search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை சீட்டு தவணை திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி
    X

    நகை சீட்டு தவணை திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி

    • சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன.
    • சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த 2 கடைகளிலும் நகைகள் வாங்குவதற்கு சுலப மாத தவணை ரூ.500 முதல் ரூ.2 லட்சம் வரை கட்டும் திட்டம், பழசுக்கு புதுசு திட்டம் மற்றும் தங்க முன்பதிவு திட்டங்கள் இருப்பதாகவும், முதிர்வு காலங்கள் முடிந்தவுடன் தங்க நகைகள் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    புகார்

    இந்த திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மரப்பரை தென்னமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 52) என்பவர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பிறகு முதலீடு ரூபாய், அல்லது அதற்கான தங்க நகை கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    தங்க நகை திட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி எனது பெயரில் முதல் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 9 மாதங்கள் ரூ.90 ஆயிரம் முத்ரா ஜூவல்லர்ஸ் கடை உரிமையாளர் முருகவேல் கணக்கில் செலுத்தினேன். மேலும் 2 மாதம் ரூ.20 ஆயிரம் நேரடியாக கட்டினேன்.

    மேலும் நான் திருச்செங்கோட்டில் வைத்திருந்த வீட்டு மனை நிலத்தை விற்று அந்த பணத்தை எஸ்.எம். கோல்டு ஸ்வர்ண விருட்ஷா தங்க முன்பதிவு திட்டத்தில் சேர்ந்து அதில் மாதம் மாதம் ரூ. 2 லட்சம் வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 20 லட்சம் கட்டினேன். தொடர்ந்து நெக்லஸ் செய்வதற்காக ரூ.10 லட்சம் கட்டினேன். ஆனால் முதலீடு செய்த பணத்தையும், நகையையும் திருப்பி தரவில்லை.

    இதனால் விஜயகுமார் ஆட்டையாம்பட்டியில் முத்ரா நகைக்கடையில் சென்றபோது, அந்த நகைக்கடை பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது கடை உரிமையாளர்கள் முருக வேல், அவரது மனைவி கலைவாணி இருவரும் உன்னைப்போல் பல பேர்க ளிடம் நகை சீட்டில் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டு ஓடி விட்டார்கள் என கூறி னார்கள். இதனால் நான், முருகவேல் வசிக்கும் அம்மாப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றேன். அங்கும் அவர் வீடு பூட்டியிருந்தது.

    பிறகு நான் தொலை பேசியில் அவர்களை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு பல இடங்களில் தேடி பார்த்தபோது அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. முருகவேல், கலை வாணி ஆகியோர் தலை மறைவாகி விட்டார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முத்ரா ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் முருக வேல் மற்றும் இவரது கலைவாணி ஆகியோர் மீது 120 (பி), 420 ஐ.பி.சி. மற்றும் டி.என்.பி.ஐ.டி. சட்ட பிரிவு 5 உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொது மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவ ணங்கள், அடையாள அட்டையுடன் சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×