என் மலர்
சேலம்
- மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
- நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். அதன்படி கடந்த ஜூன் 12-ந்தேதி 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.
பின்னர் பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு குறைத்தும் அதிகரித்தும் திறந்து விடப்பட்டு வந்தது. அதன்படி நீர் திறப்பு கடந்த 2-ந்தேதி 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் 7-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் முதல் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. குறிப்பாக 200 கன அடிக்கும் கீழ் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலையில் 198 கன அடியில் இருந்து நீர்வரத்து இன்று காலையில் 161 கன அடியாக சரிந்துள்ளது.
நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. நேற்று 80.29 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 79.40 அடியாக சரிந்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர் இருப்பு 41.36 டி.எம்.சி.யாக உள்ளது.
- குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
- குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோவில் ஊராட்சி வேல கவுண்டனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய நாதன் (வயது 32). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஹரிஷ் என்ற 3 வயது ஆண்குழந்தை, ரக் ஷிதா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.
இவரது வீட்டிற்கு முன்பு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தண்ணீர் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் மின் மோட்டாரை பழுதுபார்க்க கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இவரது மனைவி திவ்யா வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக தண்ணீர் டேங்க் மூடியை அகற்றிவிட்டு தண்ணீரை எடுத்து துணி துவைத்து கொண்டு இருந்தார்.
அப்போது குழந்தை ஹரிஷ் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். இதை கவனிக்காத திவ்யா துணி துவைத்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.
அக்கம் பக்கம் தேடி பார்த்து விட்டு பின்பு தொட்டியில் பார்த்த போது குழந்தை தொட்டியில் கிடப்பதை பார்த்து கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் பகுதியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம்
- பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்கும் வகையில், தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து குறுவள மைய அளவில் பயிற்சி கூட்டம் நடக்கிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
- சண்முகத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் துரைசாமியின் மனைவி சந்தியாவுடன் கடந்த சில மாதங்களாக பழக்கம்
- இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமம் வெள்ளையம்பாளையம் பெருமாகவுண்டன்வலவு பகுதியைச் சேர்ந்தவர் பாட்டப்பன் மகன் சண்முகம் (வயது 35). இவருக்கு திருமணமாகி காந்திமதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
சண்முகம், தனது தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துக் கொண்டு வீட்டிலேயே பவர்லூம் தறி போட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், சண்முகத்திற்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் துரைசாமியின் மனைவி சந்தியாவுடன் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளனர்.
இது குறித்து தந்தை பாட்டப்பனுக்கு தெரிந்து ஒரு மாதத்திற்கு முன்பு மகனை கண்டித்துள்ளார். அதற்கு சண்முகம் இனிமேல் அந்த பெண்ணுடன் பேச மாட்டேன் என்றும் ஒழுங்காக இருப்பதாக கூறியுள்ளார்.இந்நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி சண்முகம் மற்றும் எதிர் வீட்டில் வசிக்கும் சந்தியாவை காணவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்து அவர்களை கண்டுபிடிக முடியவில்லை.
நேற்று சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து பாட்டப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிந்து சண்முகம் மற்றும் சந்தியாவை தேடி வருகின்றனர். விசாரணை யில், சந்தியாவிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. அதுபோல் சண்முகத்துக்கும் குழந்தைகள் உள்ளன.இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இவருக்கும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் மாணவியின் காதலன் நேற்று மதுரையில் அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றார். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. உடனே மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று மாணவியை சேலத்திற்கு அழைத்து வந்தனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியதும் மாணவி கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறினார். இதனை நம்பிய மாணவியின் பெற்றோர் கழிவறை அருகே காத்திருந்தனர் .
ஆனால் வெகு நேரமாகியும் மாணவி திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அங்கிருந்து மாணவி தப்பியதை அறிந்து கண்ணீர் விட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரண நடத்தி மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
- மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
- இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண் மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை கட்டி ட பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அருண் மகேஸ்வரன் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர்.
- இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் முள்ளுவாடிகேட் அருகே உள்ள டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி நிலைய அதிகாரிகள் டவுன் போலீசாருக்கும், சேலம் ெரயில்வே பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து ெரயில்வே போலீசார், டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணா பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் .
அழுகிய நிலையில் காணப்பட்ட நபர் வயது 45 இருக்கலாம் எனவும், அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
ரெயில் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது வாங்கி குடித்துவிட்டு மது போதையில் அவர் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்க ளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
எப்போதும் பரபரப்பாக காணக்கூடிய டவுன் ெரயில் நிலையத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
- கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.
