என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 10,673 விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை
- 1,23,022 பயனாளிகள் நில ஆவணம் இணைப்பு செய்துள்ளனர்.
- 14-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரி பார்ப்பு செய்வது
சேலம்:பி.எம்.கிசான் திட்டத்தின், ஏழை, எளிய விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை விவசாயி களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயி களுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கி ல் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொருத்து விவசாயிகளுக்கு 13 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.
தற்போது விவசாயிகள் 14-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரி பார்ப்பு செய்வது அவசியமாகும்.
மாவட்டத்தில் 1,23,022 பயனாளிகள் நில ஆவணம் இணைப்பு செய்துள்ளனர். இதில் 1,10,414 பயனாளிகள் மட்டுமே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத் துள்ளனர்.
98 ஆயிரத்து 523 பயனாளிகள் மட்டுமே நில ஆவணம் இணைப்பு, இ-கே.ஒய்.சி மற்றும் ஆதார் எண் இணைப்பு ஆகிய பணிகளை முடித் துள்ளனர். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 10 ஆயிரத்து 673 விவசாயிகள் இணைக்கவில்லை.
இது தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது 14-வது தவணை தொகையை பெறுவதற்கு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல், நில ஆவணங்கள் இணைத்தல் போன்ற பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாத விவசாயிகள், தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.
10,673 வங்கி கணக்–கு–கள்
சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 673 விவசாயிகள் ஆதார் எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் உள்ளது. 1, 302 விவசாயிகள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர். வருகிற 15-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) அனைத்து பணிகளையும் முடித்தால் மட்டுமே கிசான் திட்ட நிதி தொடர்ந்து விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






