சேலம் மனநல காப்பகத்தில் 9 வயது சிறுவனை கம்பால் அடித்து சித்ரவதை செய்த ஊழியர்கள்

சேலம் அழகாபுரம் எல்.ஐ.சி காலனியில் மன வளர்ச்சி குன்றிய காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு 9 வயது சிறுவன் பயிற்சி பெற்று வருகிறான். சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது.
சேலம் மனநல காப்பகத்தில் 9 வயது சிறுவனை கம்பால் அடித்து சித்ரவதை செய்த ஊழியர்கள்
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பூசாரி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 40). இவர் சேலம் அழகாபுரம் எல்.ஐ.சி காலனியில் மன வளர்ச்சி குன்றிய காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு 9 வயது சிறுவன் பயிற்சி பெற்று வருகிறான்.

கடந்து 5-ம் தேதி சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. இது குறித்து அவரது தாய் காப்பகத்திற்கு சென்று கேட்டார். அதற்கு சிறுவன் விளையாடிய போது கீழே விழுந்து காயமடைந்ததாக காப்பக நிர்வாகிகள் கூறினர்.

இதில் சந்தேகம் அடைந்த சிறுவனின் தாய் காப்பகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் பயிற்சி நிலைய பிசி யோதெரபிஸ்ட் நங்கவள்ளி பாலாஜி (வயது 25), தாத காப்பட்டி ஜான்பீட்டர் என்ப வரின் மனைவி அந்தோணி சகாயம் (28) ஆகியோர் சிறுவனை கம்பால் அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவத்தை தடுக்காமல் அழகாபுரம் பாத்திமாநகரை சேர்ந்த பயிற்சியாளர் திருப்பதி (29) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து அழகா புரம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com