சிவதாபுரம், நெத்திமேடு மின் அலுவலகங்கள் இடம் மாற்றம்

சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும்.
சிவதாபுரம், நெத்திமேடு மின் அலுவலகங்கள் இடம் மாற்றம்
Published on

சேலம்:

சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பைகாடு பகுதியில் நெத்திமேடு புறநகர் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த 2 அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.

இந்த நிலையில் கந்தம்பட்டி சித்தர் கோவில் மெயின்ரோடு, கிருஷ்ணப்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் புதிதாக சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com