 திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமான ரஷீதாவின் போன் சுவிட்ச்-ஆப் ஆகியுள்ளது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் ? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்யாண மன்னன்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக கல்யாண ராணிகளின் அட்ட காசம் அதிகரித்து வருகிறது. 8 கல்யா ணம் செய்துநகை, பணத்துடன் இன்ஸ்டா கிராம் அழகி தலைமறைவாகி உள்ளார்.

    இதுகுறித்து தொளசம்பட்டி போலீசாரிடம் கேட்டபோது, புகார் கொடுத்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது அது போன்று எந்த ஒரு பெண்ணும் வந்து இங்கு தங்கவில்லை என கூறியுள்ளனர். முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம். புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்.ஐ. ஆர். பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளி ப்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் உள்பட 6 ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து பணம், நகை என அனைத்தையும் திருடிஏமாற்றினார் குறிப்பிடத்தக்கது.

    அப்பாவி பெண்களை ஏமாற்றி ஆண்கள் திருமணம் செய்து மோசடி செய்த காலம் போய் ரஷிதா போன்ற கல்யாண ராணிகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மோசடியில் இறங்கியிருப்பது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்க தொடங்கி உள்ளது. கல்யாணம் செய்பெது கொடுக்கும்வரை பெண்ணை பெற்ற பெற்றோர் மட்டுமல்ல ஆண்பி ள்ளைகளை பெற்றவர்களும் அலாட் ஆக இருக்கணும்போல....

    • அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • நேற்று 81.32 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 80.29 அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 400 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 152 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 198 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 81.32 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 80.29 அடியாக சரிந்துள்ளது.

    • தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்.
    • தமிழக அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ, கேம்பிரிட்ஜ் பாடத்திட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சேலம்:

    தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்.

    தமிழக அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ, கேம்பிரிட்ஜ் பாடத்திட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    புது ஏற்பாடு

    இந்த நிலையில் அதே நேரத்தில் மத்திய கல்வித்து றையின் நேரடி கட்டுப்பா ட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தமிழக இணைய கல்வி கழகம் என்ற தமிழ்நாடு விர்ச்சுவல் அகாடமி வழியே தமிழ் பாடங்களை ஆடியோ, வீடியோ வடிவில் மாணவர்களுக்கு கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் தமிழ் கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மேலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறையும் இப்பள்ளிகளுக்கு தமிழ் பாட புத்தகங்கள் வழங்க உள்ளன. இந்த பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை தனியாக நியமிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • வன உயிரினங்களை வளர்த்தல் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்தல் ஆகிய வற்றை ஒழுங்குபடுத்து வதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.
    • உயிரி னங்களை வளர்ப்பவர்களுக் கான உரிம விதிகளின்படி சென்னையில் உள்ள தலைமை வன உயிரின காப்பாளரிடம் உரிமம் பெற வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பாண்டா மற்றும் கரடி, சிற்றி னங்கள் நாய், ஓநாய், பூனை, குரங்கு, அணில், கிளிகள், ஆந்தை, புறா உள்ளிட்ட வன உயிரினங்களை வளர்த்தல் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்தல் ஆகிய வற்றை ஒழுங்குபடுத்து வதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.

    இந்த விதிகளின் கீழ் தமிழ்நாட்டில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அட்ட வணை 4-ல் (இணைப்பு-1) உள்ள உயிரினங்களை வளர்த்து வருபவர்கள் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்பவர்கள், புதிதாக இந்த தொழிலில் ஈடுபட விரும்புவோர் உயிரி னங்களை வளர்ப்பவர்களுக் கான உரிம விதிகளின்படி சென்னையில் உள்ள தலைமை வன உயிரின காப்பாளரிடம் உரிமம் பெற வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை நேரடியா கவோ அல்லது தலைமை வன உயிரின காப்பாளர் அலுவல கம், கன்னிகாபுரம் செக் போஸ்ட் அருகில், கிண்டி, சென்னை-32 என்ற முகவ ரிக்கு பதிவு அஞ்சல் மூலம் வருகிற 24-ம் தேதிக் குள் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பத்துடன் முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை நகல், டிஜி எப்டி (DGFT) உரிமச் சான்றி தழ் (வேண்டி இருப்பின்), தலைமை வன உயிரின காப்பாளரால் வழங்கப்பட்ட தடையின்மை சான்றிதழ் (வேண்டி இருப்பின்), தேவை யான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதற்கான புகைப்படங் கள் (கால்நடை மருத்துவ வசதி, தனிமைப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி வசதி மற்றும் அனுமதி தேவைப்ப டும் உயிரினங்களின் புகைப்ப டம்) ஆகியவற்றை சேர்த்து அனுப்ப வேண்டும். மேலும் உரிமம் பெறு வதற்காக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சென்னை என்ற பெயரில் ரூ.25 ஆயிரத்துக்கான வரைவோலை அல்லது மின் செலுத்துகை முறையில் செலுத்தியதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஹைடெக் லேப் என்னும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி -வினா நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஹைடெக் லேப் என்னும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி -வினா நடத்தப்பட உள்ளது. குறிப்பாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப்பள்ளிகளி லும் இன்று முதல் படிப்படி யாக 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டியை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி வரை போட்டிகள் நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டி தொடங்கியது. இதில் 6-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்காக உயர் தொழில் நுட்ப ஆய்வகம் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது

    நாளை 7-ம் வகுப்பு, வருகிற 12-ந்தேதி 8-ம் வகுப்பு, 13-ந்தேதி 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. இதில் வருகை தராத இந்த 4 வகுப்பு மாணவ- மாணவிகளுக்கும் வ 13-ந்தேதி வினாடி வினா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 17-ந்தேதி 10-ம் வகுப்பு, 18, 19-ந்தேதிகளில் பிளஸ்-1, 20,21-ந்தேதிகளில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டியின்போது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில் நுட்ப குறைபாடுகள், வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண, 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த வேண்டும்.

    உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் போட்டி நடத்துவதற்கான வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வழியாக தொடர்ச்சியாக வினாடி வினா, வளரறி மதிப்பீடுகள் நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டைகள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

    இளம்பிள்ளை:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டை கள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    இதனால் இளம்பிள்ளை யில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக்கணக்கில் வாகனங்கள் நகராதபடி, நெடுந்தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ஏற்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதி காரிகள், இன்று இளம்பிள்ளை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆறுமுகம் ( வயது 40). கட்டிடத் தொழிலாளியான இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணிகளை செய்து வருகிறார்.
    • மது அருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மொரசபட்டி கிராமம், வெள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் ஆறுமுகம் ( வயது 40). கட்டிடத் தொழிலாளியான இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணிகளை செய்து வருகிறார்.

    மது அருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு மது போதையில் இருந்த ஆறுமுகம் திருச்செங்கோட்டில் இருந்து மொரசப்பட்டி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது எடப்பாடி அடுத்த கள்ளுகடை பகுதியில் சினிமாவில் வருவதைப் போல் மின்னல் வேகத்தில் டயரில் புகை பறக்க இருசக்கர வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஓட்டி வந்த பைக் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இருசக்கர வானத்தில் இருந்த பெட்ரோல் முழுவதும் சிந்தி தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிய நிலையில், ஆறுமுகத்தின் மீதும் தீப்பற்றி எரிந்தது.

    அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பூலாம்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய ஆறுமுகத்தை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த தீக்காயம் அடைந்த ஆறுமுகம், முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

    நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் தீ விபத்தில் சிக்கிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    • சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளரிவெளி கிராமத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த மோகன் (வயது 55) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். அப்போது சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளில் சுமார் ரூ.3 கோடியே 15 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது.

    இது தொடர்பாக கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மோகன் மற்றும் சங்கத்தில் பணிபுரியும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சங்க செயலாளர் மோகன், மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார், நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து இது பற்றிய விசாரணை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமாரை கைது செய்வதற்காக உயர் போலீஸ் அதிகாரி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நள்ளிரவு 1.40 மணி அளவில் கள்ளப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. போலீசார் வருவதை அறிந்து முன்கூட்டியே தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து கைதான மோகன், மணி, ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
    • இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்க ணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகு தியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    மீனாவின் கணவர் வேலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மீனா தனது குழந்தைகளுடன் கச்சுப்பள்ளி கிராமம் எட்டிகுட்டைமேடு பகுதி யில் வசித்து வந்தார்.

    தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் உதவியாளராக வேலை பார்த்து வந்த மீனா, சமீபத்தில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கச்சுப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில், மகன் படிப்பிற்காக தாரமங்கலத் தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த மீனா, தனது மகளுடன் எட்டிக்குட்டை மேடு பகுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    மர்மசாவு

    இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து, மீனா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனா வின் உடலை பார்த்து உறவி னர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    சந்தேகம்

    பெண் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த மீனா தூக்கில் பிண மாக தொங்கியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீ சார், வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்க ளிடமும், அவரது உறவி னர்களிடமும் தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மீனா, ஏற்கனவே வேலை பார்த்து வந்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இது பற்றி போலீசார் கூறுகையில், மீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட பட்டாரா? என்ற உண்மை தெரிய வரும். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண், மர்ம மான முறையில் உயிரிழந் துள்ள சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.

    சேலம்:

    ரவுடிகள், தொடர் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.

    இந்த நிலையில், சேலம் சரகத்தில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் லாவண்யா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி, சேலம் மாந கரில் கடந்த 6 மாதத்தில் 63 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் குட்கா, லாட்டரி, பாலியல் வழக்கு, ரேஷன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு வழக்கு களில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ×