

சேலம்:
சேலம் மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 46). இவர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு கல்லூரி படித்து வரும் மகளும், மகனும் உள்ளனர்.
கடந்த மாதம் 28-ந்தேதி காலை 2-வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.
இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது, அவர், சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்கு ஓடி சென்றபோது மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் மோதி பாப்பாத்தி கீழே விழுந்ததும், 2-வதாக வந்த பஸ்சிற்குள் ஓடிச்சென்று விழுந்து தற்கொலை செய்து ெகாள்ளும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.