காகாபாளையம்:
சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நகராட் சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர். இதனால் தினமும் இளம்பிள்ளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விஷயம் சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து அதிகாரிகள், அங்கு நேற்று ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவ டிக்கையை தொடங்கினர். ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் இளம்பிள்ளை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது.
- சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக்கான பூர்வாங்க நடவ டிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சேலம்:
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக் கான பூர்வாங்க நடவ டிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதியில் 188 ரேசன் கடைகளும், கிராம ஊராட்சிகளில் 1,093 ரேசன் கடைகளும், பேரூராட்சிகளில் 126 ரேசன் கடைகளும் மற்றும் நகராட்சிகளில் 134 ரேசன் கடைகளும் என மொத்தம் 1,541 ரேசன் கடைகள் உள்ளன.
500 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளுக்கு ஒரு பதிவு மையம், 600 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 2 பதிவு மையம், 1000 முதல் 1500 ரேசன் கார்டு உள்ள கடைகளில் 3 பதிவு மையம், 1500-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 4 பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. 2-வது கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை, 3-வது கட்ட முகாம் ஆகஸ்டு 17-ந்தேதி தொடங்கும். ரேசன் கார்டு தாரர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பப்பதிவு அரசின் சார்பில் மேற்ெகாள்ளப்படு வதால் கட்டணம் ஏதும் கிடை யாது. இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்.
நாளொன்றுக்கு 30 முதல் 50 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. வருவாய்த்துறை, கூட்டு றவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- சேலம் அழகாபுரம் எல்.ஐ.சி காலனியில் மன வளர்ச்சி குன்றிய காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு 9 வயது சிறுவன் பயிற்சி பெற்று வருகிறான்.
- சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பூசாரி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 40). இவர் சேலம் அழகாபுரம் எல்.ஐ.சி காலனியில் மன வளர்ச்சி குன்றிய காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு 9 வயது சிறுவன் பயிற்சி பெற்று வருகிறான்.
கடந்து 5-ம் தேதி சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. இது குறித்து அவரது தாய் காப்பகத்திற்கு சென்று கேட்டார். அதற்கு சிறுவன் விளையாடிய போது கீழே விழுந்து காயமடைந்ததாக காப்பக நிர்வாகிகள் கூறினர்.
இதில் சந்தேகம் அடைந்த சிறுவனின் தாய் காப்பகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் பயிற்சி நிலைய பிசி யோதெரபிஸ்ட் நங்கவள்ளி பாலாஜி (வயது 25), தாத காப்பட்டி ஜான்பீட்டர் என்ப வரின் மனைவி அந்தோணி சகாயம் (28) ஆகியோர் சிறுவனை கம்பால் அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவத்தை தடுக்காமல் அழகாபுரம் பாத்திமாநகரை சேர்ந்த பயிற்சியாளர் திருப்பதி (29) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து அழகா புரம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.
- இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர் குடியிருப்பு
சேலம் இரும்பாலை அருகே உள்ள மோகன் நகரில், இரும்பலைக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு இரும்பாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட தில், இந்த வீடுகளில் வசித்து வந்த ஊழியர்கள் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென் றுள்ளது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, போலீசார் கொள்ளை நடந்த வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னரே வீட்டிலிருந்து எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இரும்பாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயமணி (வயது 47). இவர் சீரகபாடி யில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரி யில் கேசியராக உள்ளார்.
- இதுபற்றி போலீசார் விசாரித்த தில் எட்டு மாணிக்கம்பட்டியை சேர்ந்த அரவிந்த் (38) என்ப வர் இருசக்கர வாக னத்தை திருடியது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடி வாணியம்பாடியை சேர்ந்த வர் ஜெயமணி (வயது 47). இவர் சீரகபாடி யில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரி யில் கேசியராக உள்ளார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 6-ந்தேதி இரவு கல்லூரியில் வாகனம் நிறுத்தம் இடத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். மறுநாள் பார்த்தபோது வாகனம் மாயமானது. இதுபற்றி அவர் ஆட்டை யாம்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை பார்த்தபோது இவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்த தில் எட்டு மாணிக்கம்பட்டியை சேர்ந்த அரவிந்த் (38) என்ப வர் இருசக்கர வாக னத்தை திருடியது தெரியவந்தது. அரவிந்த் திருவண்ணா மலை, நாமக்கல் மாவட்டங்க ளில் வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி யதும், பணியின்போது தொடர் குற்றச்சாட்டுகளின் பேரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப் பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்து இரு சக்கர வாகனத்தையும் பறி முதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






