என் மலர்
நீங்கள் தேடியது "2 killed in separate accidents"
- கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பள்ளப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறு கீழே விழுந்தார்.
- இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ண மூர்த்தியை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் செவ்வாய் பேட்டை நாகையன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 65). இவர் கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பள்ளப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறு கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ண மூர்த்தியை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ண மூர்த்தி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உள்ளிருந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் சூரமங்கலம் அருகே சேலத்தாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரஞ்சித் குமார் (32). இவர் ஒரு விபத்தில் அடிபட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






