என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.40 லட்சம் கடன் தருவதாக நிலத்தை எழுதி வாங்கி மோசடி
    X

    ரூ.40 லட்சம் கடன் தருவதாக நிலத்தை எழுதி வாங்கி மோசடி

    • சார்பதிவாளர் அலுவலகத்தில் ரவி 25 சென்ட் நிலம், 10 சென்ட் நிலம் தனித்தனியாக பத்திரம் முடித்து கொடுத்தார்.
    • சசிகுமார் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஜல கண்டாபுரம் அருகே உள்ள பச்சைகுப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் மோட்டார் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ரவி தனது தொழிலை பேம்படுத்த கடன் வாங்க திட்டமிட்டார். இதற்காக ஜலகண்டா புரத்தை சேர்ந்த கண்ணன் என்ற புரோக்கரி டம் தனது நிலத்தின் பத்திரத்தை கொடுத்தார்.

    இதனிடையே சேலம் கன்னங்குறிச்சி ஏரிக்காடு பதுகியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் ரவியின் செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரூ.40 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு தனது பெயரில் நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

    இதை தொடர்ந்து ஜல கண்டாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரவி 25 சென்ட் நிலம், 10 சென்ட் நிலம் தனித்தனியாக பத்திரம் முடித்து கொடுத்தார். இதையடுத்து சசிகுமார் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்,

    பின்னர் ரவியின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மட்டும் செலுத்தி யுள்ளார். மீதி பணம் குறித்து ரவி கேட்ட போது இப்போது மாலை நேரம் என்பதால் வங்கியில் பணம் எடுக்க வில்லை நாளைக்கு என் வீட்டுக்கு வாங்க தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    மறு நாள் ரவி சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள சசிகுமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை. உடனே அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அதற்கு அவர் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு வருமாறு கூறியுள்ளார்.இதையடுத்து அங்கு சென்ற ரவியும் அவரது மகன் முகுந்தனும், சசி குமாரை சந்தித்து பணம் கேட்டனர். இந்த வேளையில் சசிகுமாரின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து பணம் தரமுடியாது, பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி னர்.

    இது குறித்து ரவி ஜல கண்டபுரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் இதுபற்றி விசாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சசி குமாரை கைது செய்தனர். பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறை யில் அடைத்தனர்.

    இதனி டையே சசிகுமாருடன் சேர்ந்து ரவியை மிரட்டிய கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×